UNEP-15

 அத்தியாயம்..15


            கூட்டத்தில் அமிர்தாவை கண்டதும், எப்படியும் அவளை உள்ளே வர விட கூடாது என்று யோசித்த ராமமூர்த்தி, அங்கிருந்த காவலாளியை அழைத்து, கூட்டத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த கூற, அதன்படி அங்கிருந்த சில காவலாளிகளும், அங்கிருந்தவர்களை வெளியேற்ற முயன்று கொண்டிருந்தனர். அதில் தள்ளு முள்ளு ஏற்பட, பெரும் சலசலப்பு உருவானது.


ரசிகர்களும், காவலாளிகளும் ஒருவருக்கொருவர் மோதி கொள்ள, சிறிது நேரத்தில் அங்கு பெரிய கலவரமே உருவாகும் நிலையில் தான் காணப்பட்டது அந்த இடம். இதில் கூட்டத்தில் ஒருத்தியாக மாட்டி கொண்ட அமிர்தா, நடந்த தள்ளுமுள்ளுவில் அவளை யாரோ தள்ளிவிட, அவளோ  “அம்மா” என்ற அலரளுடன் கீழே விழுந்தாள்.


உள்ளே இருந்த ஆரவ்விற்கு, சட்டென்று ஏதோ உள்ளுணர்வு தோன்ற, அவனோ ஜன்னலின் வழியே வெளியே எட்டி பார்த்தான். அவன் பார்ப்பதற்கும், அமிர்தா கீழே விழுவதற்கும் சரியாய் இருந்தது.


பார்த்ததும் பதறியவன், உள்ளிருந்து “அமிர்தா” என்று, வேகமாக வெளியே வர, அவனை கவனித்த ஹரியும், அவனுடன் வெளியே ஓடி வந்தான்.  இவர்களை கண்டு வந்திருந்த அனைவருமே என்னமோ ஏதோவென்று வேகமாக வெளியே வந்தனர்.


வெளியே வந்து பார்த்தவன் அங்கே நடந்த கலவரத்தை கண்டு திகைத்து போனான். கூடவே அமிர்தாவையும் தேட, அதற்குள் அவளே கை கால்களை தட்டி கொண்டு எழுந்து விட்டிருந்தாள்.


இருக்கும் கூட்டத்தை மீறி அவளை கூட்டி வர இயலாது என்று யோசித்தவன், ஹரியிடம் கூறி அவளை பின் வழியாக அழைத்து வர பணிந்தான். ஹரியும் அமிர்தாவை அழைக்க வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.


“என்ன? என்னாச்சு?” ஏன் இங்கே ஒரே பிரச்சனையா இருக்கு? என ஆரவ் கேட்க, அவனருகே வந்த ராமமூர்த்தி,


“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க ஏஜே?  இவங்களுக்கு எல்லாம் வேற வேலையே இல்லை. இப்படி தான் பிரச்சனை பண்ணிட்டு இருப்பாங்க. நீங்க உள்ளே போங்க. எல்லாரையும் விரட்டி விட்டுட்டு வரேன்”


எனக் கூறியதும் அவரை அனல் தெறிக்க பார்த்தான் ஆரவ். அவன் பார்வையிலேயே அவருக்கு அடுத்து பேச வரவில்லை. அருகில் நின்றிருந்த காவலாளியிடம் ஏதோ கூற, அவரும் அடுத்த சில நிமிடத்தில் கையில் மைக்குடன் வந்தார். அதனை வாங்கியவன்,


“ஹலோ ஆல், என்னாச்சு? ஏன் இப்படி எல்லாரும் கத்தி கூச்சல் போட்டுட்டு இருக்கீங்க?”


