UNEP-4

  

அத்தியாயம்..4

 பலகோடிகளை தன்னுள் விழுங்கிக் கொண்டு, அத்துணை பிரம்மாண்டமாகவும், கலைநயமாகவும் ஓங்கி உயர்ந்து காணப்பட ஏஜே இல்லத்தின் உள்ளே நுழைந்தது, அவனின் பிரத்தியேகமான அந்த நிஸான் ஜிடிஆர் வாகனம்.


அதிலிருந்து அட்டகாசமான புன்னகையுடன்,  இறங்கிய ஆரவ்ஜெயந்தன், வீட்டினுள் நுழைய முற்பட, அதற்குள்,


"கண்ணா, ஆரவ், இரு, இரு அங்கேயே இருப்பா"


என சின்ன பிள்ளை போல் குரல் கொடுத்தப்படியே வாயிலுக்கு ஓடிவந்தார் அவனின் அன்னை நிர்மலா. அவரை கண்டதும் மலர்ந்து புன்னகைத்தவன், 

"ம்மா, ம்மா மெதுவா, மெதுவா வாங்க"

எனக் கூற, அவரோ மூச்சிரைக்க,


"நான் மெதுவா வந்தா அதுக்குள் நீ உள்ளே வந்துடுவ, அப்புறம் ஆரத்தியை நான் யாருக்கு எடுக்கிறது? அதுக்கு தான் ஓடி வரேன்"

என விளக்கம் கூறியவரை கண்டு வாய்விட்டு சிரித்தான் ஆரவ்ஜெயந்தன். 


"அடியேய், லக்ஷ்மி, சீக்கிரம் ஆரத்தி தட்டு எடுத்துட்டு வா டி"

நிர்மலா குரல் கொடுக்க,


அவரும் "இதோ வந்துட்டேன் மா" என 

 அவரும் தட்டுடன் வந்தார். அதனை வாங்கியவர், மகனிற்கு மன நிறைவுடன் ஆலம் சுற்ற, ஆரவ்வோ,


"ம்மா, நான் இப்போ என்ன பெரிய சாதனை பண்ணிட்டேன்னு இப்படி அலப்பறை பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?" என கேலி பேச, நிர்மலாவோ,


"நீ சும்மா இரு டா, இன்னைக்கு ஊரே என் பிள்ளையை பத்தி தான் பேசிக்கிட்டு இருக்கு. அதில் எத்தனை நொள்ளை கண்ணு உன் மேலே பட்டுச்சோ!! அதெல்லாம் போக வேண்டாம் அதுக்கு தான். அம்மா சுத்துற வரை ஒன்னும் பேச கூடாது. மூச்"


என வாய் மீது விரல் வைத்து கூற, அவனும் சிரித்தப்படி நின்றான்.


ஆர்த்தி எடுத்து முடித்ததும் அவன் உள்ளே வர, அவனை எதிர்கொண்ட அவன் தந்தை பாலகிருஷ்ணன், அவனை கட்டிக்கொண்டு, 


"கங்கிராட்ஸ் ஆரவ். ஐ ரீயலி ப்ரௌட் ஆப் யூ"


என மனதார பாராட்டா, அவனும் விரிந்த புன்னகையுடன், தன் வலது கையை எடுத்து இடது மார்பில் வைத்து,


"தேங்க்யூ ப்பா. ஆனாலும், ஜஸ்ட் படம் ரீலீஸ் ஆனத்துக்கு போய் ரெண்டு பேரும், நான் என்னமோ அவார்ட் வாங்கின மாதிரி பில்டப் பண்றது தான் தாங்க முடியல. ஜஸ்ட் நான் டைரக்ட் பண்ண பிலிம் வெளிவந்து இருக்கு, அவ்வளவு தான் ப்பா"


என தன்னடக்கமாக கூறியவனை கண்டு எப்பொழுதும் போல் தற்பொழுதும் பெருமையாக உணர்ந்தனர் அந்த பெற்றோர்கள். மகனை அத்தனை பூரிப்புடன் பார்த்தனர் பாலகிருஷ்ணனும், நிர்மலாவும்.


“இன்னைக்கு டாப் ஆப் தி டவுன், உன்னோட பிலிம் தானே ஆரவ். நிறைய செலிப்ரடிஸ் படம் பார்த்துட்டு கால் பண்ணி பேசினாங்க. உனக்கு விஷ் சொல்ல சொன்னாங்க. எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா?”

என பாலகிருஷ்ணன் பெருமையாக கூற, ,


"எங்க மகன் எது செஞ்சாலும் எங்களுக்கு அவார்ட் வாங்கின மாதிரி தான். நாங்க இப்படி தான் சந்தோஷப்படுவோம், பாராட்டுவோம், கொண்டாடுவோம் அதையெல்லாம் நீ கேட்க கூடாது புரியுதா?"


என நிர்மலாவும் அவர் பங்கிற்கு மகிழ்ச்சியாய் பகிர்ந்து கொண்டார்.


