UNEP-9

 அத்தியாயம்..9



அமிர்தாவின் ஒவ்வொரு அசைவையும் உள்வாங்கி உள்ளுக்குள்ளே ரசிப்பதை தான் முதன்மை என்பது போல அவளையே தான் ரசித்து கொண்டிருந்தான் ஆரவ். 


மன்னிப்பை யாசித்து நின்றவளிடம், தன் ரசனையை மறைத்து,


“அமிர்தா, லேட்டா வந்தது தப்பு. நீங்க இன்னைக்கு வீட்டுக்கு போங்க, நாளைக்கு டைமக்கு வாங்க”

திட்டவட்டமாக கூற, 


“சார்.., நான்”,


“நோ மோர் எக்ஸ்குயூஸ் அமிர்தா. வீட்டுக்கு கிளம்புங்கனா, கிளம்புங்க. தட்ஸ் இட்”

என முடிவாக கூறியவன், 


“மாணிக்கம்” என அங்கிருக்கும் வாட்ச்மேனை அழைத்து, அவரிடம் ஏதோ சொல்ல, அவரும் அவசரமாக வெளியே சென்று, வரும் பொழுது குடையுடன் வந்தார்.


அதனை அமிர்தாவிடம் கொடுத்தவன், 


“இந்தாங்க, நனையாமல் வீட்டுக்கு போங்க,”

என கூறியவன், ஹரியின் புறம் திரும்பி,


“ஹரி அவங்களுக்கு கேப் புக் பண்ணி கொடு”

என்றவன் உள்ளே சென்று விட, அமிர்தா தான் செல்லும் அவனையே கவலையுடன் பார்த்தாள்.


இத்தனை நேரம் அவள் வருகைக்காக காத்திருந்தவன், இப்படி திடீரென்று அவள் மீது எதற்காக கோபப்படுகிறான் என்று புரியாது குழம்பி நின்றான் ஹரி.


"ஹரி சார், நான் எப்பவும் சீக்கிரம் தான் வருவேன் இன்னைக்கு தான் லேட் ஆகிடுச்சு. நீங்களாவது சார் கிட்ட சொல்லுங்களேன்"

என் மன்றாடுபவளிடம் என்ன சொல்வது என்பது புரியாது நிற்க,

அதற்குள் அவளுக்காக  ஏற்பாடு செய்திருந்த வாகனம் வந்து விட்டிருந்தது.


"அமிர்தா, ஆரவ் சாரை பத்தி எனக்கு நல்லா தெரியும் எது செஞ்சாலும் அது அடுத்தவங்க நலனை முன்ன வச்சு தான் இருக்கும். இதுவும் அப்படி தான். இப்போ நீங்க கிளம்புங்க. வீட்டிக்கு போய் ரெஸ்ட் எடுங்க. எதை பத்தியும் வொரி பண்ணிக்காதீங்க"

அவளுக்கு ஆறுதல் கூறி விடைகொடுத்தான் ஹரி.


அவளுக்கு கூறிவிட்டான் தான், இருந்தாலும் மனதில் ஒரு ஓரமாய் ஆரவ் செய்தது அதிகப்படியோ என்று தோன்றாமல் இல்லை.


ஆர்வ இருக்கும் அறைக்குள் நுழைந்த ஹரியை எதிர்கொண்ட ஆரவ்,


“ஹரி, கிளம்பலாம். எல்லாரையும் ஷூட்டிங் ஸ்பாட் வர சொல்லிடு. அசிட்டேன்ட் டைரக்டர்ஸ் கிட்ட, டையலாக் பேப்பர்ஸை ஆர்ட்டிஸ்ட் கிட்ட  கொடுத்து பிரீபேர் பண்ண சொல்லிடு,”


என மளமளவென்று கட்டளையிட்டவன், கிளம்ப தயாராக, ஹரியிடமோ, எந்தவித அசைவும் இல்லை. அவனையே தான், யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான்.


“என்ன ஹரி? அப்படி பார்க்கிற?”


