UNEP-18

 அத்தியாயம்..18


 முதல் முறை உன்னை பார்த்தது     

 எங்கே…மனதும் தேடும்…

மழை நின்ற பின்னும் மரகிளை இங்கே… மெதுவாய் தூரும்…


இதயத்தின் உள்ளே…

இமயத்தை போலே…

சுமைகளை வைத்தால் காதல்…

உலகத்தில் உள்ள…

சித்ரவதைகெல்லாம் செல்ல…

பெயர் வைத்தால் காதல்…

என நா. முத்துக்குமார் அமிர்தாவின் மனதினை அப்படியே வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்தார், அந்த ஏகாந்த நிலவின் இரவில்.

ஆரவ்வின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரம், நேரத்தை போக்க, வழி தெரியாது பாடலை ஒலிக்க விட்டதும், அவள் மனதினை எடுத்து காட்டுவது போலவே அமைந்தது இந்த பாடல். அந்த காதல் கானத்தில் சுகமாய் லயித்தப்படி நேரத்தை கடத்தினாள் அமிர்தா.

மாலை மறைந்து இரவும் வந்து விட்டிருந்த நிலையில், அலுவலகத்தில் இருந்தவர்கள் புறப்பட்டு சென்று விட்டிருக்க, அமிர்தா மட்டும் அங்கேயே இருந்தாள்.

அதனை கவனித்த, மாணிக்கம்,

“அமிர்தா மா, இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா” என்று கேட்டதும், அமிர்தாவும்,

“இல்ல மாணிக்கம் ண்ணே. ஆரவ் சார் வரதா சொல்லி இருக்கார். அவருக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள் நிறைந்த புன்னைகையுடன்.

“ஒஹ்ஹ் அப்படியா!! எப்போ வருவார்னு ஏதாவது தெரியுமா மா!! ஏன் கேட்கிறேன்னா, இப்பவே நேரமாச்சே அதான்”

என இழுக்க, அவர் என்ன நினைக்கிறார் என்பதை அமிர்தாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

“அண்ணே, உங்களுக்கு நேரமாச்சுன்னா நீங்க கிளம்புங்க. நான் இருந்து பார்த்துட்டு போறேன்,” என்றவளுக்கு,

“இல்லை மா, நீ எப்படி தனியா இருப்ப, இன்னும் கொஞ்ச நேரத்தில் பக்கத்து ஆபீஸ் எல்லாம் மூடிடுவாங்க, இந்த ஏரியாவே ஆள்நடமாட்டம் இல்லாமல் போய்டும். உன்னை தனியா விட்டுட்டு நான் எப்படி போறது மா” என இருக்கும் நிலவரத்தை கூறினார் மாணிக்கம்.

“அண்ணே, நான் தான் சொல்றேனே, அவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துடுவார்.  எப்பவோ பிளைட் ஏற போறேன்னு சொன்னார். அனேகமாக பிளைட் லேட் ஆகி இருக்கும் போல. போனும் போக மாட்டேங்குது. நான் அவரை பார்த்துட்டு தான் கிளம்புவேன். அதனால்  நீங்க வீட்டுக்கு போங்க” என்று கூறியதும், அவரோ தயங்கி நின்றார்.

“என் பொண்ணை இன்னைக்கு வெளியில் கூட்டிட்டு போறதா சொல்லி இருந்தேன். அதுக்கு தான் சீக்கிரம் கிளம்பலாம் பார்த்தேன் மா. ஆனால், உன்னை தனியா விட்டுட்டு போகவும் மனசு வரல. இருக்கவும் முடில.  உன்னை தனியா விட்டுட்டு போனா ஆரவ் சார் வேற வந்து திட்டுவார். அதான் என்ன பண்றதுனு புரியாமல் இருக்கேன்” 

என அவர் தன் நிலைமையை கூற,

“அண்ணே,  நான் கொஞ்ச நேரம் இருந்து பார்க்கிறேன். அப்பவும் அவர் வரலைன்னா கிளம்பிடுவேன். அதனால் பயப்பட வேண்டாம். அவர் வந்துட்டாலும் நான் சொல்லிக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க. உங்க பொண்ணு உங்களுக்காக காத்திருப்பா தானே!! இது போல சின்ன சின்ன சந்தோஷங்கள் தானே நம்ம வாழ்க்கையை அழகா மாத்தும். அதையெல்லாம் ஒதுக்கவே கூடாது. கிளம்புங்க”

என்று கூறி, அவரை அங்கிருந்து புறப்பட சொல்ல, அவரும் அவளுக்கு ஆயிரம் பத்திரங்களை கூறிவிட்டே அங்கிருந்து புறப்பட்டார்.

