Posts

Showing posts from January, 2024

UNEP-5

  அத்தியாயம்..5         நிசப்தமான இரவின் இருளில், மெல்லிய அலையோசைகள், அந்த இரவின் இருளை இனிமையாய் அலங்கரித்து, இதத்தை பரவ செய்ய, அதில் சுகமாய் முழ்கி இருந்தான் ஆரவ்ஜெயந்தன். ராமமூர்த்தி அழைத்ததன் பெயரில், விருப்பமே இல்லாமல் வந்தவன், முதலில் கண்டது, அந்த பிரம்மாண்டமான இல்லத்தை தான். இங்கு வந்த பின்பு தான் தெரிந்தது இந்த இடம் ராமமூர்த்தியின் கெஸ்ட் ஹவுஸ் என்பது. மரியாதை நிமித்தமாக அவருக்கு வணக்கத்தை தெரிவித்து விட்டு, தனித்து வர முயற்சிக்க, எங்கே அவர் விட்டால் தானே!!, தெரிந்தவர், தெரியாதவர் என ஒருவர் விடவில்லை அனைவருக்கும் அவனை அறிமுகப்படுத்தி, அவனை புகழ்ந்து பேச, அவனுக்கோ சலிப்பாக இருந்தது.  எப்படியோ அவரிடமிருந்து தப்பித்து தனித்து வந்தவன் இதோ இருளில் தெரிந்த அலையோசைகளை ரசிக்க ஆரம்பித்து விட்டான். கடவுளின் படைப்பில் எல்லாமே அழகு தான் அவனை பொறுத்தவரையில்.  நல்லவேளையாக ராமமூர்த்தி பார்ட்டியை வீட்டின் மொட்டை மாடியில் ஏற்பாடு செய்ந்திருந்தார். அது ஒன்று தான் அவனுக்கு இங்கு  கிடைத்த ஒரே ஆறுதலான விஷயம். கருப்பு காகிதத்தில் அள்ளி தெளிக்கும் வெள்ளி சரிகையாய், தெரிந்த கடலும், கடலலையும், அவனின் ம

UNEP-4

   அத்தியாயம்..4  பலகோடிகளை தன்னுள் விழுங்கிக் கொண்டு, அத்துணை பிரம்மாண்டமாகவும், கலைநயமாகவும் ஓங்கி உயர்ந்து காணப்பட ஏஜே இல்லத்தின் உள்ளே நுழைந்தது, அவனின் பிரத்தியேகமான அந்த நிஸான் ஜிடிஆர் வாகனம். அதிலிருந்து அட்டகாசமான புன்னகையுடன்,  இறங்கிய ஆரவ்ஜெயந்தன், வீட்டினுள் நுழைய முற்பட, அதற்குள், "கண்ணா, ஆரவ், இரு, இரு அங்கேயே இருப்பா" என சின்ன பிள்ளை போல் குரல் கொடுத்தப்படியே வாயிலுக்கு ஓடிவந்தார் அவனின் அன்னை நிர்மலா. அவரை கண்டதும் மலர்ந்து புன்னகைத்தவன்,  "ம்மா, ம்மா மெதுவா, மெதுவா வாங்க" எனக் கூற, அவரோ மூச்சிரைக்க, "நான் மெதுவா வந்தா அதுக்குள் நீ உள்ளே வந்துடுவ, அப்புறம் ஆரத்தியை நான் யாருக்கு எடுக்கிறது? அதுக்கு தான் ஓடி வரேன்" என விளக்கம் கூறியவரை கண்டு வாய்விட்டு சிரித்தான் ஆரவ்ஜெயந்தன்.  "அடியேய், லக்ஷ்மி, சீக்கிரம் ஆரத்தி தட்டு எடுத்துட்டு வா டி" நிர்மலா குரல் கொடுக்க, அவரும் "இதோ வந்துட்டேன் மா" என   அவரும் தட்டுடன் வந்தார். அதனை வாங்கியவர், மகனிற்கு மன நிறைவுடன் ஆலம் சுற்ற, ஆரவ்வோ, "ம்மா, நான் இப்போ என்ன பெரிய சாதனை பண்ணிட்ட

UNEP-3

  அத்தியாயம் ..3      அலைமகளும், ஆதவ தலைவனும் முத்தமிட்டு, கூடிகளித்து கொண்டிருந்த, இரவும் அல்லாது, பகலும் முடியாது, இருந்த ரம்மியமான இளமாலை பொழுது, அமிர்தாவின் மகிழ்ச்சியை மேலும் கூட்டி இருந்தது என்றே சொல்லலாம். அலைமகளின் அளவற்ற மகிழ்ச்சியின் வெளிப்பாடு, அவள் முகத்தில் ஈரகாற்றின் மூலம் வந்து மோத, அதில் சிலிர்த்து போனாள் அமிர்தா. அந்த கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த காரின் உள்ளே அமர்ந்திருந்தவளுக்கு இந்த பயணம் புதுவித அனுபவமாய் இருந்தது. இதுவரை காரில் பயணித்தது இல்லை அவள், இன்று தான் முதல் முறை பயணம் செய்கிறாள். இதுவரை கடற்கரையை கூட அவள் பார்த்ததில்லை, இன்று காண்கிறாள். அலைமகள், கரை காதலுனுடன் தொட்டு தொட்டு விளையாடி கொண்டிருந்ததை தூரத்தில் இருந்தே ரசித்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.  'அஞ்சலியையும் ஒருநாள் இங்கு கூட்டிட்டு வரணும்' என மனதோடு நினைத்து கொண்டவளுக்கு, அப்பொழுது தான் நினைவே வந்தது, தான் இன்று இல்லம் வர நேரமெடுக்கும் என்ற செய்தியை அஞ்சலிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே!! உடனே அலைபேசியின் வழியாக அஞ்சலிக்கு 'தாம் தாமதமாக வருவேன், எனக்காக காத்திராமல், நேரமே