என மென்மையாக கேட்க, கூட்டத்தில் இருந்த ரசிகரோ,


“சார், உங்க பிறந்தநாள்னு கேள்விப்பட்டு உங்களுக்கு வாழ்த்து சொல்லலாம் காத்துகிட்டு இருக்கோம். அதுக்குள் இவங்க எங்களை இங்க இருந்து விரட்டி விடுறாங்க. ஒரு ரசிகரா நாங்க உங்களுக்கு வாழ்த்து சொல்ல கூடாதா? எங்களுக்கு அந்த உரிமை இல்லையா? உள்ளே வரக்கூடாது சரி, ஆனால் வெளியே வாசலில் நின்னா என்ன தப்பு? அதுக்கு இவங்க இங்க நிக்க கூடாதுனு விரட்டி விடுறாங்க. இவங்க தான் முதலில் எங்க மேலே கை வச்சது. என்ன சார் நியாயம் இது”

என ஆவேசத்தில் கத்த, அருகில் இருந்த ராமமூர்த்தியை  முறைத்து பார்த்தவன்,


“தப்பு தான். அம் எஸ்ட்ரீம்லி சாரி பிரெண்ட்ஸ். அவங்க சார்பா நான் மன்னிப்பு கேட்டுகிறேன். ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. இதோ வந்துறேன்”

என்றவன், வந்திருந்த விருந்தாளிகளிடமும்,


“நீங்களும் இங்கேயே இருங்க. வந்துறேன்”

என்று கூறி உள்ளே வர, அவனை எதிர்கொண்டான் ஹரி.


“சார், அமிர்தாவை கூட்டிட்டு வந்துட்டேன். அந்த ரூமில் இருக்காங்க”

என்றதும்,


“அமிர்தா வந்துட்டாளா பாரு, அவளை பாலோ பண்ணிக்கோ சொன்னேன்ல, என்ன பண்ணிட்டு இருந்த நீ”


என காட்டமாக கேட்க, அவனோ தலையை குனிந்து கொண்டான். எங்கே அவன் தான், அங்கு வந்திருந்த பெண்களை பார்த்து சயிட் அடித்து கொண்டிருந்தானே!!


“டிஸ்கஸ்டிங்” என காயந்தவன், முன்னே நடக்க அவன் பின்னே நடந்தான் ஹரி.


விழுந்த வேகத்தில் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தம் கசிய, அதன் வலியை ஊதி ஊதி போக்கி கொண்டிருந்தாள் அமிர்தா. அறையின் உள்ளே ஆரவ் நுழைந்ததும், எழுந்து நின்று புன்னகைக்க, அவனோ,


“ஸாரி அமிர்தா. நீ போன் பண்ணது எனக்கு கேட்கல. ஹரியும் கவனிக்கல போல. அதான் நீ வந்தது தெரியல. ரியலி ஸாரி”

என மன்னிப்பு வேண்ட, 


“ஐயோ, எதுக்கு ஸாரிலாம் சொல்லிட்டு. இன்னைக்கு உங்க பெர்த்டே. நீங்க சந்தோஷமா இருக்கணும். சங்கடப்பட கூடாது. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”


என வாழ்த்து கூறியதும், ஆரவ்வோ றெக்கை இல்லாமல் வானில் பறந்தான்.


“இன்னைக்கு எனக்கு கிடைச்ச முதல் தமிழ் வாழ்த்து உன் கிட்ட இருந்து தான். இட்ஸ் மீன்ஸ் அ லாட், சோ ஸ்பெஷல் ஒன்”

என அத்தனை மகிழ்ச்சியாக கூறியதும் அவளோ தலையை குனிந்து கொண்டாள். அவன் எந்த அர்த்தத்தில் கூறுகிறான் என்பது அவளுக்கு புரியாதா?


அவள் கையில் வைத்திருந்த கவரை பார்க்க, அது அவனுக்கானது என்பது அவள் சொல்லாமலே ஆரவ்விற்கு புரிந்தது.


“அப்புறம் அமிர்தா, பெர்த்டேக்கு எனக்கு கிப்ட் எதுவும் இல்லையா?”