அதன் பின் நிசப்தமான இரவை, ஆரவ்வின் நினைவுகளை நிரப்பியப்படி கழித்தாள் அமிர்தா. நேரம் சென்று கொண்டிருந்ததே தவிர, ஆரவ் வரும் வழி தெரியவில்லை. சாலையே ஆள் நடமாட்டம் இல்லாது இருக்க, இதற்கு மேல் இங்கு இருப்பது நல்லதல்ல என்று முடிவுக்கு வந்தவள், வீட்டிற்கு கிளம்பலாம் என்ற அனைத்தையும் எடுத்து வைக்க, அந்த நிசப்தமான நிலையை நிலைகுலைய வைப்பது போல், கார் ஒன்று புழுதி பறக்க வந்து நின்றது அலுவலகத்தின் வாசலில்.

காரின் நிறுத்தத்தால் உண்டான சத்தம் அலுவலகத்தின் உள்ளே இருந்தவளை திடுக்கிட செய்ய, அவசரமாக வெளியே ஓடிவந்து பார்த்தாள் அமிர்தா.

வந்தது யாரென்று?, என பார்க்க, முதலில் காரின் உள்ளே இருந்து, இறங்கினார் ராமமூர்த்தி. அவரை தொடர்ந்து, அவரது கையாள் போலும், இரண்டு தடிமாடுகள்  போன்ற உருவம் கொண்டவர்கள் இறங்க, அவர்களை பார்த்ததும் அனிச்சையாக பயம் வந்து ஒட்டிக்கொண்டது அவளுக்கு.

அமிர்தாவின் அருகில் வந்த ராமமூர்த்தி, 

“வணக்கம், ஏஜே சார் இருக்காரா?” என இருகை கூப்பி அவளுக்கு வணக்கம் தெரிவித்தப்படி கேட்க, அவளோ

“இல்.. லை, அவ.. அவர்.., மும்பைக்கு போய் இருக்கார்” என்றாள் திக்கி திணறியப்படி.

“ஒஹ்ஹ்.., ஒரு முக்கியமான விஷயமா அவரை பார்க்க வந்தேன், எப்போ வருவார்னு தெரியுமா?”

“அது…இப்.. இப்போ வரதா சொன்னார் . இன்னும்.. வரல”  என்று கூறியவளுக்கு உள்ளுக்குள் அத்தனை உதறல் எடுத்தது.

“அப்போ சரி, வெயிட் பண்ணி பார்த்துட்டே போறேன். டேய் வாங்க டா, உள்ளே போய் உட்காருவோம்” என்று கூறியவர், உள்ளே சென்று அலுவலகத்தில் உள்ள காத்திருப்பு அறையில் அமர்ந்து கொண்டார். அவருக்கு துணையாக வந்த இருவரும் உள்ளே செல்லும் பொழுது, அமிர்தாவை முறைத்து கொண்டே  செல்ல, அமிர்தாவிற்கோ பயப்பந்து உருள ஆரம்பித்தது.

அடுத்து என்ன செய்வது என்று புரியாது, உள்ளே செல்ல, சிறிது நேரம் சுற்றும் முற்றும் பார்த்த, ராமமூர்த்தி அமிர்தாவிடம்,

“ஏன் மா, உங்க ஆபீஸ்க்கு வந்து இருக்கோம், ஒரு டீ, காபி கூட தர மாட்டீங்களா?” என்று கேட்க, அவளுக்குமே அப்பொழுது தான் உரைத்தது. யார் வந்தாலும், அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு கொடுப்பது அந்த அலுவலகத்தின் பழக்கம்.