“ஒன்னுமில்லை சார்.” என தயங்கியவனுக்கு,


“நான் சொல்லட்டுமா? அமிர்தா எப்போ வருவாங்கனு காத்திட்டு இருந்தவன், அவங்க வந்ததும் கோபமா பேசி அனுப்பிட்டேன். அது ஏன் தானே உன் மண்டைக்குள் ஓடுது?


உண்மை தான், அவங்களுக்காக காத்திருந்தேன் தான். ஆனால் பார்த்தல எப்படி வந்து நின்னாங்கன்னு. அவ்வளவு மழையில் நனைஞ்சுட்டே வராங்க. அந்த ஈரத்தோடே அப்படியே தான் வேலை பார்த்து இருப்பாங்க. வீட்டுக்கு போங்க, பரவாயில்லைன்னு சாப்ட்டா சொல்லி இருந்தா, கண்டிப்பா கேட்டு இருக்க மாட்டாங்க. அதான் கோவமா சொன்னேன். வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு தான் வரட்டுமே!!”


என்ற விளக்கத்தில் உண்மையில் ஹரிக்கு அத்தனை பெருமையாக இருந்தது.


“எனக்கு தெரியும் சார், உங்களை பத்தி. எப்பவும் உங்க கூட இருக்கிறவங்க நலன் பத்தி தான் உங்க யோசனை இருக்கும். எங்களுக்கே அப்படின்னா, அமிர்தா மேலே இன்னும் அதிகமா இருக்குமே!! எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு சார், உங்க கிட்ட ஒர்க் பண்றதுக்கு”


என மனதார கூறியவனுக்கு, வழக்கம் போல் தன் வலது கையை எடுத்து இடது மார்பில் வைத்து, அவனின் பாராட்டை ஏற்று கொண்டவன், 


“தேங்க்யூ ஹரி. அமிர்தா எனக்கு முக்கியம் தான், அதுக்காக நீங்க ஒருபடி கீழே இல்லை. எல்லாருமே எனக்கு இம்போர்ட்டெண்ட் தான்,” என்றான் நிறைவான புன்னகையுடன்.


பின் இருவரும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை புரிய, அவனின் வேலைகளும் ஆரம்பமானது.


இயக்கம் என்று வந்து விட்டால் போதுமே, சூறாவளியாய் சுழன்று கொண்டிருப்பானே ஆரவ்ஜெயந்தன். தற்பொழுதும் அதை தான் செய்து கொண்டிருந்தான்.


மழையில் ஒரு பாட்டு, மற்றும் ஒரு சில காட்சிகள் படமாக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்க, முதலில் பாடலுக்கான படப்பிடிப்பு தான் நடத்தப்பட்டது.


நடன இயக்குனர்கள் வரவழைக்கப்பட்டு, கொட்டும் மழையில் சளைக்காமல் அத்தனை பேரையும் வேலை வாங்கி கொண்டிருந்தான் ஆரவ். அதற்காக அவன் மழையில் நனையாமல் இல்லை. வெயிலோ, மழையோ எதுவும் அவனுக்கு முக்கியம் இல்லை. இயக்கம் மட்டும் தான் அவனின் முதன்மை.


முதலில் பாடலுக்கான ஒத்திகை நடந்து கொண்டிருக்க, கதாநாயகியின் காரியதரிசியோ, 


“ரிகசலையாவது மழை இல்லாத இடத்தில் பண்ணலாம்ல. எங்க மேடம்க்கு மழையில் நனைஞ்சு ஏதாச்சும் வந்தா என்ன பண்றாதாம்?”


என ஆரவ் காதுபடவே கூறினாலும், அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவன் இதையெல்லாம் கருத்தில் கொள்ளவே மாட்டான். இருந்தும் அந்த கரியதரிசியை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஆக வேண்டுமே!!, அவனோ இல்லை ஹரியோ பேசினால் தேவையில்லாது தலைவலி தான் வந்து சேரும் என்று நினைத்தவன், 

ஹரியை அருகில் அழைத்து நிற்க வைத்து கொண்டான்.