எனக் கேட்க, அவளோ கையில் இருந்த கவரை அவனிடம் நீட்டி,


“இது.. விலை கூடலாம் இல்லை. என்கிட்ட இருந்த காசை வச்சு வாங்கினேன். எப்பவாச்சும், வீட்டில் சாதாரண ட்ரெஸ் போடணும் தோணும் போது ஒரே ஒரு தடவை போட்டு பாருங்க. அதுவே போதும்”

என்றவள் அவனிடம் கொடுக்க, அதனை வாங்கி கொண்டவன்,


“நீ எனக்கு பார்த்து பார்த்து வாங்கி இருக்கும் போது, அது எனக்கு பிரைஸ்லெஸ். அதுக்கான மரியாதையை கண்டிப்பா கொடுப்பேன்”


என கூறியவன்  அவளை ஆழ்ந்து பார்க்க, அவன் பார்வையில் அவளோ தடுமாறி இமை தாழ்த்தி கொண்டாள். அவனின் ஒவ்வொரு அசைவும், அவளுள் அவன் எடுத்து வைக்கும் காதலின் பாதசுவடாக பதிந்து போவதை அவளால் தடுக்கவே முடியவில்லை.


“சரி கேக் வெட்ட போறேன், நீயும் வா” என்று அவளை அழைக்க,


“நானா?.. அங்கே பெரிய பெரிய ஆளுங்கலாம் இருக்காங்க. நான் வந்தா நல்ல இருக்காது. நீங்க போங்க. நான் இப்படியே கிளம்புறேன்”

என்றவளை முறைத்து பார்த்தவன், 


“நீயில்லாமல் என் பெர்த்டே நிச்சயம் முழுமையடையாது. கண்டிப்பா வர, வா”


என சட்டென்று அவள் கைப்பிடித்து இழுக்க, அவளோ வலியில் “ஸ்ஸ்ஸ்” என்று முகத்தை சுருக்கினாள்.


“என்னாச்சு?” என்று பதறியவன், அவள் கையை ஆராய, அமிர்தாவோ


ஒன்றுமில்லை என்று கையை இழுத்து கொண்டாள்.


“என்னாச்சுன்னு கேட்டேன்” என அழுத்தமாக கேட்டவன், மீண்டும் அவள் கையை பற்றி திருப்பி பார்க்க, அங்கே பட்டிருந்த காயம் தென்பட்டது.


“என்ன இவ்வளவு பெரிய காயம்? ஹரி பிரஸ்ட் எட் பாக்ஸ் எடு”


என கூறியதும், ஹரியும் அதனை எடுக்க சென்றான்.


“ஒன்னுமில்லை. சின்ன காயம் தான். ஆறிடும். நீங்க போய் பங்ஷனை பாருங்க”


என அவள் கூறிய எதையும் அவன் காதில் வாங்கவில்லை. அவன் கைகளில் இருந்து தன் கையை உருவி கொள்ள நினைக்க, அதையும் அவன் செய்ய விடவில்லை.


ஹரி முதலுதவி பெட்டியை கொண்டு வந்ததும், அதனை உபயோகப்படுத்தி, அவளின் காயத்திற்கு மருந்திட்டு முடித்த பின்பே அவள் கைகளை விடுவித்தான்.


 “மருந்து போட்டு இருக்கேன் சரியாகிடும். நீங்க முன்னே போங்க நான் பின்னாலே வரேன்”

என்று ஆரவ் கூறியதும், அமிர்தாவும் ஹரியும் வெளியே வந்து நின்று கொண்டனர்.


இவையனைத்தையும் அறையின் ஜன்னலின் வழியே, மறைத்திருந்து கவனித்தார் ராமமூர்த்தி. உள்ளே நடப்பதை கண்டதும் அவருக்கோ ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது.


“இவனுக்கும், இந்த பெண்ணுக்கும் என்ன கனக்க்ஷன்? இவன் இந்த பொண்ணு கிட்ட நடந்துகிறது எதுவும் சரியில்ல. இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்”


என மனதோடு நினைத்து கொண்டவர் வெளியே வந்து தன் குடும்பத்த்துடன் நின்று கொண்டவர், அமிர்தாவை தான் முறைத்து பார்த்து கொண்டிருந்தார்.


ஹரியுடன் ஓரமாக நின்றிருந்த அமிர்தா, ஆரவ்வையே எதிர்நோக்கி இருக்க, உள்ளிருந்து வெளியே வந்த ஆரவ்வை கண்டதும், அவளது கண்களோ அகல விரிந்து கொண்டது.