“என்ன வேணும்?” என்று கேட்க, அவரோ, காபி என்றார். அவளும் மூவருக்கும் காபி தயாரிக்க, அதற்கான இடத்திற்கு செல்ல, ராமமூர்த்தியோ, 

“கப்பை நல்ல கழுவிட்டு போடு மா. ஏன்னா நான் கொஞ்சம் சுத்தமானவன்” என்று அவளிடம் கூறியவர், வந்திருந்த இருவரிடமும் கண் ஜாடை காட்டிவிட்டு, பாத்ரூம் நோக்கி சென்றார். அங்கே சென்று, கண்ணாடி பதித்த, வாஷ் பேஷன் முன்பு நின்று முகத்தை அலும்பி கொண்டு வர, அதன் பின் அமிர்தா அங்கு சென்று, காபி கப்புகளை கழுவி எடுத்து வந்தாள்.

மூவருக்கும் காபி தயரித்தவள், கொண்டு வந்து கொடுக்க, அதனை வாங்கியவர்கள் பருக ஆரம்பித்தனர். ஆரவ்வின் வருகையை எதிர்பார்த்து அமிர்தாவின் பார்வையோ, வாசலையே தொட்டு தொட்டு மீண்டது. அதனையும் கவனித்து கொண்டு தான் இருந்தார் ராமமூர்த்தி.

காபியை பருகியவர், திடீரென கையின் விரல்களை  திருப்பி, திருப்பி பார்த்துக் கொண்டே,

“டேய், செல்வம்? முகம் கழுவும் போது, மோதிரத்தை வாஷ் பேஷன் மேலேயே கழட்டி வச்சுட்டேன். போய் எடுத்துட்டு வாடா”

என கட்டளையிட, அந்த அடியாளும், அந்த இடத்திற்கு சென்று தேடிப் பார்த்து விட்டு,

“ஐயா, இங்கே எதுவும் இல்லையே!!” என்றான்.

“என்னது? இல்லையா?!! நல்ல தேடி பாரு டா. என் பம்பரை மோதிரம் டா அது. கீழே எங்கயாச்சும் விழுந்திருக்க போது,” என்றவர், நின்றிருந்த இன்னொரு நபரிடம், 

“டேய் நீயும் போய் தேடு டா, அவனுக்கு சும்மாவே பகல்யே கண்ணு தெரியாது. இப்போ சுத்தம். தண்ணிய போட்டுட்டு தேடிட்டு இருப்பான்.நீ பார்த்து எடுத்துட்டு வா, ” என்றவர், அமிர்தாவை பார்க்க, அவளோ இங்கு என்ன நடக்கிறது என்பது புரியாது படப்படக்கும் மனதுடன் நின்றிருந்தாள்.

“சார், எங்கே தேடியும் கிடைக்கல” என இருவரும் வந்து ஒரு சேர கூற, ராமமூர்த்தியோ, 

“அங்க வச்ச மோதிரம் எங்கே போகும்?  இங்க இருக்கிறதே நாம நாலு பேர் தான். வெளியில் இருந்து வந்து எடுத்துட்டு போக வாய்ப்பில்லை, அப்போ நாம நாலு பேரில்  யாரோ ஒருத்தர் தான் அதை எடுத்து வச்சு இருக்கணும். மோதிரம் என்னோடது, நான் எடுக்கல. அதனால் நீங்க மூணு பேரில் யாரோ ஒருத்தர் தான் திருடி இருக்கீங்க. ஒழுங்கா சொல்லுங்க யார் எடுத்தது?” என அமிர்தாவையும் சேர்த்து சொல்ல, அவளோ அதிர்ந்து போய் அவரை பார்த்தாள்.

“சார், நான் உங்க மோதிரத்தை பார்க்கவே இல்லை. என்னை எதுக்கு சொல்றீங்க? நீங்க நல்ல தேடி பாருங்க”

என அமிர்தா படப்படக்க, மற்ற இருவரும்,

“ஐயா, நாங்க எவ்வளவு வருஷமா உங்ககிட்ட வேலை பார்க்கிறோம். எங்களை பத்தி உங்களுக்கு தெரியாதா? நாங்க எதுக்கு எடுக்க போறோம். அதுவுமில்லாமல், வந்ததிலிருந்து, இந்த இடத்தை விட்டு நாங்க அசைவே இல்லையே!! நீங்க போனீங்க, அதுக்கப்புறம் இந்த பொண்ணு தானே அந்த இடத்துக்கு போச்சு. நாங்க இங்கேயே தானே இருந்தோம்”

என கோர்வையாக விளக்கம் கொடுக்க, அமிர்தாவோ பயந்து போய் பார்த்தாள் அவர்களை.