“எங்க மேடம்னா இவங்களுக்கு இளக்காரம் தான். இப்படி கொட்டுற மழையில் ஆடவிட்டு வேடிக்கை பார்க்கிறாங்க. இதுக்கு டூப் போட்டு எடுக்கலாம்ல”

என அந்த காரியதரிசியின் புலம்பல் கொஞ்சம் அதிகமாகவே கேட்க, 


ஹரியோ, ஆரவ்வை திரும்பி பார்த்தான். அவனும் அந்நேரம் அவனை தான் பார்த்து கண் அசைத்தான். ஹரிக்கு புரியாமல் இருக்குமா? ஆரவ்வின் எண்ணவோட்டம்!!


அங்கிருந்து, நேராக, கதாநாயகி இருக்கும் இடத்திற்கு வந்த ஹரி, அவரை தனியாக அழைத்து வந்து,


“மேடம், உங்களுக்கே தெரியும், ஆரவ் சார் எவ்வளவு பெரிய டைரக்டர்னு. அவரோட டைரக்ஷன்ல நடிக்க எத்தனை பேர் தவம் இருக்காங்க, ஆனால் நீங்க என்னடான்னா இப்படி பண்ணிட்டு இருக்கீங்க!!


என அதிருப்தியாய் கூறியவனை புரியாமல் பார்த்தாள் அவள்.


“என்ன சொல்றீங்க ஒன்னும் புரியலையே!!”


“என்ன மேடம்? புரியல சொல்றீங்க!! உங்களுக்கு இந்த படத்தில் நடிக்க விருப்பம் இருக்கா? இல்லையா?”


“என்ன இப்படி கேட்குறீங்க? விருப்பம் இல்லைன்னு யார் சொன்னது?”

என்றாள் அதீத பதற்றத்துடன். பின்னே, பதற்றம் இருக்க தானே செய்யும்!! இந்த படத்தில் நடிப்பதற்காக, நீ, நான் என்று போட்டி போட்டு கொண்டு வந்த அத்தனை பேர்களையும் சமாளித்து, ஆரவ் வைத்த அத்தனை பரீட்சைகளிலும் முன்னேறி, என நிறைய போராட்டங்களுக்கு பின்பு தானே அவளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. ஹரி இப்படி கேட்டால், பதறாமல் என்ன செய்யும்?!!


“உங்க பிஏ தான் அங்கே சொல்லிட்டு இருக்கார். உங்களை மழையில் வேலை வாங்குறோமா? டூப் போட்டு எடுக்கலாம்ல சொல்லிட்டு இருக்கார். இந்த விஷயம் மட்டும் ஏஜே சார்க்கு தெரிய வந்தது. உங்களால் இந்த படம் இல்லை வேறெந்த படத்திலும் நடிக்க முடியாது. சினி பீல்டையே மறந்துட வேண்டியது தான் நீங்க. ஏதோ பழக்கமாச்சேனு சொல்ல வந்தேன். அப்புறம் உங்க இஷ்டம்”


என கூறிவிட்டு அவன் நகர்ந்து விட, கதாநாயகிக்கோ ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. நேரே அவளின் காரியதரிசின் அருகில் சென்றவள், அவனை தனியாக அழைத்து சென்று ஓங்கி ஒரு அறை விட்டு, அங்கிருந்து அவனை துரத்தி விட்டாள்.


பின் நடிப்பில் கவனம் செலுத்த, ஆரவ் அடுத்தடுத்த காட்சிகளை எடுத்து கொண்டிருந்தான். இது தான் ஆரவ்ஜெயந்தன், அவன் நினைத்து இருந்தால் அடுத்த நிமிடமே, வேறொரு கதாநாயகியை கொண்டு வந்து நடிக்க வைத்திருக்க முடியும். ஆனால் அவன் அப்படி செய்ய மாட்டான்.