அவள் வாங்கி வந்திருந்த சட்டையை அவன் அணிந்து கொண்டு வந்திருந்தான். 


கண்களாலேயே அவளிடம் எப்படி இருக்கு என்று கேட்க,  அவளோ பதில் சொல்ல முடியாமல் திணறி போனாள். அவன் இப்படி உடனே அணிந்து கொண்டு வருவான் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. வைத்த கண் எடுக்காமல் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள்.


அதற்குள் வேலையாட்கள் அவனுக்கான கேக் அடங்கிய மேஜையை கொண்டு வந்து அவன் முன்னே வைத்தனர்.


ரசிகர்களை நோக்கி அவனோ,


“உங்க முன்னாடியே கேக் கட் பண்றேன். இதை விட என்னோட பிறந்த நாளில் சிறப்பான விஷயம் எதுவும் இல்லை”


என்று கூறி கேக்கை வெட்டி, விழாவை மேலும் சிறப்பாக்கினான். வெட்டிய கேக் அனைத்தையும் ரசிகர்களுக்கே பகிர்ந்து கொடுத்து விட பணிந்து விட, அவ்வண்ணமே அனைவருக்கும் அனைத்தும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.


வந்திருந்த அனைவரிடமும், 


“எனக்கு நீங்க எல்லாரும் வந்து வாழ்த்து சொன்னதே பெரிய கிப்ட். இதில் தனியா எந்த பொருளும் வேண்டாம் சாப்பிட்டு போங்க”


என உறுதியாக கூறிவிட, அனைவரும் உணவு கூடத்தை நோக்கி சென்றனர்.


ரசிகர்களும், ஆரவ்வின் பிறந்த நாள் விழாவை நேரில் கண்டு மகிழ்ந்ததால் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


உணவு கூடத்தில் வகை வகையாக உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது, எல்லாமே மேலை நாட்டு உணவுகளாக இருக்க, அமிர்தாவிற்கு எதுவும் பிடிக்கவில்லை. பார்த்ததும் உணவை தவிர்த்தவள், தண்ணீர் மட்டும் அருந்தி விட்டு சுற்றும் முற்றும் பார்த்து கொண்டிருந்தாள்.


கண்கள் ஆரவ்வை தான் தேடியது.. ஆனால் மனம் தான் ஒத்து கொள்ள மறுக்கிறதே!! நான்கைந்து பேர் கொண்ட சிறிய குழுவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் கூட்டத்தில் அவன் மட்டும் அவளுக்கு தனித்து தெரிந்தான். தன்னை மீறி அவனை ரசித்து கொண்டிருந்தாள் அமிர்தா.


சட்டென்று அவளை திரும்பி இவன் பார்த்து என்ன என்று புருவத்தை உயர்த்தி கேட்க, அமிர்தாவோ திடுக்கிட்டு போனாள். அவளே அவனை ரசிக்கிறாள் என்றால், அவனை சொல்லவும் வேண்டுமோ?!! அவளை தான் அவன் கண்காணித்து கொண்டே இருக்கிறானே!!


ஒன்றுமில்லை என்று வேகமாக தலையாடியவள் வேறு எங்கோ பார்வையை பதிக்க, சின்ன சிரிப்புடன் திரும்பி கொண்டான் ஆரவ். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் அவ்வளவு தான் என்று யோசித்தவள், ஹரியிடம் தான் கிளம்புவதாக கூற, அவனோ,


“ஏஜே சார்..,  உங்களை கூட்டிட்டு போறதா சொன்னார். கொஞ்ச வெயிட் பண்ணுங்க”

என தகவல் கூற, 


“இல்லை அதெல்லாம் வேண்டாம் சொல்லிடுங்க. நானே போயிடுவேன்”

என மறுப்பு தெரிவித்தாள் அமிர்தா.


“லேட் நயிட் ஆகிடுச்சு, இந்த டைம் எப்படி போவீங்க?” சேப் இல்லை. நீங்க வாங்க காரில் உட்காருங்க. ஏஜே சார் இப்ப வந்துடுவார்”


என வற்புறுத்தி அழைத்து கொண்டு காரில் அமர வைத்தவன், உள்ளே சென்று விட்டான்.