“இல்ல.. இல்ல.., நான் உங்க மோதிரத்தை பார்க்கவே இல்ல. வீணா என் மேலே பழிபோடாதீங்க. நான் அவருக்கு கால் பண்றேன். எதுவா இருந்தாலும் அவர் கிட்ட பேசிக்கோங்க” என்றவள் உடனே அலைபேசியை எடுத்து ஆரவ்விற்கு அழைக்க போக, அவளது அலைபேசியை சட்டென்று பறித்தார் ராமமூர்த்தி.

அவரை அமிர்தா அதிர்ந்து பார்க்க,

“இரு.. இரு என்ன அவசரம்? பொறுமையா உன் அவருக்கு கால் பண்ணலாம். தப்பு பண்ணிட்டு தப்பிக்கலாம் பார்க்கிறியா? இதோ பாரு, வாஷ் பேஷன் கிட்ட நான் முதலில் போனேன். அடுத்து நீ தானே போன, அப்போ அங்கே வச்ச மோதிரத்தை நீ தானே எடுத்து இருப்ப!!  மோதிரத்தை எடுத்து இருந்தா கொடுத்துடு. நான் ஒன்னும் செய்ய மாட்டேன்”

என்றதும், அவளுக்கோ அழுகை முட்டி கொண்டு வந்தது.

“ஐயோ நான் சொல்றதை நம்புங்க. நான் அங்கே கப் கழுவ தான் போனேன். உண்மையாவே உங்க மோதிரத்தை நான் பார்க்கவே இல்லை. திருடற பழக்கம்லாம் எனக்கில்லை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும், அடுத்தவங்க பொருளுக்கு நான் ஆசைப்பட்டதே இல்லை”

என அழுகையுடனே கூறியவளிடம்,

“அப்படியா!! அப்போ சரி, நான் கேட்டாலாம் ஒழுங்கா உண்மைய சொல்ல மாட்ட, கேட்கிறவங்க வந்து கேட்டா, உண்மை தானா வந்துற போது”

என அவளுக்கு பயம் காட்டியவர், 

“டேய் செல்வம் போலீஸ்க்கு போன் பண்ணு டா. அவங்க வந்து நாலு தட்டு தட்டி கேட்டா, உண்மைய சொல்லி தானே ஆகணும். போடுடா போனை” என ஆணையிட்டவர்,  வந்து இருக்கையில் அமர்ந்து, அவளையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தார்.

காவல்துறை என்றதும் இயற்கையாகவே வரும் பயம், அவளையும் தொற்றி கொள்ள, 

“சார், சார், போலீஸ்லாம் வேண்டாம், சத்தியமா நான் திருடல. அதை நான் பார்க்கவே இல்லை. என்னை விட்டுடுங்க” என அழுகையுடனே கெஞ்ச, அவரோ அவள்  அழுகை எனக்கு எந்த பாதிப்பும் தரவில்லை என்பது போல தான் பார்த்திருந்தார்.

தன்னை நம்ப மறுகின்றனரே என்று வேதனை கொண்டவள், இங்கிருப்பது நல்லதல்ல, என அங்கிருந்து வெளியே வர பார்க்க, அதற்குள் அங்கிருந்து இரு அடியாளும் அவளை அணை போட்டப்படி நின்று அவள் செல்ல தடை போட்டனர்.

அவர்களை பார்த்து அதிர்ந்தவள், ராமமூர்த்தியை பார்க்க,

“என்ன? மோதிரத்தை திருடிட்டு எஸ்கேப் ஆகலாம் பார்கிறீயா?!!  தப்பு செய்யலைனா எதுக்கு ஓட பார்க்கணும். அப்போ நீதான் எடுத்து இருக்க”

என மீண்டும் மீண்டும் அவளை குற்றவாளி ஆக்க முயற்சி செய்தார்.

“ஐயோ, நான் தான் திருடலனு சொல்றேன்லே, ஏன் நம்ப மாட்டேன்கிறீங்க. அவருக்கு ஒரே ஒரு போன் பண்ணிக்கிறேன். போனையாவது என்கிட்ட கொடுங்க”

என அவள் எவ்வளவு கெஞ்சியும் அவருக்கு இரக்கம் பிறக்கவில்லை. சொல்லி வைத்தார் போல், அடுத்த பத்தாவது நிமிடம் காவல்துறையினர் அங்கு வர, அமிர்தாவோ வெடவெடுத்து போனாள்.

