Posts

UNEP-28

  அத்தியாயம்.28    சென்னை விமான நிலையம்.. தான் எங்கு இருக்கிறோம், சுற்றி என்ன நடக்கிறது என்பது எதையும் கருத்தில் கொள்ளாது, நினைவு முழுவதும் ஆரவ் மட்டும் நினைந்திருக்க, மனம் முழுவதும் அவனுக்கு எதுவும் நடந்திருக்க கூடாது என்ற வேண்டுதலோடு அந்த காத்திருப்பு அறையில் அமர்ந்திருந்தாள் ஆரவ்வின் அமிர்தாஸ்ரீ. நிச்சயம் இப்படி ஒரு சூழ்நிலை வரும் என்று அவள் கனவில் கூட நினைக்கவில்லை. இமை மூடினாலும், திறந்தாலும், அவனின் சிரித்த முகம் தான் அவளின் முன் நிழலாடியது. “எங்கே போனீங்க? நீங்க தானே என் பிடிமானம், நீங்க இல்லாமல் நான் மட்டும் எப்படி?  என மனதோடு மானசீகமாக அவனோடு பேசி கொண்டிருந்தவளுக்கு பதில் கூற தான் அவனில்லை. கண்களில் நீர் வழிய அதனை துடைக்க கூட தோன்றாது அவனை பற்றிய சிந்தனையில் உள்ளுக்குள் கதறி கொண்டு அமர்ந்திருந்தாள். ஆரவ்வுடனான இந்த ஒரு மாத கால வாழ்க்கை, அமிர்தாவிற்கு சொர்க்கம் என்றே சொல்லலாம். அத்தளவிற்கு மகிழ்ச்சி என்னும் கடலில் மூழ்கி முத்தெடுத்து கொண்டிருந்தாள். கனவில் கூட நினைத்து பார்க்காத அளவிற்கு அவள் வாழ்க்கை அவனுடன் அத்தனை ஆனந்தமாக சென்றது.  இந்த ஒரு மாத காலமும், ஆரவ் அவளுடன் தான் தன்