அவளுக்குமே நிசப்த இரவை பார்க்கும் பொழுது சற்று பயமாக தான் இருந்தது. அன்றைய நாள் இதுபோன்ற ஒரு நிசப்த இரவில் வழி தெரியாமல் உயிரை பணயம் வைத்து கொண்டு ஓடிய தருணம் எல்லாம் நினைவில் வந்து நிழலாடியது. அதையெல்லாம் நினைக்கும் போது தன்னை மீறி கண்கள் கலங்க, ஒவ்வொன்றும் அவள் மனதில் ஊர்வலம் நடத்தியது.


கடைசியில் ஆரவ் முகம் வந்து நிற்க, அவனை சந்தித்தது, அவனுடனான பழக்கம், அவனை நேசித்தது, பின் அவன் காதல் கூறிய தருணம், தற்பொழுது வரை என எல்லாமே நிழலாட, எதை நினைக்க, எதை தவிர்க்க என்று ஒன்றும் புரியாமல் தவித்து போய் அமர்ந்திருந்தாள் அமிர்தா.


“என்னைப்பத்தி நினைச்சு முடிச்சுடீன்னா, கிளம்பலாமா?”


என வெகு அருகில் கேட்ட குரலில் திடுகிட்டவள், திரும்பி பார்க்க, அங்கே, ஓட்டுநர் இருக்கையில் புன்னகை முகமாக அமர்ந்திருந்த ஆரவ், அவளை கண்டு கண் சிமிட்டினான்.


எப்பொழுது வந்தமர்ந்தான், எவவ்ளவு  நேரமாக தன்னை கவனித்து கொண்டிருக்கிறான் என்பது தெரியாது, தலையை குனிந்து கொண்டாள் அமிர்தா.


அவனே வாகனத்தை இயக்க, சீரான வேகத்தில் வண்டியை ஓட்டியவன், 


“அப்புறம், என்ன பேசவே மாட்டேன்கிற? ஷர்ட் எப்படி இருக்கு? ஒன்னும் சொல்லலையே?!!


என அவளை யோசிக்க விடாது பேச்சு கொடுக்க, அதில் அவனை திரும்பி பார்த்தவள், அவன் அணிந்திருந்த சட்டையையும் பார்த்தாள்.


அத்தனை பொருத்தமாக, அவனின் அழகுக்கு மேலும் அழக்கூட்டும் வகையில் இருந்தது அவள் வாங்கி கொடுத்த சட்டை.


“நல்ல இருக்கு” என்று மட்டும் அமிர்தா கூற,


“ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு” என்று அவளை திருத்தினான் ஆரவ்.


மீண்டும் அவள் மௌனமாகி விட, 


“சரி சொல்லு, எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம். ஏஜேவுக்கு ஏஜ் வேற ஏறிட்டே போது, சீக்கிரம் சொன்னா தானே சீக்கிரம் கல்யாணம் பண்ண முடியும். அப்புறம் உன்னை போலவே, கியூட்டா ஒரு குட்டி தங்கத்தை பெத்துக்கணும், அவ சேட்டையை தாங்கனும், நல்ல ஸ்கூலில் சீட் வாங்கணும், படிக்க வைக்கணும், அவளுக்கு கல்யாணம் பண்ணணும். எவ்வளவு இருக்கு. சீக்கிரம் சொன்னா தானே அடுத்தடுத்த வேலைகளை பார்க்க முடியும்”

என்றதும் அமிர்தாவோ அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.


“என்ன இவ்வளவு ஷாக்? இப்போ தான் நான் பிரஸ்ட் டைம் கேட்கிற மாதிரி, நான் தான் எப்பவோ சொல்லிட்டேனே!! நீ தான் ஓகே சொல்லாமல் இருக்க?”


என்றதும், அவளோ மீண்டும் மௌனமாகி போனாள். என்னவென்று சொல்வது? எதை சொல்வது? இதெல்லாம் சரிவராது என்பதை கூறவே காரணம் தேடி கொண்டிருந்தாள்.