அவர்களும் இந்த திரைத்துறையை நேசித்து தானே வந்திருக்கிறார்கள். அவர்களின் திறமையை, இது போன்ற சின்ன சின்ன விஷயங்களுக்காக புறக்கணிக்க கூடாது, என்ற நல்லெண்ணம் உடையவன். அதே நேரம், அவனின் நிலையிலிருந்தும் கீழிறங்காமல், நிலைமையை கையாளும் விதம் தான் அவனின் தனித்திறமை.


காட்சிகள் எடுக்கப்பட்ட பின்னர், இடையில் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட, ஆரவ் ஹரியிடம்,


“ஹரி, அமிர்தா வீட்டுக்கு போய்ட்டாங்களா கேட்டு சொல்லேன்”

என்று கூற,


“அதை நீங்களே கேட்டுக்க வேண்டியது தானே!! கோபமா திட்டி அனுப்பிட்டு இப்போ என்னை பேச சொல்றீங்க!! நீங்களே பேசிக்குங்க போங்க”

என அவன் மறுத்து விட, 


“உன்னை போய் கேட்டேன் பாரு. நானே கேட்டுகிறேன். எனக்கென்ன பயமா?”


என்றவன், அவளுக்கு அழைக்க, அந்நேரம் வீட்டுக்கு சென்று உடைகளை மாற்றிவிட்டு, ஓய்வு எடுத்து இருந்தவள், அலைபேசி அடித்ததும், எடுத்து பார்க்க, ஆரவ் என்றதும் யோசனைக்கு உள்ளானாள்.


அலைபேசியை உயிர்ப்பித்து காதுக்கு கொடுக்க, 


“அமிர்தா, வீட்டுக்கு போய்ட்டிங்களா? மழையில் நனையலையே!!”

என அக்கறையாய் கேட்பவனை நினைத்து குழம்பி தான் போனாள்.


“வந்துட்டேன் சார்”


“ஓகே குட், நாளைக்கு மழை இருந்தா வர வேண்டாம். இல்லைனா மட்டும் ஆபீஸ் வாங்க”


என்றவனின் அக்கறை புரியாது,


“சார், நான் தினமும் சீக்கிரம் தான் வரேன். இன்னைக்கு தான் லேட் ஆகிடுச்சு. நாளைக்கு கண்டிப்பா சீக்கிரம் வந்துடுவேன் சார்”


என மளமளவென்று கூறியவளை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.


“அமிர்தா, நான் சொல்றது உங்களுக்கு புரியலனு நினைக்கிறேன். நீங்க இன்னைக்கு லேட்டா தான் வந்தீங்க, இருந்தாலும் மழையில் நனைஞ்சு வந்ததால் தான் வீட்டுக்கு போக சொன்னேன். நாளைக்கும் மழை வந்தா வரவேண்டாம் சொன்னேன். புரியுதா?!!”


என அவன் விளக்கியதும் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்கு புரியவே ஆரம்பித்தது. ஹரி சொன்ன,


‘ஆரவ் சார் எப்பொழுதும் அடுத்தவங்க நலனை முன்னிருந்தி தான் எதையும் செய்வார்’ என்ற வார்த்தைகள் தற்பொழுது அவள் காதுகளில் ரீங்காரமிட்டது.


அவளின் அமைதியை, 


“அமிர்தா,” என்ற அவனின் குரலே கலைக்க,


“ஹான், சொல்லுங்க சார்”


“என்ன சொல்லுங்க, நான் சொன்னது புரிஞ்சுதா? இல்லையா?”

என கேட்க,


“புரிஞ்சது சார். அப்புறம் தேங்க்யூ சார்”


என அமிர்தா நன்றி தெரிவிக்க, 


“ஆரம்பிச்சுடீங்களா!” என மலர்ந்து புன்னகைத்தான் ஆரவ்ஜெயந்தன்.

அமிர்தாவின் மனமோ ஆரவ்வின் செயலால் நெகிழ்ந்து போனது. 