“சரி போதும் போதும், என்னால் உங்களுக்கு சந்தோஷமும், பெருமையும் வருதுன்னா, அது தான் எனக்கு பெரிய சந்தோஷம்” என்ற ஆரவ், மேலும், 


"அம்மா, இன்னைக்கு நான் புல் பிரீ. எந்த புரோகிராமும் இல்லை. வீட்டில் தான் இருக்க போறேன். ஷூட்டிங்காக வேற வேற இடத்திற்கு போய், அங்கே கிடைக்கிற சாப்பாட்டை ஒன்னும் பாதியுமா சாப்பிட்டு நாக்கே செத்து போய் கிடக்கு. நான் இன்னைக்கு மெனு என்னன்னு சொல்வேனாம், உங்க கையால் சமைச்சு எனக்கு ஊட்டி விடுவீங்களாம் ஓகே"

என அன்னையிடம் கூற, அவரும்,


“என்ன வேணும்னு சொல்லு கண்ணா. வெஜ், நான் வெஜ் எதுவா இருந்தாலும் அம்மா வகைவகையா செஞ்சு அடுக்கிறேன்" 

என்றார் புன்னகையுடன்.


“நிறைய வரைட்டி எதுவும் வேண்டாம் ம்மா. இப்போதைக்கு, காலையில் சுட சுட இட்லியும் சாம்பாரும் செஞ்சு வைங்க, நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வரேன் என்று கூறியவன், திரும்பி,


“ஹரி..” என்று தன் காரியதரிசியை அழைத்தான்.


“ஹரி, இன்னைக்கு எனக்கு எந்த புரோகிராமும் புக் பண்ணாதே!  ஐ நீட் சம் ரெஸ்ட். ரொம்ப எமெர்ஜென்சினா மட்டும், என்கிட்ட கொடு, மத்தப்படி எதுவா இருந்தாலும் நீயே பேசி வச்சுடு"


என அவனது தொலைபேசியை ஹரியிடம் கொடுத்து, மேலும்,


"நீயும் ரெபிரேஷ் ஆகிட்டு, ரெஸ்ட் எடு ஹரி. என்கூடவே தானே நீயும் சுத்துற. நீயும் டயர்ட்டா தான் இருப்ப. அப்புறம் கார்ட்ஸ்ங்களை கூட சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க சொல்லு,"


என அன்பு கட்டளை விதித்தான்.  மீண்டும் அன்னையின் புறம் திரும்பியவன்,


"ம்மா, அவங்களுக்கு என்ன வேணுமோ கவனிங்க ம்மா"

என வேண்டுகோள் வைக்க,


"இதை நீ சொல்லனுமா கண்ணா, நான் பார்த்துகிறேன். நீ போய் ரெபிரேஷ் ஆகிட்டு வா"

என அவனை புரிந்த அன்னையாய் அனுப்பி வைத்தார்.


"சார், உங்க திங்ஸ், உங்க ரூமில் வச்சுட்டு போறேன் சார்"


என ஹரி, அவனுக்கு கொடுத்த பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்களை எடுத்து கொண்டு போக, அவனை முறைத்த ஆரவ்,


"என் திங்ஸ் நான் எடுத்துட்டு போக மாட்டேனா. ஒழுங்கா வச்சுட்டு போ ஹரி"

எனக் கண்டிப்புடன் கூற,.


"இல்லை சார், நா.. னே.." என கூற ஆரம்பித்தவன், ஆரவ்வின் முறைப்பில் அனைத்தையும் வைத்து விட்டு சென்று விட்டான்.


அவனின் நற்குணங்களில் இதுவும் ஒன்று. எத்தனை செல்வ செழிப்பு இருந்த போதும், பணசெருக்கு மட்டும் அவனிடம் இருந்ததே இல்லை. அவன் அன்னையும் தந்தையும் போதித்த நற்குணங்களில் இதுவும் ஒன்று. பணம் முக்கியமில்லை, குணம் முக்கியம் என்பதும், சக மனிதர்களை மனிதர்களாக பார்க்கும் பண்பும் என்பதும். இரண்டும் ஆரவ்விடம் அதிகமே!!


அதன்பின் தன்னை சுத்தப்படுத்தி கொண்டு ஆரவ் கீழே வர, உணவு மேஜையில் ஹரியும், அவனின் பாதுகாவலர்களும் உணவுண்டு கொண்டிருத்தனர். அவனை பார்த்ததும், அவர்கள் மரியாதை நிமித்தமாக பாதி உணவிலிருந்து எழுந்து கொள்ள முனைய,  ஆரவ்வோ,


"எல்லாரும் என்கிட்ட அடி வாங்க போறீங்க பாருங்க. ஒழுங்கா உட்கார்ந்து சாப்பிடுங்க"

என அதட்ட, நிர்மலாவும்,


"சாப்பிடும் பொழுது என்ன பழக்கம் இது?"


என செல்லமாய் கோபப்படவும், அனைவரும் அமர்ந்து மனநிறைவுடன் உணவுண்டனர். சோபாவில், அமர்ந்து கொண்ட ஆரவ், அருகில் அமர்ந்திருந்த தந்தையுடன் பேச ஆரம்பித்தான்.