காரணத்தை கூறினாலும், எதையும் அவன் ஏற்பதில்லை. அமைதியாக இருப்பதை தவிர வேற வழி தெரியவே இல்லை அவளுக்கு.


கார்மேக வானிலையில் வழிகாட்டும் ஒற்றை கலங்கரை விளக்கு போல, அந்த காரிருள் இரவில், கலங்கரை விளக்கு போல வழிகாட்டிய நிலவின் வெளிச்சத்தை துணைகொண்டு இருவரும் பயணித்தனர். மொழிகள் ஊமையாகின, மௌனங்கள் மொழியாகின.


காதலில் எல்லாமே ஏறுமாறு, எடக்கு முடக்கு தானே!!


வண்டியை ஒரு இடத்தில் நிறுத்த, வீடு வந்து விட்டதோ என்றெண்ணி, அமிர்தா வெளியே பார்க்க, அவனோ ஒரு தள்ளுவண்டியின் முன்பு நிறுத்தி இருந்தான்.


பார்த்ததும் தெரிந்து விட்டது, அது தள்ளுவண்டியில் நடத்தப்படும் சிறிய டிபன் கடை என்பது.


எதற்கு இங்கு நிறுத்தி இருக்கிறான் என்பது புரியாது, அவள் அருகில் இருந்த அவனை திரும்பி பார்க்க, அவனோ அங்கு இல்லை.


அவளோ, அந்த பக்கமாகவே அவனை தேட, அவனோ அதற்குள் இந்தப்பக்கம் வந்து “அமிர்தா” என குரல் கொடுத்தான்.


குரல் வந்த திசையை நோக்கி இந்தப்பக்கம் திரும்பியவள் முன்பு,  வெகு அருகில் அவன் முகம். சற்று தடுமாறி தான் போனாள் அமிர்தா.


“பார்ட்டியில் நீ சாப்பிடவே இல்லையே!! அதான், இந்த டைம் ஹோட்டல்ஸ்லாம் மூடி இருக்கும். இங்க சூப்பரா இருக்கும். நான் ரெகுலரா சாப்பிடுவேன். இரு வாங்கிட்டு வரேன்”


என கூறிவிட்டு அவன் செல்ல, தன்னை கவனித்து இருக்கிறான் என்பதே அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாய் இருந்தது.


“இல்லை, வேண்டாம், பரவாயில்லை எனக்கு பசிக்கல வீட்டுக்கு போலாம்”

என மறுப்பு தெரிவிக்க, அவனோ,


“உனக்கு பசிகல, ஆனால் எனக்கு பசிக்குதே!!”

என பாவம் போல் கூறியவனிடம்,


“ஏன் நீங்க சாப்பிடலையா” என்றவளின் குரலில் அத்தனை அக்கறை தெளித்தது. 


“நீ சாப்பிடலையே, அதான் நானும் சாப்பிடலை”

என்றான் அத்தனை சாதரணமாக. அவனின் அக்கறையிலும், பாசத்திலும் திண்டாடி தான் போனாள் பெண்ணவள்.


இருவருக்கும் அவனே சிற்றுண்டியை வாங்கி வர, காரில் அமர்ந்தப்படியே இருவரும் உண்டனர். வேக வேகமாக அவள் சாப்பிடுவதில் இருந்தே அதிகமான பசியில் இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது.


அவள் சீக்கிரமே சாப்பிட்டு முடித்து விட்டதை கவனித்தவன், 


"இன்னும் வேணுமா? வாங்கிட்டு வரவா?" எனக் கேட்க,


"இல்லை, இல்லை வேண்டாம் போதும், வீட்டுக்கு போலாம். அஞ்சலி தனியா இருப்பா" என்றதும் அவனும் சரியென்று கூறி அங்கிருந்து புறப்பட்டான்.


மீண்டுமொரு அமைதியான பயணம். 


“இந்த பெர்த்டே என்னால் மறக்கவே முடியாத ஸ்பெஷல்டேவா மாறிடுச்சு. எல்லாம் உன்னால் தான். காலையில் அம்மாவும், அப்பாவும்  என்ன சொல்லி விஷ் பண்ணாங்கன்னு தெரியுமா?


