Posts

Showing posts from March, 2024

UNEP-22

 அத்தியாயம்-22         ஆரவ் மருத்துவமனை வந்து சேரும் பொழுது நன்கு விடிந்து விட்டிருந்தது. மருத்துவமனை வளாகத்தின் உள்ளே வர, அங்கே இருந்த இருக்கையில், கைகளை கொண்டு தலையை தாங்கியப்படி உறங்கி கொண்டிருந்தான் ஹரி. அமிர்தாவின் அறையை திறந்து பார்க்க, அவளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். ஹரியின் அருகில் வந்த ஆரவ், “ஹரி”  என்று அழைக்க, அவனும் தூக்கத்தில் இருந்து சட்டென்று எழுந்து கொண்டான். “என்ன சார்? என்ன வேணும்? கொஞ்சம் கண் அசந்துட்டேன். அமிர்தாக்கு ஏதாவது வேணுமா?” என மளமளவென்று கேட்க, ஆரவ்வோ, “ஒன்னும் வேண்டாம் ஹரி. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு. நான் ஏதாவது தேவைன்னா கூப்பிறேன்” என்றான். “நான் மட்டுமா? நீங்களும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சார். ரெண்டு நாளா  நீங்களும் தூங்கலையே. கண்டிப்பா உங்களுக்கும் ரெஸ்ட் வேணும்” என ஹரி அக்கறையாக கூற, “இல்லை ஹரி, அமிர்தாவை பார்த்துக்கணும். நான் இங்கே இருக்கேன். நீ போ. என்னால் இப்போ வேறெந்த வேலையிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாது. நீதான் எல்லாம் மேனேஜ் பண்ணனும்” என்றதும் ஹரியும்,  “ஓகே சார். நான் எல்லாம் பார்த்துகிறேன். நீங்க அமிர்தாவை பார்த்துக்கோங்க”  என விடைபெற்

UNEP-21

  அத்தியாயம்..21               ஊடகவியாலாளர்களை சந்தித்து முடித்ததும், நேராக மீண்டும் மருத்துவமனை உள்ளே வந்த ஆரவ், அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு, சிகிச்சை நடக்கும் அறையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். மனதின் அழுத்தம் நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே இருக்க, வாய்விட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. இருந்தும் பொது இடம் கருதி அத்தனையையும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான். அவன் மனம் வெகுவாக தந்தையின் அரவணைப்பை தேடியது. இதுவரை அவன் எதற்கும் கண்ணீர் சிந்தியதே இல்லை. அந்தளவிற்கு அவனது தாயும், தந்தையும் சிறு விஷயத்திற்கு கூட வருத்தப்படாதவாறு பார்த்து பார்த்து வளர்த்து இருந்தனர். முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் கூட தந்தையின் முன் போய் நின்றால் போதும், அவனுக்கு தோள் கொடுத்து  நல்வழிப்படுத்துவார். இன்று கண்ணீர் சிந்துகிறான். தற்பொழுது மனதின் பாரம் இறங்க, தந்தையின் தோளை தான் எதிர்பார்த்தான் ஆரவ் ஜெயந்தன். “ஆரவ்.., ஆரவ் கண்ணா” என அவனது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காது, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் பாலகிருஷ்ணாவும், நிர்மலாவும். அவர்களை கண்டதும், துள்ளி எழுந்து ஓடியவன்,  “அப்பா..” என