அதன் பின் மீண்டும், படப்பிடிப்பு ஆரம்பமாக, அவனும் அதில் மூழ்கி போனான்.

—------------------


“ஸ்ரேயா, ஆரவ் ஊரில் இருந்து வந்துட்டான். இன்னைக்கே அவனை போய் பார்க்கலாம் பார்த்தா, இந்த மழை வந்து எரிச்சல் கூட்டுது”

என ராமமூர்த்தி மகளிடம் கூறிகொண்டிருக்க, அவளோ,


“அடப்போங்க ப்பா, அவன் ரொம்ப பண்றான். அவனுக்கு என்கூட பேச பிடிக்குதா இல்லையான்னு எனக்கே தெரியலப்பா. இப்போ ஒருத்தரை  பிடிக்கலையா?, போன் பண்ணா ஒன்னு எடுக்காமல் இருக்கனும். பிடிச்சு இருக்கா ஒழுங்கா பேசணும். ஆனால் இவனோ கொஞ்சம் வித்தியாசமா,  போன் எடுத்து பேசுறான். சரி பேசுறானேன்னு நாம கொஞ்சம் அதிகமா பேசினா வேலை இருக்குனு வச்சுறான். இவன் ஒரு டைப்பா அவாய்ட் பண்றான். அவன் என்னை அவாய்ட் பண்றான்னு எனக்கும் புரியுது. அவனும் தெரிஞ்சு தான் பண்றான். ஆனாலும், சிலநேரங்களில் என்னை அவன் அவொய்ட் பண்ணலை என்ற மாதிரியே பிஹேவ் பண்றான். எனக்கு தான் கடைசியில் அவன் என்ன நினைக்கிறேன்னே புரிய மாட்டேங்குது ப்பா"


என்றவளின் பேச்சில் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டார் ராமமூர்த்தி. 


“இவளை வச்சுகிட்டு நான் எப்படி ஏஜேவை மாப்பிள்ளை ஆக்க போறேன்னோ தெரியலையே” என வாய்விட்டே புலம்ப, ஸ்ரேயாவோ, 


"அட போங்கப்பா" என எழுந்து சென்று விட்டாள்.


அடுத்த நாள் செல்லலாம் என காத்திருக்க அப்பொழுதும் மழை வந்து அவர்களின் பயணத்தை தடைசெய்தது.


இப்படியே இரண்டு நாட்கள் செல்ல, அன்று மழை இல்லாது இருக்க, அமிர்தாவும்  வேலைக்கு வந்திருந்தாள். அவள் வருகிறாள் என்றால் ஆரவ்வை பற்றி சொல்லவும் வேண்டுமோ!! அவள் வருகைக்கு முன்பே அலுவலகம் வந்து காத்துக்கொண்டிருந்தான் ஆரவ் ஜெயந்தன்.


ஹரி தான் அவனை கிண்டல் செய்து கொண்டிருக்க, ஆரவ் அவனின் கிண்டலை எல்லாம் சலிக்காமல் எதிர்கொண்டான்.


"ஹரி, இன்னைக்கு நாம ஷூட்டிங்கு அமிர்தாவை கூட்டிட்டு போகலாமா?"

என திடுமென கூற, ஹரியோ,


“என்ன சார் திடீர்னு? அவங்களை மட்டும் கூட்டிட்டு போனா, ஏதாவது காசிப் பேச வாய்ப்பு இருக்கே!!”

என அவனை எச்சரிக்க,


“சிம்பிள் ஹரி, அமிர்தாவை மட்டும் கூட்டிட்டு போனா தானே காசிப் பேசுவாங்க. நம்ம ஸ்டாப் எல்லாரையும் கூட்டிட்டு போயிடலாம். ஜஸ்ட் அவங்க பார்க்க ஆசை பட்டாங்க அதனால் கூட்டிட்டு வந்தோம் சொல்லிடலாம்’

என ஐடியா கொடுத்தவனை, அதிர்ந்து பார்த்தான் ஹரி.