"ராமமூர்த்தி என்ன சொன்னார் ஆரவ்?"

என பாலகிருஷ்ணன் கேட்க, 


"அவர் நிறைய சொன்னார் ப்பா. நீதான் டாப் மோஸ்ட் டைரக்டர், உன் திறமை யாருக்கும் வராது. இதுக்கு முன்னே டைரக்ட் பண்ணவங்க எல்லாம் ஒன்னுமே இல்லை. உன்னால் தான் நம்ம இண்டஸ்ட்ரிக்கே பெருமை. அடுத்த படமும் நாம சேர்ந்து பண்ணணும் அப்படி இப்படின்னு"

என பதில் கூறியவனின் உரையில் மிதமிஞ்சிய சலிப்பே காணப்பட்டது. அவனின் சலிப்பை கவனித்த பாலகிருஷ்ணன்,


"ஏன் ஆரவ்? அவர் கூட படம் பண்றதில் உனக்கு விருப்பம் இல்லையா?"

என கேட்க,


"அப்படின்னு இல்லைப்பா, ஏற்கனவே ரெண்டு படம் அவரோட ப்ரொடுக்ஷன்ல பண்ணிட்டேன். மறுபடியும் பண்ணனுமானு யோசனையா இருக்கு. போதுமே தோணுதுப்பா.


அது மட்டுமில்லாமல் அவரோட நோக்கம், படம் புரோடியூஸ் பண்றதில் மட்டும் இல்லாமல் என்கிட்ட வேற ஏதோ எதிர்பார்கிற போல தெரியுது. பட் அது என்னன்னு தான் எனக்கு தெரியல,"

என குழப்பமாக கூறியவனை கேள்வியாய் பார்த்தார் பாலகிருஷ்ணன்.


"என்ன சொல்ற ஆரவ்? புரியலையே, அவர் உன்னை வச்சு லாபம் பார்க்கிறார்னு எனக்கு புரியுது. அது உன்னோட கலை தர்மம். நீ டைரக்ட் பண்ற படம் நல்ல லாபத்தை கொடுக்கும்படி கொடுக்க வேண்டியது உன்னோட கடமை. அதை நீ செஞ்சுட்டு தான் இருக்கே. மறுபடியும் உன்னோட சேர்ந்து படம் பண்ணனும்னு சொன்னா, அது அவரோட லாபத்திற்காக தான் சொல்றார்னு புரியுது. ஆனால்,  அதை தவிர வேறென்ன எதிர்பார்கிறார்னு நினைக்கிற?"

என அவர் தெளிவுப்படுத்தி கொள்ள கேட்க, ஆரவ்வோ,


"அது என்னன்னு எனக்கும் சரியா தெரியல ப்பா. ஆனால் சீக்கிரம் தெரிஞ்சுடும்னு நினைக்கிறேன். நான் படம் டைரக்ட் பண்றது, அவர் புரோடியூஸ் பண்றது எல்லாம் ஓகே தான். ஆனாலும், எப்போ பாரு, அளவுக்கு மீறி என்னை புகழ்ந்து பேசிட்டே இருக்கார். நான் என்ன சொன்னாலும், எது செஞ்சாலும் சரி சரின்னு சொல்லுறார். எனக்கு இதெல்லாம் ஒருமாதிரி இருக்கு. அவருக்கு இந்த இண்ட்ஸ்ட்ரியில் வயசும், அனுபவமும் அதிகம். அந்த மரியாதைக்காக தான் எல்லாத்துக்கும் அமைதியா போயிறேன்"

என நிலைமையை பொறுமையாக விளக்கினான்.


"இந்த இண்டஸ்ட்ரியில் பொறுமை, நிதானம் தான் ரொம்ப முக்கியம் ஆரவ். யார் மனசும் சங்கடப்படுற மாதிரி நடந்துக்காதே. ஓரளவுக்கு எல்லாத்தையும் ரொம்ப ஆழமா யோசிக்காம, லைட் ஹார்டெட்டா  எடுத்துக்கோ. ரொம்ப எஸ்ட்ரீமா ஏதாவது நடந்துச்சுன்னா அப்போ ஏதாவது முடிவு பண்ணிக்கலாம். சரி அடுத்து யார் கூட படம் பண்ணலாம் இருக்க?"

என தந்தையாக, மட்டுமில்லாமல், அவனின் குருவாக அறிவுரை வழங்கினார் பாலகிருஷ்ணன்.


