Posts

Showing posts from February, 2024

UNEP-13

  அத்தியாயம்…13                 பெரும் போர்களத்தையும், அதைவிட பெரும் அமைதியையும் ஒரு சேர கொண்டிருப்பதை போல் கலவையான உணர்வுகளில் தத்தளித்து கொண்டிருந்தாள் அமிர்தா. கொஞ்ச நாளாகவே ஆரவ்வின் மீது வந்த ஈர்ப்பை அவன் புரிந்து கொண்டானே என்ற நிம்மதியா? இல்லை, அவனுக்கும் தன் மீது காதல் உள்ளதே எப்படி? என்ற கலவரமா? இரண்டுமே அவளை ஒருசேர ஆட்டுவித்தது. அவளுக்கென்று இருந்த சிறிய மனதில், கொஞ்சமே கொஞ்சமாய் உருவான நம்பிக்கையில், அதனால் மலர்ந்த காதலை கூண்டிற்குள் அடைத்து, வலிக்க,வலிக்க மருந்தினை செலுத்தி, பின் விளைவுகளை கொஞ்சமும் யோசிக்காது, பரிசோதனை எலியாய், சோதனைக்குட்படுத்தப்பட்ட வலி இன்னமும் அவள் மனதில் ஒரு ஓரமாய் இருந்து கொண்டு தான் இருக்கிறது.  அதனால் தான், மரித்து போன மனதுடன் உயிருள்ள பிணம் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால், அதனை, உயிர்ப்பித்து உறவாக்கும் முயற்சியில் ஆரவ் இறங்கினால் எங்கனம் அவளால் ஏற்றுக்கொள்ள முடியும். மீண்டும் தம்மை பரிசோதனை எலியாக்கி விட்டால் என்ன செய்வது? மீண்டுமொரு ஏமாற்றத்தை தாங்கும் சக்தி உண்டா அவளுக்கு? அந்த பயம் கொஞ்சம் இல்லை நிறையவே கொட்டி கிடக்கிறது அவள் மனதில்.  ஆரவ்

UNEP-12

 அத்தியாயம்-12 அன்றைய நாளில் மீண்டும் விழாக்கோலம் பூண்டது நகரம். ஏஜே இயக்கத்தில், காதலை காவியமாக படைத்திட்ட திரைப்படம் இன்று வெளியாகிறது. ரசிகர்களுக்கோ ஏகபோக கொண்டாட்டம். அவனின் தனித்தன்மையான இயக்கத்திற்கு மற்றுமொரு சான்றாக இருந்த இத்திரைப்படம், வெளிவருவதற்கு முன்பே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றிருந்தது.  இன்று திரைப்படம் வெளிவர, இந்த முறை எங்கும் வெளியில் செல்லவில்லை அவன். வீட்டிலே தான் மக்களின் கருத்துக்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தான். மற்ற கலைஞர்கள், அவரவருக்கு ஏற்ற வகையில், அவர்களுக்கு வசதியான நேரத்தில் திரைப்படத்தை காண சென்றிருந்தனர். “ஆரவ், இன்னைக்கு படம் ரிலீஸ் ஆச்சே!! நீ தியேட்டர் போய் பார்கலையா? ஆடியன்ஸ் ரியாக்ஷன் என்னன்னு நேரில் பார்த்தா தானே திருப்தியா இருக்கும்” என பாலகிருஷ்ணன் கூற,  “எஸ் பா, பார்க்கணும் தான் ஆசையா இருக்கு. ஆனால் நான் இந்த படத்தை அமிர்தாவோட பார்க்க வெய்ட் பண்றேன் ப்பா” என மனதில் இருப்பதை மறையாமல் வெளிப்படுத்தினான். “அப்படி என்ன ஸ்பெஷல்? அமிர்தா கூட தான் பார்க்கணும்னு? என்ற தகப்பனின் கேள்விக்கு, “இந்த படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் தான் ப்பா. ஆல்மோஸ்ட்

UNEP-11

 அத்தியாயம்..11    ஆதவனின் கரங்களால், அழகிய பொற்றாமரை மலர்வது போல, அன்றைய நாளும் அழகாய் விடிந்தது. அதுவும், ஆரவ்விற்கோ அத்தனை துள்ளலுடன் விடிந்தது. காரணம் என்னவாக இருந்திட போகிறது, அமிர்தாவை காணபோகிறான். அவனின் உற்சாகத்திற்கு குறைச்சலும் உண்டோ?!! கால் காயம் முற்றிலும் குணமாகி இருந்தது அவனுக்கு. அதனால் இன்று அலுவலகம் செல்லலாம் என்று முடிவெடுத்து இருந்தான். படப்பிடிப்பிற்கு கூட உடனே வருவதாக கூறி இருக்க, ஆனால் தயாரிப்பாளரோ இன்னும் ஒரு வாரம் ஓய்வு எடுத்த பின்னரே வாருங்கள் என்று வற்புறுத்தி கூறிவிட்டதால் அங்கு செல்லவில்லை. அதுவுமில்லாது, ஒரு வார காலமாக அமிர்தாவிடம் அவனால் சரியாக பேச முடியவில்லை. அந்த சம்பவத்தின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாக தான் இருந்தது. நேரில் சந்தித்து பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றவே சீக்கிரமே அலுவலகம் கிளம்பி இருந்தான் ஆரவ்ஜெயந்தன். உற்சாகத்துடன் கிளம்பி வரும் மகனை கண்டு நிர்மலா, அவன் கன்னம் வழித்து, "என் பிள்ளை எப்போதும் இப்படி சிரிச்சிட்டே இருக்கணும்" என்று கூறியவரை புன்னகையுடன் பார்த்தவன், "கண்டிப்பா ம்மா. என் மனசுக்கு பிடிச்சவங்க எல்லாரும் கூடவே இ