“இந்த காதல் வந்துடுச்சுன்னா, ஐடியாலாம் அருவியா கொட்டும் போல!!”


என மெச்சிக்கொண்டவன், ஆரவ்வின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தான். அதன்படி, அமிர்தா வந்ததும், அவளிடம் விஷயத்தை பகிர, முதலில் அவளோ தயங்கி நின்றாள். பின் அலுவலகத்தில் உள்ள அனைவரும் வருகின்றனர் என்றதும், அவளும் சரியென்று அவர்களுடன் கிளம்பினாள்.


 நாயகன், நாயகி என அனைவரும் வந்து விட படப்பிடிப்பு ஆரம்பமானது. அமிர்தாவிற்கு இதையெல்லாம் பார்க்க புதிதாக இருந்தது. சினிமா துறையை பற்றி அவ்வளவாக அறிந்திராதவளுக்கு, எல்லாமே புதிதாகவும், அதே சமயம் சுவாரஸ்யமாகவும் இருந்தது. ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் ரசனையை உள்வாங்கி கொண்டிருந்தான் ஆரவ்.


படப்பிடிப்பு ஆரம்பித்த சில மணி நேரத்தில் அங்கு பிரவேசமானார் ராமமூர்த்தி, தன் மகள் ஸ்ரேயாவுடன்.


“சார், ஆபத்து, ஆபத்து..” என ஹரி ஆரவ்வின் காதில் மெல்ல முணுமுணுக்க


“பார்த்துக்கலாம் ஹரி” என்று கண் காட்டினான் ஆரவ்.


“ஹலோ ஏஜே,” என ராமமூர்த்தியின் ஆர்ப்பட்டமான குரலில், அவரை திரும்பி பார்த்தவன், 


“ஷூட்டிங் போய்ட்டு இருக்கு, வரேன் இருங்க”


என அவருக்கு ஜாடை காட்டியவன், படப்பிடிப்பில் கவனத்தை செலுத்தினான்.


ராமமூர்த்திக்கு சப்பென்று இருந்தாலும், ஆரவ் பற்றி அவருக்கு தெரியுமாதலால் அமைதியாக வந்து அமர்ந்து கொள்ள, உடன் ஸ்ரேயாவும் வந்து அமர்ந்து கொண்டவளுக்கு முகம் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


“பார்த்தீங்களா ப்பா, எப்படி நம்மளை இன்சல்ட் பண்றானு. இதுக்கு தான் வரவேண்டாம் சொன்னேன். அவனை நம்ம வீட்டுக்கு வர சொல்லி இருக்கலாம்”

என சலித்து கொள்ள,


“அவனை நம்ம வீட்டுக்கு வர சொன்னா வந்துட்டு தான் மறு வேலை பார்ப்பான் பாரு. நமக்கு தான் அவன் தேவை. அவனுக்கு நாம தேவையில்லை. ஆரவ் ரொம்ப டெடிகேஷன். அதான் நம்மளை வெயிட் பண்ண சொல்றான். அவன் வந்ததும் கொஞ்சம் சிரிச்சு பேசு புரியுதா”


என அவளை சமாதானம் செய்தவர், சுற்றி பார்க்க, அங்கே படப்பிடிப்பிற்கு சம்மதம் இல்லாத சிலர்  அமர்ந்திருக்க, யோசனையானார் ராமமூர்த்தி.


இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற, ஸ்ரேயாவோ எரிச்சலுடன் அமர்ந்திருக்க, ராமமூர்த்தி அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க என நேரம் சென்று கொண்டிருந்தது.