"ஏபிஆர் புரொட்க்ஷன், ரெண்டு படம் முன்னமே கேட்டுட்டு இருந்தாங்க. ஒன்வீக்ல அவங்களை மீட் பண்ணி ஸ்டோரி சொல்லலாம் இருக்கேன். ஓகேன்னா நெக்ஸ்ட் பிலிம் அவங்க கூட தான். இல்லையா, இருக்கவே இருக்கார் மிஸ்டர் பாலகிருஷ்ணன் அவர் தான் புரோடியூஸ் பண்ணனும். வேற வழிஇல்லை"

என சிரிப்புடன் ஆரவ் கூற, 


"கண்டிப்பா, பாலகிருஷ்ணன் ஆல்வேஸ் ரெடி. அவார்ட் வின்னிங் டைரக்டர் கூட சேர்ந்து படம் பண்ண கசக்குமா என்ன? எனக்கு ஓகே. பிரீ ஆனதும் கதை கேட்டுட்டு டிசைட் பண்ணிடுவோம்"


என அவரும் புன்னகையுடன் கூறினார். இந்த துறையில் ஆசானே அவனுக்கு அவன் தந்தை தானே!! இருவரும் நண்பர்கள் போல் பேசுவது என்பது எப்பொழுதும் நடப்பது தான். இருவரும் பேச ஆரம்பித்தால், நேரம் போவதே தெரியாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் தொழிலை பற்றி, தங்களை பற்றி என்று பேசிக்கொண்டே இருப்பர்.


அவர்களின் அருகில் இட்லி தட்டுடன் வந்த, நிர்மலா,


"அப்பாவும், பிள்ளையும் பேச ஆரம்பிச்சா போதுமே!! நேரம் போறதே தெரியாதே!!"

என கூறியவர், ஆரவ்விடம் திரும்பி,


"ஏன் டா? நேரம் என்ன ஆச்சு? சாப்பிட வேண்டாமா? அவர் கூட உட்கார்ந்து வாயடிச்சுட்டு இருக்க?"


என சத்தம் போட்டவர், அவனுக்கு இட்லியை ஊட்டி விட, அவனும் சிரிப்புடன் வாங்கி கொண்டு, திரும்பி உணவு மேஜையை பார்க்க, அவன் எண்ணம் புரிந்து, நிர்மலா,


"எல்லாரும் சாப்பிட்டாங்க கண்ணா. நல்ல சாப்பிட்டாங்க. உன்கிட்ட சொல்லிட்டு போக தான் இருந்தாங்க. நான் தான்  நீ அப்பா கிட்ட பேசிகிட்டு இருக்கவும், நீங்க போங்க நான் சொல்லிக்கிறேன் சொன்னேன். இப்போவாவது நீ சாப்பிறியா"

என்றதும் தான் அவன் நிறைவுடன்  உணவினை உண்டான்.


"நிர்மலா மா, நான் கூட இன்னும் சாப்பிடலை. எனக்கும் ஊட்டி விடுறீயா?"

என பாலகிருஷ்ணன் அவரிடம் வம்பு வளர்க்க, 


"நீங்க என்ன சின்ன பிள்ளையா? போய் எடுத்து வச்சு சாப்பிடுங்க"

என்றார் நிர்மலா.


"அப்போ இவன் மட்டும் என்ன சின்ன பிள்ளையா? கல்யாணம் பண்ணி வச்சா அடுத்த வருஷமே ரெண்டு பிள்ளைக்கு அப்பா ஆகிடுவான். அவனுக்கு மட்டும் ஊட்டி விடுற?!!"

அவர் ஆரவ்வை கேலி பேச,


"ப்பா, உங்க ரெண்டு பேருக்கு நடுவில் என்னை ஏன் இழுக்கிறீங்க? எங்கம்மா எனக்கு ஊட்டி விடுறாங்க. உங்களுக்கு வேணும்னா உங்க பொண்டாட்டியை கரெக்ட் பண்ணி வாங்கிக்கோங்க”

என ஆரவ்வும் அவரின் கேலியில் கலந்து கொண்டான்.


"அடபோடா, நான் என் பொண்டாட்டியை கரெக்ட் பண்ணதால தான் நீயே பொறந்த. எனக்கு முதலில் ஊட்டிட்டு தான் உனக்கு ஊட்டுவா பாரு"

என சளைக்காமல் பதில் கொடுத்தவர், மனைவியை பார்த்து கண்ணடிக்க, நிர்மலாவோ பதறி விட்டார்.


"பிள்ளையை வச்சுட்டு என்ன பண்றீங்க?" என அவர் வெட்கத்துடன் கோபப்பட, 


"நான் எதுவும் பார்க்கல பா" என ஆரவ் வேற கண்களை மூடி கேலி செய்ய, நிர்மலாவிற்கோ மிகுந்த கூச்சமாய் போய் விட்டது.


"ஐயோ!! ஏன் தான் இப்படி பண்றீங்களோ? பிடிங்க முதலில்"


என கணவனை முறைத்தப்படி, அவருக்கே முதலில் ஊட்டி விட, அதனை வாங்கியவர், பெருமிதத்துடன் "எப்படி" என்றார்

மகனிடம்.


 "ஹ்ம்ம் ஹ்ம்ம் நடக்கட்டும், நடக்கட்டும்” என ஆரவ் இருவரையும் கேலி பேச, சிரிப்பும் கலகலப்புமாக மூவரும் அந்த தருணத்தை மகிழ்வுடன் கழித்தனர்.


உண்டு முடித்தவன், அங்கேயே அன்னையின் மடியில் படுத்து கொள்ள, அவரும் அவனின் தலைகோதி கொடுக்க, அவரின் சுகமான வருடலில் அவன் ஆழந்த உறக்கத்திற்கு சென்று விட்டான். 