“வாங்க மேடம், வாங்க” என அங்கு வந்த பெண் காவலாளியை ராமமூர்த்தி வரவேற்க, அவரும், கண்ணீரும் கவலையுமாய் நின்றிருந்த  அமிர்தாவை பார்த்தப்படியே, 

“என்ன சார்? என்ன பிரச்சனை?” என விசாரித்தார்.

“இது டைரக்டர் ஏஜே இருக்கிறார்ல, அவரோட ஆபீஸ்” என ராமமூர்த்தி தொடங்க,

“தெரியும். மேலே சொல்லுங்க சார்” என்றார் பெண் காவலாளி.

“இந்த பொண்ணு இங்க தான் வேலை பார்க்குது. நான் ஒரு முக்கியமான விஷயமா, ஏஜேவை பார்க்க வந்தேன். அவர் இங்க இல்லை. மும்பைக்கு போய் இருக்கார்னு தெரிஞ்சது. இப்போ தான் அவர் ரிட்டர்னு கேள்வி பட்டோம். சரி பேசிட்டு போயிடலாம் ஆபீசிக்குள் வந்தா யாரும் இல்லை. யாருமில்லாத ஆபீசில் இந்த பொண்ணுக்கு என்ன வேலை? சந்தேகமா இருந்தது. சரி கொஞ்ச நேரம் இருந்து இந்த பொண்ணை கவனிக்கலாம்னு உட்கார்ந்து இருந்தேன். ரொம்ப டையார்ட்டா, இருக்கவே, காபி போட சொன்னேன். கூடவே பேஸ் வாஷும் பண்ணிட்டு வந்துடலாம்னு, போனப்போ வாஷ் பேஷன் மேலே  என் மோதிரத்தை கழற்றி வச்சுட்டு பேஸ் வாஷ் பண்ணேன். மோதிரத்தை அங்கேயே மறந்து வச்சுட்டு வந்துட்டேன். இப்போ பார்த்தா மோதிரத்தை காணும். 

இந்த பொண்ணு தான் எனக்கு அப்புறம் அங்கே போனது. அப்போ இந்த பொண்ணு தானே எடுத்து இருக்கணும். மோதிரத்தை, யாருக்கும் தெரியாமல் எடுத்து வச்சுட்டு, நான் எடுகலைன்னு பொய் சொல்லுது.

அதான் உங்களுக்கு போன் பண்ணேன். இங்க எங்க நாலு பேரை தவிர வேற யாரும் இல்லை. நாங்க மூணு பேரும் எடுக்கல. அப்போ இந்த பொண்ணு தானே எடுத்து இருக்கும். நீங்களே விசாரிச்சு என் மோதிரத்தை வாங்கி கொடுங்க”

என அவள் மேல் முழு பழியையும் போட, விக்கித்து போனாள் அமிர்தா.

“இல்ல மேடம்.., நான் அந்த மோதிரத்தை எடுக்கல. நான் அதை பார்க்க கூட இல்லை. வீணா என் மேலே பழி போடுறார். நான் அப்படிபட்ட பொண்ணு இல்ல. என்னை நம்புங்க”

என அவள் மீண்டும் மீண்டும் தன்னை குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க போராட, காவலாளியோ,

“சரி மா,  நீ எடுகலைன்னா அந்த மோதிரம் எங்க போய் இருக்கும்? இவர் சொல்றத வச்சு பார்த்தா, நீ தான் எடுத்தது போல தெரியுது. ஒருவேளை எடுத்து இருந்தா ஒழுங்கா கொடுத்துடு. இல்லை, நாங்க விசாரிக்கிற விதமே வேறைய இருக்கும்" என மிரட்ட, அவளுக்கு பயத்தில் பேச்சே வரவில்லை.

“எடுத்து இருந்தா கண்டிப்பா அவ பேக்குல தான் வச்சு இருப்பா, அதை செக் பண்ண சொல்லுங்க," என ராமமூர்த்தி கூற, காவலாளியும், 

“சரி, உன் பேக்கை காட்டு, அதில் இருக்கான்னு செக் பண்ணுவோம். நீ திருடி இருக்கியா? இல்லையான்னு தெரிஞ்சுட போது” என்றவர் அவளது கைப்பையை எடுக்க,

“நான் தான் சொல்றேனே அவர் மோதிரத்தை நான் பார்க்க கூட இல்லைனு. அப்புறம் அதில் எப்படி இருக்கும்” 

என்றவள் அவர்களிடம் போராட முடியாமல்  சோர்ந்து போய் விட்டாள்.