“அப்பா, அசிங்கமா இருக்கு ப்பா. போயும் போயும் இவனுக்காக இவ்வளவு நேரம் உட்கார்ந்துட்டு இருக்கோம். ஆனால் அவன் கண்டுக்கவே மாட்டேன்கிறான்”

என சலித்து கொள்ள,


“எனக்கும் தான் எரிச்சலாக இருக்கு. வேறென்ன பண்றது?  போன படம் மாதிரி இந்த படமும் என்கூட பண்ணி இருந்தா, நாம இப்படி அலைய வேண்டிய வேலையே இருந்திருக்காது. என்ன நினைச்சானோ, என்கூட பண்ணாம அந்த ஏபிஆர் புரக்டக்ஷன் கூட பண்ணிட்டு இருக்கான். எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான். அவனை வழிக்கு கொண்டு வந்துட்டா போதும்”


என அவளை சமாதானம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அங்கு வந்தமர்ந்தான் ஆரவ்ஜெயந்தன்.


“ஹெலோ சார்,” என்று வணக்கம் தெரிவிக்க,


அவனின் குரல் கேட்டதும், முகபாவனைகளை மாற்றி கொண்டவர் சிரித்த முகமாக, 


“ஹெலோ ஏஜே, எப்படி இருக்கீங்க?” என்றார் அத்தனை பற்களும் தெரியும்படி.


“நான் நல்ல இருக்கேன் சார். அப்புறம் என்ன இந்தப்பக்கம்?”

என ஆரவ் கேட்க, 


“ஒன்னுமில்லை சும்மா தான், பார்த்து ரொம்ப நாள் ஆகிடுச்சுல, கூடவே ஸ்ரேயாவும் ஷூட்டிங் பார்க்கணும் ஆசைப்பட்டா, அதான் அவளையும் கூட்டிட்டு வந்தேன்”

என பதில் கூறினார் ராமமூர்த்தி.


“ஒஹ்ஹ்,” என்றதோடு முடித்து கொண்டவன்,


“ஹரி,” என்று அழைத்தவன், அவன் அருகில் வந்ததும்,


“ஹரி, இவங்களுக்கு குடிக்க ஏதாவது கொடுக்க சொல்லு”

என்றவன், அவர்களிடமிருந்து விடைபெற்று கொள்ள, 


“என்ன ஏஜே? இன்னும் கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்ல”

என ராமமூர்த்தி கூற, அவனோ,


“ஷூட்டிங் பார்க்க தானே வந்தீங்க. நான் போய் டைரக்ட் பண்ணா தான் உங்களால் பார்க்க முடியும்”

என புன்னைகையுடன் கூறியவன், எழுந்து சென்று விட, ராமமூர்த்திக்கும், ஸ்ரேயாவுக்கும் அவனின் நடவடிக்கை அவர்களை அவமானப்படுத்துவது போலவே இருந்தது. ஆனால் கேட்க முடியாதே!! சிரித்த முகமாக கூறி சென்று விட்டானே!!


அங்கிருந்து நேராக, அமிர்தா மற்றும் அவனின் ஊழியர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தவன், அவர்களுக்கு தேவையானவற்றை பார்த்து பார்த்து கவனிக்க, இங்கு அமர்ந்திருந்த இருவரும் அவனின் நடவடிக்கையையே கவனித்து கொண்டிருந்தனர்.


இடைவேளை என்று வரும்பொழுதெல்லாம் ஆரவ் நேராக அவர்களிடமே சென்று பேசுவதும், கவனிப்பதுமாக இருக்க, இருவருக்கும் எதுவோ சரியில்லை என்று தோன்றி கொண்டே இருந்தது.


“அப்பா, இவனை பார்த்தீங்களா?!! நாம இவனுக்காக இங்கே காத்துகிட்டு இருக்கோம். அதெல்லாம் இவன் கண்ணுக்கு தெரியல. ஆனால் அங்கே இருக்கிற அந்த நாலு பேரை மட்டும் விழுந்து விழுந்து கவனிக்கிறான். மத்தவங்க கூட ஓகே. ஆனால் அந்த சுடிதார் போட்ட பொண்ணு மேலே ஏகப்பட்ட டபுட் வருது. எப்பொழுதும் சொல்வீங்க, ஏஜே ரொம்ப கல்செர்ட்ன்னு, இப்போ மட்டும் அந்த பொண்ணு கிட்டேயே அடிக்கடி பேசுறான். 