எத்தனையோ இரவுகள், அரை தூக்கமும், தூக்கமில்லாமலும், அல்லும், பகலும், உறையும் பனியிலும், சுட்டெரிக்கும் வெப்பதிலும் என அயராது உழைத்து தான், இப்படத்தையே இயக்கி இருந்தான். அவனின் இந்த ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பு தான் அவனின் இந்த உச்ச நிலைக்கு காரணம்.


தன்னுடைய உடல்நலத்திலும் அக்கறை கொள்ளாது, உழைக்கும் மகன், இளைப்பாற தன்மடி தேடி உறங்குவதை வாஞ்சையுடன் பார்த்த நிர்மலா, கணவனிடம்,


"பிள்ளை பாவம்ங்க, எவ்வளவு சோர்வா இருந்தா இப்படியே தூங்கி இருப்பான். ஏன் தான் இப்படி உடம்பை வருத்திக்கிறானோ?!! சீக்கிரமே அவனுக்கு ஒருபொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா தான் இவன் சரிப்பட்டு வருவான்"

என ஆதங்கப்பட, 


"எல்லாம் சரியாகும் நிர்மலா. அவன் விருப்பப்பட்டு தான் இதை செய்யுறான். விரும்பி செய்யுற எந்த விஷயமும் கஷ்டத்தை தராது. அவனுக்குன்னு  சொந்தமானவ இனிமேலா பொறக்க போறா? ஏற்கனவே பொறந்து வளர்ந்து இருப்பா!! அவனை வந்து சேர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா சேருவா! நீ வருத்தப்படாமல் இரு"

என ஆறுதல் கூறியவர் மகன் காலின் அருகில் அமர்ந்து கொண்டு, அவன் காலை எடுத்து தன் மேல் வைத்து கொண்டவர், அவனுக்கு கால் பிடித்து விட்டார்.


அதனை கண்டு பதறிய நிர்மலா, 

"ஏன்ங்க என்ன பண்ணனிட்டு இருக்கீங்க நீங்க?" என்றதும்,


"இதிலென்ன இருக்கு நிர்மலா, நீ அவனுக்கு தலைகோதி விடுற, நான் அவனுக்கு கால் பிடிச்சு விடுறேன். நீ பையன் பாசத்தில் பண்றேன்னா, அதே பாசம் எனக்கும் இருக்கு தானே. நான் என் பிள்ளைக்கு பண்றேன் அவ்வளவு தான்"

என விளக்கியவர் பேச்சில், மகனின் மீது அவரின் பாசம் நன்கு புரிந்தது நிர்மலாவிற்கு.


நன்றாக ஆழந்து உறக்கம் கொண்டிருந்த ஆரவ்விற்கு, இவர்களின் சம்பாஷனைகள் எதுவும் கேட்கவில்லை. மகனின் உறக்கத்தை கலைக்க மனமில்லாத இருவரும், அப்படியே தான் இருந்தனர்.


ஹரியும் பாதுகாவலர்களும் அவர்களுக்கென தன் வீட்டின் அருகிலே கட்டிக் கொடுத்திருந்த அறையில் ஓய்வெடுத்து கொண்டிருக்க, அந்நேரம் ஏஜேவின் அலைபேசி சிணுங்கியது. ராமமூர்த்தி தான் அழைத்து இருந்தார். ஹரி அதனை எடுக்காமல் இருக்க, உடனே அவர் ஹரிக்கு அழைப்பு விடுத்தார். மீண்டும் மீண்டும் அழைப்பை தவிர்க்க முடியாது, ஹரி அவரின் அழைப்பை ஏற்றதும்,


"ஹரி, ஆரவ் எங்கே? போன் போட்டா எடுக்க மாட்டேன்கிறாங்க"

என சற்று குரலை உயர்த்தி கேட்க,

" சார், ஆரவ் சார் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கார். எந்த போன் காலும் எடுக்க வேண்டாம் சொல்லிட்டு, என்கிட்ட தான் அவர் போன் கொடுத்து இருக்கார்."

என்ற அவனின் விளக்கத்தில் அவரோ எரிச்சலடைந்தார். 


"ஒஹ்ஹ். ஆரவ் போன் வச்சுட்டு இருந்தா, நீயே ஆரவ்னு நினைப்போ உனக்கு.  உன்னை சம்பளம் கொடுத்து அவனுக்கு பிஏவாய் வச்சது, படுத்து தூங்க இல்லை, வேலை பார்க்க. அவன் ரெஸ்ட் எடுத்தாலும், நீ எடுக்க கூடாது. பிஏ வேலையை பார்த்துட்டு இருக்கணும். எத்தனை போன் பண்றேன். ஒன்னு கூட அட்டெண்ட் பண்ணி பேசாமல், அப்படி என்ன தூக்கம் வேண்டி கிடக்கு உனக்கு"

என சரமாரியாக திட்ட, ஹரியோ,


"சார், ஆரவ் சார் தான் ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னார். அதனால் தான்…."

என அவன் கூறுவதை எதையும் அவர் காதில் வாங்குவதாக தெரியவில்லை.