“நீதான் எடுகலைன்னு சொல்றல அப்போ பேக்கை செக் பண்ண விடு. தப்பு பண்ணலைனா எதுக்கு பயப்படனும்” என்றவர் அவளது கைப்பையை கவிழ்த்து கொட்ட,  அவளுடைய பொருட்கள் எல்லாம் வந்து விழுந்தது கூடவே, ராமமூர்த்தியின் காணாமல் போன மோதிரமும் வந்து விழ, காண்பது கனவா? நனவா என்ற அதிர்வுடன் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தாள் அமிர்தா.

“ராமமூர்த்தியோ,  பார்த்தீங்களா!! இவ்வளவு நேரம் எடுகலைன்னு சொன்னா, இப்போ பாருங்க அவ பேக்கில் இருந்து மோதிரம் விழுது”

என்று காவலாளி யிடம் கூறியவர், அமிர்தாவின் புறம் திரும்பி,

“இப்போ என்ன சொல்ற?” என நக்கலாக கேட்டார்.

“இல்ல சார், சத்தியமா  சொல்றேன், நான் மோதிரத்தை எடுக்கவே இல்லை. நான் திருடி இல்லை. என்னை நம்புங்க” என கதறுவதை தவிர அவளுக்கு வேறு வழி தெரியவில்லை.

“திருடி பேக்குள்ள வச்சுட்டு, இல்லைன்னு இல்லைன்னு நல்லவ வேஷம் போடுற. எனக்கு தெரியாது, உங்களை பத்தி. 

இந்த ஆரவ் கிட்ட அப்பவே சொன்னேன், இது போல லோகிளாஸ் ஆளுங்களை எல்லாம், வேலைக்கு வைக்காதேன்னு. இப்போ பாரு, கொஞ்ச நேரத்தில் மோதிரத்தை திருடி இருக்கா!! இவளை நம்பி ஆபீஸை வேற விட்டுட்டு போய் இருக்கான். இன்னும் எவ்வளவு பொருளை திருடி வச்சு இருக்கிறாளோ?!! யாருக்கு தெரியும்!!. 

இவளையெல்லாம் சும்மாவே விடக்கூடாது, நீங்க ஸ்டேஷன் கூட்டிட்டு போய் நல்ல விசாரிங்க மேடம்”

என ராமமூர்த்தி தான் போட்டு வந்த திட்டத்தை அழகாய் அரங்கேற்ற, மொத்தமாய் அவரின் சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டு, அதிலிருந்து தப்பிக்க வழிதெரியாது தவித்து போய் நின்றிருந்தாள் அமிர்தா.

“இல்ல, நான் திருடல, நான் வரமாட்டேன். என்னை விட்டுடுங்க," என அவள் கத்தி கதற, காவலாளியோ,

“கையும் களவுமா பிடிச்ச பின்னாடி கூட, செய்யலன்னு பொய் சொல்றியா, ஒழுங்கா வண்டியில் ஏறு. இல்லை அடிச்சு இழுத்துட்டு போக வேண்டி வரும்”

என்று மிரட்ட, அதற்குள் அவளை, கூட வந்த மற்ற இரண்டு பெண் காவலர்கள் பிடித்து கொண்டனர்.

“விடுங்க, என்னை விடுங்க. நான் எங்கேயும் வர மாட்டேன். நான் எந்த தப்பும் பண்ணல. நான் மோதிரத்தை திருடல. பிளீஸ”

என அவள் மன்றாட, அங்கிருந்த ஒருவருக்கும் அவள் மேல் இரக்கம் பிறக்கவில்லை.

அவர்களின் பிடியில் இருந்து திமிறிய, அமிர்தாவை, வலுகட்டயமாக இழுத்து வந்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர்.