அதுவும் அந்த பொண்ணை பார்க்கவே ரொம்ப லோகிளாஸ்  பொண்ணு போல இருக்கா ஆளும், ட்ரெஸ்ம் பார்த்தாலே தெரியுது. இந்த மாதிரி பீபிள் கூடலாம் எப்படி பழகுறான். அந்த பொண்ணை விட நான் என்ன குறைஞ்சு போயிட்டேன். என்கிட்ட ஒருவார்த்தை பேச மாட்டேன்கிறான்”

என ஸ்ரேயா குமுற, ராம்மூர்த்தியோ,


“ஸ்ரேயா, உன் ஆதங்கம் புரியுது. எனக்கும் அதே டபுட் தான். அப்பா இருக்கேன் நான் பார்த்துகிறேன்”


என ஆரவ்வையும், அமிர்தாவையும் நோட்டம் விட்டு கொண்டிருந்தார் ராமமூர்த்தி.


அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு ஊழியரிடம் அமிர்தா யாரென்றும் கேட்டு தெரிந்து கொண்டார்.


படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று கொண்டிருக்க, யாரும் எதிர்பாராது மழை திடீரென்று பொழிய ஆரம்பித்தது. அனைவரும் அங்கிருந்து தீடிரென்று பெய்த மழையால் நனையாதிருக்க கிடைத்த இடங்களில் ஒதுங்கி கொள்ள, ஆரவ்வும், அமிர்தாவும் ஒரு இடத்தில் வந்து ஒதுங்கி நின்றிருந்தனர். 


ஓடி வந்ததில் அவனின் ஒரு பொருள் மழையில் விழுந்து விட, அதை கவனிக்காமல் வந்து நின்றவன், எதேர்ச்சையாக பார்த்ததும் அந்த பொருளை எடுக்க வேண்டி, மழையில் நனைந்தப்படியே ஓடி, அதனை எடுத்து கொண்டு நகர்ந்த சமயம், மழையினால் கால் வழுக்கி விட, அங்கே அப்படியே விழுந்தவன்,  அருகில் இருந்த கம்பியில் கால் முட்டிக்கு கீழே குத்தி கொண்டான்.


குத்திய வேகத்தில் ரத்தம் வெளியே வர, வலியில் துடித்தப்படி அப்படியே அமர்ந்து விட்டான் ஆரவ்.


ஆரவ் விழுந்ததுமே அனைவரும் பதறி விட்டனர். உடனே அவனருகில் என்னவாயிற்றோ என்று ஓடி வர, அதில் அமிர்தாவும் அடக்கம்.


ரத்தம் பீறிட்டு வரவும், ஹரியோ,


“ஹாஸ்பிடல் போகணும். கார் எடுத்துட்டு வாங்க” என குரல் கொடுத்தபடி, ஆரவ்வை தாங்கி பிடித்து கொள்ள, அருகில் இருந்த அமிர்தாவோ, 


“சார், ரத்தம் ரொம்ப வருது,” என பதறியவள், தான் அணிந்திருந்த துப்பட்டாவின் முனையை கிழித்து ரத்தம் வரும் இடத்தில் கட்டி விட்டாள்.


அதற்குள் காரும் வந்துவிட, ஒரு பக்கம் ஹரி அவனை தாங்கி கொள்ள,மறு பக்கம் அமிர்தா அவனை தாங்கி கொண்டாள். ஆரவ்வுடன் சேர்ந்து அமிர்தாவும் பயணிக்க, காரோ மருத்துவமனை நோக்கி வேகமாக பயணப்பட்டது.


இதனை பார்த்து கொண்டிருந்த ராம்மூர்த்திகோ சந்தேகம் மேலும் வலுப்பெற்றது.


என் ரசனையின் 

தொடக்க புள்ளியும், முற்று புள்ளியும்

அவள் தான் என்பது,

அவளுக்கே தெரியாத பொழுது

ரசிக்கும் என்னையா ரசிக்க போகிறாள்!!



பிடிக்கும்…








































Comments