“அவனை தான் முதலில் சொல்லணும், வேலைக்காரங்களை, வேலைக்காரங்க மாதிரி நடத்தனும். அதை விட்டுட்டு, சரிக்கு சமமா நடத்துறான் பாரு, அதான் உனக்கெல்லாம் திமிர் கூடி போய் கிடக்கு. சரி சரி அப்புறம் பேசிக்கிறேன் உன் விஷயத்தை, முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும். ஆரவ் கிட்ட போனை கொடு" என்றதும்,  ஹரியோ,


"சார், அவர் எந்த காலும் இன்னைக்கு பேச முடியாது. எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம் சொன்னார் சார்"

என பொறுமையாகவே எடுத்து கூறினான்.


“உன் கிட்ட நான் ஒன்னும் பெர்மிஷன் கேட்கலை. கொடுன்னு ஆர்டர் போட்டேன். இப்போ கொடுக்க போறீயா? இல்லை நேரில் வரட்டுமா?


என இன்னும் அதிக சத்தத்துடன் அவர் கத்த, என்ன செய்வது என்று புரியாது, ஹரி அலைபேசியை எடுத்து கொண்டு ஆரவ்வை தேடி வர, அங்கே, அன்னையின் மடியில் உறங்கி கொண்டிருந்த ஆரவ் தென்பட்டான்.


எப்படி அவனை எழுப்புவது என்று புரியாது, அவன் திருதிருத்து கொண்டிருக்க, அவனை கவனித்த பாலகிருஷ்ணன்,


"என்ன ஹரி? என்ன விஷயம்?"

என்று கேட்டார்.


"சார், ராமமூர்த்தி சார் லைன்ல் இருக்கார். ஆரவ் சார் கிட்ட பேசணும் சொல்றார்"

என தயங்கி தயங்கி கூற,


"சரி கொடு நான் பேசுறேன்"

என அவன் கையிலிருந்து வாங்கி பேச ஆரம்பித்தார்.


"ஹெலோ, பாலகிருஷ்ணன் ஸ்பீகிங்" என்றதும்

எதிர்முனையில் ராமமூர்த்தி,


"ஹெலோ பாலகிருஷ்ணன் சார், எப்படி இருக்கீங்க?"

என்றார் உற்சாக குரலில்.


"எஸ், ராமமூர்த்தி சார். பைன். நீங்க எப்படி இருக்கீங்க. வீட்டில் எல்லாரும் சௌவுகியமா? தென் கங்கிராட்ஸ், மறுபடியும் உங்களோட படம் வெற்றி பெற்றத்துக்கு"

என பாலகிருஷ்ணன் பாராட்ட,


“தேங்க்யூ சார். தேங்க்யூ வீட்டில் எல்லாரும் நலம். உங்க பையன் இல்லைன்னா இந்த வெற்றிலாம் எனக்கேது? அவரால் தான் எல்லாமே!!  தங்கமாய் பிள்ளைய வளர்த்து இருக்கீங்க, என்னே அறிவு!! என்னே அடக்கம்!! இப்படியொரு பிள்ளையை பெத்து சினிமா உலகிற்கு கொடுத்ததற்கு நாங்க நன்றிக்கடன் பட்டிருக்கோம் சார்"

என சிலாகித்து பேச,பாலகிருஷ்ணனுக்கோ ஒருமாதிரியாக இருந்தது.


"நீங்க ரொம்ப புகழுறீங்க ராமமூர்த்தி. ஆரவ் எந்த விஷயத்தையும் முழு ஈடுபாட்டோட செய்வான். அதுக்கான பலன் தான் கிடைச்சு இருக்கு. சொல்லுங்க என்ன விஷயமா கூப்பிட்டிங்க?"

என அவர் பேச்சை மாற்ற,


"ஹான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாருங்க. ஆரவ் இல்லையா? அவர் கிட்ட பேச தான் கூப்பிட்டேன்"

என்றார் ராமமூர்த்தி பவ்யமாக.


"ஓஹ்.. அவன் ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கான் ராமமூர்த்தி. ரொம்ப முக்கியமான விஷயமா?"

என பாலகிருஷ்ணன் கேட்க,


"அப்படியா.. ஹரி என்கிட்ட சொல்லவே இல்லை பாருங்க. ஆரவ் ரெஸ்ட் எடுக்கிறார் சொல்லி இருந்தா அப்பவே கால் கட் பண்ணி இருப்பேன். ஐ அம் எஸ்ட்ரீமிலி ஸாரி பாலகிருஷ்ணன் சார். ஆரவ்வை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். எப்போ பிரீயா இருக்காங்களோ அப்ப கால் பண்ண சொல்லுங்க போதும்"

என்றார் மிகவும் பணிவுடன்.


“ஓகே ராமமூர்த்தி சார்” அவர் கூறி முடிக்கவும், பேசுக் குரல் கேட்டு ஆரவ் தூக்கம் கலையவும் சரியாய் இருந்தது. எழுந்ததும் தந்தை தன்னுடைய அலைபேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது தெரிய,


"யாரு ப்பா போனில்?” என்றான் ஆரவ்.