நெக்ஸ்ட் பெர்த்டே உன்னோட வைப் கூட தான் செலிபிரேட் பண்ணணும்னு. சோ, அப்போ அடுத்த ஒன் இயர்க்குள் நமக்கு மேரேஜ் நடந்திடும்”


என கண்களில் காதல் மின்ன கூறியவனை கண்டு அத்தனை வேதனையாக இருந்தது அமிர்தாவிற்கு.


“நீங்க சொல்றது எல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்களா?”

என விழிகள் கலங்க கேட்டவளை புன்னகையுடன் திரும்பி பார்த்தவன், 


“நான் கனவு காணல. நம்பிக்கையா சொல்றேன்”


“எதை வச்சு?”


“இதோ, இந்த அர்த்த ராத்திரியில், எந்த நம்பிக்கையில், என்கூட வந்துட்டு இருக்கியோ, அந்த நம்பிக்கையை வச்சு”

என்றவனை அத்தனை பிரமிப்பாய் பார்த்தாள் அமிர்தா.


இந்த அளவிற்கு ஒருத்தனால் அவள் காதலிக்கப்படுவாள் என்று கனவிலும் நினைக்கவில்லையே!! நனைய விருப்பம் இல்லாதவர்கள் மேலேயும், இந்த மழை துளிகள் விழத்தானே செய்யும்!! அதுதானே இயற்கை!!


 அமிர்தாவின் இல்லம் அருகே காரை நிறுத்தியவன்,


“அமிர்தா” என அழைக்க, அவளோ, அவனை நிமிர்ந்து பார்த்தாள்.


“வீடு வந்துடுச்சு” என்றதும், இறங்கி கதவை சாற்றியவள், 


“நான் வரேன்” என கூறிவிட்டு திரும்ப, மீண்டும் அவளை அழைத்து நிற்க வைத்தான். அவள் கையில் ஒரு பார்சலை கொடுத்தவன்,


“நீ உன் தங்கச்சியை மறக்கலாம், ஆனால் என்னால் என் தங்கச்சியை மறக்க முடியாதே!! அஞ்சலிக்கு தான் கொடுத்துடு”


என்றவன் அவளை பார்க்க, அவனுக்கு பதில் என்ன சொல்ல வேண்டும் என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவளே மறந்து போய் இருக்க, அஞ்சலியை அவன் நியாபகம் வைத்து உணவை வாங்கி கொண்டு வந்தது நினைத்து உள்ளம் பூரித்து போனாள். ஆனால் அவனிடம் எதையும் காட்டவில்லை.


“குட் நைட் டா மா” என்றவன் அங்கிருந்து கிளம்ப, அமிர்தாவும் இல்லம் வந்து சேர்ந்தாள். அஞ்சலியிடம் அவன் வாங்கி கொடுத்த உணவை கொடுக்க, அவளும் உண்ட பின் இருவரும் உறங்க செல்ல, அமிர்தாவிற்கு தூக்கம் தூர தான் போனது. ஆரவ்வின் நினைவு மட்டுமே அவளை முழுக்க முழுக்க ஆக்கிரமித்து இருந்தது. அதே நிலை தான் ஆரவ்விற்கும். அவளே அருகில் இருப்பது போல தனியாக பேசி கொண்டிருந்தான்.


முரண்பாடான இதயங்களை முடிச்சு போட, இந்த காதல் அத்தனை மெனக்கெட தானே வேண்டும்!! அவர்களின் காதலும் ஒவ்வொரு நொடியும் போராடுகிறது.


என்னை சுற்றி ஆயிரம் பேர் இருந்தாலும்,

என் மனம் அத்தனை சாந்தமாக 

இருக்கிறது.

ஆனால்,

நீ அருகில் இருக்கும் பொழுது,

எனது ஒவ்வொரு நொடியும்

உன் பெருங்காதலாலும், பேரன்பினாலும்,

திருவிழா போல கொண்டாட்டமாக உணர்கிறதே!!

என்ன தான் ஆச்சு இந்த மனதிற்கு?!!

,

,

,

உன் மீது காதல் வந்துவிட்டது அவ்வளவு தான்!!


பிடிக்கும்..






























Comments