அவளை இழுத்து சென்றதை கண் குளிர பார்த்த, ராமமூர்த்தி, அந்த பெண் காவலாளியிடம்

“இனிமேல் நீங்க பார்த்துக்கோங்க. நான் சொன்னது நினைவிருக்கட்டும்”

என்று கூற, அவரும்,

“எல்லாம் நான் பார்த்துகிறேன். நீங்க கவலைப்படாமல் போங்க சார்” என நம்பிக்கை கொடுத்தவர், சிரித்து கொண்டே, காவலர் வாகனத்தில் வந்து ஏறிக்கொள்ள வாகனமும், காவல் நிலையத்தை நோக்கி புறப்பட்டது.

அமிர்தாவின் கண்ணீரோ, கதறலோ, எதுவுமே அவர்களை அசைத்து பார்க்கவில்லை. வாகனத்தில் செல்லும் அமிர்தாவை குரூரமாக பார்த்த ராமமூர்த்தி, வெஞ்சினதுடன் சிரித்தப்படி,

“வந்த வேலை நல்ல படியா முடிஞ்சது. வாங்க டா கிளம்பலாம்”

என தன் கையாளிடம் கூறியவர் அவர்களுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

காவல் நிலையத்தின் முன்பு வாகனம் வந்து நின்றதும், அவளை, உள்ளே அழைத்து செல்ல, அமிர்தாவோ, காவல்நிலையத்தை கண்டதும், நடுநடுங்கி போனாள். இதற்கு முன் காவல் நிலையம் என்ற ஒன்றை அவள் கண்ணால் கூட கண்டதில்லையே!!

“நான், வர மாட்டேன், நான் எந்த தப்பும் பண்ணல. என்னை விடுங்க” என கதறி அழ, அவளை கூட்டி வந்த காவலர்களோ, 

“நகையை திருடி வச்சுட்டு, திருடல திருடலனு கத்தி ஆர்ப்பட்டாமா பண்ணிக்கிட்டு இருக்க. ஒழுங்கா அமைதியா இருந்தா உனக்கு நல்லது. இல்லை அடி பின்னிடுவோம் பார்த்துக்கோ” என மிரட்டி, அவளை உள்ளே இழுத்து வந்தனர்.

தற்பொழுது தான் முதல் முறையாக ஒரு காவல்நிலையம் உள்ளே எப்படி இருக்கும் என்று மருண்ட விழிகளால் சுற்றும் முற்றும் பார்க்க, அவள் முன்னே வந்து நின்றார், அந்த பெண் காவலாளி.

“ஏய், இப்படி ஒன்னும் தெரியாத அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுட்டு தானே மோதிரத்தை திருடின. இப்பவும் இப்படியே மூஞ்சியை வச்சுகிட்டா, உன்னை ஒன்னும் கேட்க மாட்டோமோ”

என்ற அவரின் கர்ஜனையில், அவளுக்கோ தூக்கி வாரி போட்டது.

“மே.. டம், நா.. ன் திருடி இல்.. ல. அந்..த.., மோ.. மோதிர… த்தை நா.. ன் எடுக்க..கல,” என அவள் திக்கி, திக்கி கூற, அந்த காவலாளியோ,

“நானும் பார்த்துட்டே இருக்கேன். சும்மா சொன்னதையே சொல்லி என்னை வெறுப்பேத்திட்டா இருக்க”

என கோபமாக உரைத்தவர், அவள் கன்னத்திலே ஓங்கி அறைய, அறைந்த வேகத்தில் ஒரு சுழன்று சுற்றி தூர போய் அமிர்தா விழவும், தன்னுடைய அலுவலகத்தின் உள்ளே சிதறிய அமிர்தாவின் பொருட்களை ஆரவ் கண்டு அதிர்ச்சியாகவும் சரியாய் இருந்தது.

இதயங்களால் இணைந்த மனதிற்கு இடைவெளியும் இணைவை தரும் பாலம் தானே!!  ஆரவ் ஜெயந்தனையும், அமிர்தாவையும் இந்த பாலம் இணைவை தருமோ?!! இல்லை இடைவெளியை தருமோ?!! யார் அறிவார்?!!



என் கருப்பு நிற காதலுக்கு

வண்ணம் பூசி அழகு பார்க்கும்

என் மின்மினி பூச்சிக்கு

என்ன சொல்லுவேன் நான்?

இணைய முடியாத காதலில்

தானே இந்த காதல் வாழ்கிறது

சரித்திரம் மாறுமா???



பிடிக்கும்..






















Comments