அவன் குரல் எதிர்முனையில் இருந்த ராமமூர்த்திக்கு கேட்டு விட்டது. அவர் தான் இந்தப்பக்கம் காதுகளை தீட்டி வைத்து இருக்கிறாரே!! கேட்காமல் இருக்குமா?


"ஆரவ் எழுந்துட்டார் போலையே!!" என ராமமூர்த்தி கேட்கவும், வேறு வழி இல்லாமல் பாலகிருஷ்ணன்,


"ராமமூர்த்தி சார் தான் ஆரவ் லைன்ல இருக்கார். உன்கிட்ட தான் பேசணும் சொன்னார்" என அலைபேசியை அவனிடம் நீட்டினார்.

அதனை வாங்கியவன், 

"சொல்லுங்க ராமமூர்த்தி சார்," என்றான் மரியாதை நிமித்தமாக.


"ஸாரி ஆரவ், நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கிறதா ஹரி சொல்லவே இல்லை. சொல்லியிருந்தா நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணி இருக்கேவே மாட்டேன்,"


என பவ்வியமாக கூறியவரை கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் ஆரவ். அவனுக்கு தெரியாதா? ஹரியை பற்றியும், அவரை பற்றியும்.


"இட்ஸ் ஓகே சார். நீங்க எதுக்கு கூப்பிட்டிங்க சொல்லுங்க" என்றவனுக்கு,


“ஆரவ், நம்ம படம் ரிலீஸ் ஆகி சக்ஸஸ்புல்லா போயிட்டு இருக்குல, அதுக்கு ஈவினிங் ஒரு சின்ன பார்ட்டி அரேஞ் பண்ணி இருக்கேன். கண்டிப்பா நீங்க வரனும்ன்னு ஆசைப்படுறேன் ஆரவ். அதான் இன்வைட் பண்ண கால் பண்ணேன். ஈவினிங் வேற ஏதாவது புரோகிராம் இருக்கா?"

என அழைத்ததின் நோக்கத்தை கூற, அவனுக்கோ ஐயோடா என்றிருந்தது.


"சார், இன்னைக்கு தான் படமே ரிலீஸ் ஆகி இருக்கு. அதுக்குள் எதுக்கு பார்ட்டிலாம்? ஒரு அன்ட்ரேட் டேஸ் ஓடினா, அப்போ செலிப்ரேட் பண்ணா சரியா இருக்கும். இப்பவே ஏன் சார்?"

என அதிருப்தியாக கூற, 


"கண்டிப்பா அன்ட்ரேட் டேஸ் ஓடும் ஆரவ். இதில் சந்தேகம் வேறையா?  இது என்னோட ஹாப்பினஸ்காக. முக்கியமா உங்களை கௌரவப்படுத்த தான் அரேஞ் பண்ணி இருக்கேன். நிறைய பேரை இன்வைட் பண்ணலை. சும்மா முக்கியமான செலிப்ரட்டிவ்ஸ் தான் வருவாங்க. கண்டிப்பா நீங்களும் கலந்துக்கணும்."

என அவர் கெஞ்சி கேட்க, அதனை அவனால் மறுக்க முடியவில்லை. விருப்பமே இல்லாமல்,


"ஓகே சார் வரேன். லோகேஷன் ஹரிக்கு அனுப்பிடுங்க" என்றதும்,


"ஒஹ் ரியலி, தேங்க்யூ, தேங்க்யூ ஆரவ்"

என்றார் ராமமூர்த்தி ஆரவாரமாக.


'எப்பா முடியல இவரோட' என்று உள்ளுக்குள் சலித்து கொண்ட ஆரவ், அலைபேசியை அணைத்து விட்டு, அங்கேயே மீண்டும் இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டான். 


"என்னப்பா? என்னவாம் ராமமூர்த்திக்கு?" என பாலகிருஷ்ணன் கேட்கவும், 


“ஈவினிங் எதோ பார்ட்டி அரேஞ் பண்ணி இருக்காராம், அதுக்கு  இன்வைட் பண்ணி இருக்கார் ப்பா" என்றான் சோர்வாக.


“முடியலைன்னா போகாமல் இருந்துடு ஆரவ்"  என நிர்மலா மகனின் சோர்வான முகத்தை கண்டு கூற,”


"இல்லைம்மா வரேன் சொல்லிட்டேன். சும்மா ஜஸ்ட் மரியாதைக்காக போய்ட்டு வந்துறேன். ஆனால் டின்னர் வீட்டில் தான் வந்து சாப்பிடுவேன். வெயிட் பண்ணுங்க எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்"

என கூறியவன் கிளம்ப ஆயத்தமானான்.


விருப்பமே இல்லாமல் தயாரானவன், இலகுவான டீஷார்ட், ஜீன்ஸ் அணிந்து கொண்டு தாய், தந்தையிடம் கூறிவிட்டு புறப்பட்டான்.


அவனுடன் ஹரியும் இணைந்து கொள்ள, அவனின் பாதுகாவலர்களும் அவன் பின்னே தனி வாகனத்தில்  பின்தொடர்ந்தனர்.


"ஹரி, பார்ட்டி எங்கே நடக்குது?"

என ஆரவ் கேட்க, ஹரியோ,


"அவர் அனுப்பி இருக்கிற லோகேஷன், ஈசிஆர் தாண்டி பாண்டிச்சேரி போற வழியில் காட்டுது சார்" என்றான்.


"ஒஹ் நோ, அவ்வளவு தூரமா? அவருக்கு இங்கே எங்கேயும் இடமே கிடைக்கலையா? ச்சைக். ரெஸ்ட் எடுக்கலாம் பார்த்தேன் ஹரி. இப்போ எதுக்கு ராமமூர்த்தி சார் இவ்வளவு தொல்லை பண்றார்னே தெரியல" என சலித்து கொண்டவன், இருக்கையில் சாய்ந்து கண் மூடி கொண்டான்.


குறிப்பிட்ட இடத்திற்கு சென்றதும், ராமமூர்த்தியும் அவர் குடும்பமும், அவனை ஆர்ப்பாட்டமாக வரவேற்க, அவனுக்கோ மிதமிஞ்சிய சலிப்பே ஏற்பட்டது. எதிலும் அவனால் ஒன்ற முடியவில்லை.


வந்திருந்தவர்கள் அனைவரிடமும், ராமமூர்த்தி அவனை முன்னிறுத்தி சிலாகித்தும், அதிகப்படியாக பாராட்டியும் பேச, அவனால் அங்கு இருக்கவே முடியவில்லை. எப்பொழுதுடா அங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தது.


ஒருவழியாக ராமமூர்த்தியை சமாளித்து விட்டு அங்கிருந்து கிளம்புவதற்குள் அவனுக்கோ போதும் போதும் என்றானது. அந்த இடத்தை விட்டு வெளியே வந்ததும் தான் அவனால் சீராக சுவாசிக்கவே முடிந்தது. 


திரும்ப இல்லம் செல்ல, காரில் ஏறியவன்,


"ஹரி, ஐ நீட் சம் ரிலாக்ஸ். சோ நானே ட்ரைவ் பண்றேன். நீ கார்ட்ஸ் கூட வா" எனக் கூறி காரை கிளப்பினான்.


அவன் மட்டுமே தனியே இது போன்று இரவின் இனிமையில் பயணம் செய்வது என்பது மிகவும் பிடித்தம். அதுவும் இன்று ராமமூர்த்தி நடந்து கொண்ட விதம், அவனை மிகவும் அழுத்தம் அடைய செய்திருக்க, அதனை போக்கவே இந்த தனிமையான பயணத்தை மேற்கொண்டான்.


காரில் பிடித்தமான வரிகளை இசைதட்டில் கேட்டப்படியே ஆரவ்,  வாகனத்தை செலுத்தி கொண்டு வர, அவன் பின்னே சீரான இடைவெளியில் அவனின் பாதுகாவலர்கள் தொடந்தனர்.


இரவு நேரம் என்பதால் சாலைகள் அனைத்தும் வெறிசோடி கிடக்க, சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தவன், ஒரு திருப்பத்தில் காரை திருப்பும் சமயம், சற்றும் எதிர்பாராமல், எதிரே வந்தவர் மீது மோதி விட்டான். 


மோதிய வேகத்தில் அந்த நபரும் கிழே விழுந்து விட, 

"அச்சோ,"  என்று சட்டென்று பிரேக் போடு காரை நிறுத்தியவன், வேகமாக இறங்கி வந்து பார்க்க, இருட்டில் கீழே விழுந்தவர் முகம் சரியாக தெரியவில்லை ஆரவிற்கு. 


விழுந்தவர் அருகில் அமர்ந்தவன் காரின் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் அவரை ஆராய, உற்று நோக்கிய பின்பு தான் தெரிந்தது அடிபட்டு கிடந்தது ஒரு பெண் என்பது.


பெண்ணெல்லாம்

பெண் போலே இருக்க

நீ மட்டும் என் நெஞ்சை மயக்க

பூமிக்கு வந்தாயே தேவதை போலவே!!


சரியாய் அவன் மனதை பிரதிபலித்தது போலவே அவன் பின்னே பாடல் ஒலித்தது அமிர்தாவின் வாஞ்சை முகத்தை கண்டதும்!!


இமைகள் இமைக்க மறந்த 

நொடி 

இமை குடைக்குள் 

நிறைந்து நின்றவளால் 

தோன்றியது

இனி இமைக்கவே கூடாதென!! 



பிடிக்கும்…




























Comments

  1. mayakkum malai pozhuthu
    mayakkam nerunga kalaiyavan
    mayanki vittan
    mayanki kitakkum
    maathiniyai kandu
    mayakkathin vazhi manam sella
    manam sonnathu kadhal kili ival enru .........................

    love you yakkka keep rocking

    ReplyDelete
    Replies
    1. kavitahi nalla iruku thamizhil eahuthi kodutha innum nalla irukum thank you thank you freeya iruntha call pannu

      Delete
    2. nan sysem la type panna kka

      Delete

Post a Comment