UNEP-21

 அத்தியாயம்..21

 

            ஊடகவியாலாளர்களை சந்தித்து முடித்ததும், நேராக மீண்டும் மருத்துவமனை உள்ளே வந்த ஆரவ், அதே இடத்தில் சென்று அமர்ந்து கொண்டு, சிகிச்சை நடக்கும் அறையை வெறித்து பார்த்து கொண்டிருந்தான்.


மனதின் அழுத்தம் நொடிக்கு நொடி அதிகரித்து கொண்டே இருக்க, வாய்விட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. இருந்தும் பொது இடம் கருதி அத்தனையையும் அடக்கி கொண்டு அமர்ந்திருந்தான்.


அவன் மனம் வெகுவாக தந்தையின் அரவணைப்பை தேடியது. இதுவரை அவன் எதற்கும் கண்ணீர் சிந்தியதே இல்லை. அந்தளவிற்கு அவனது தாயும், தந்தையும் சிறு விஷயத்திற்கு கூட வருத்தப்படாதவாறு பார்த்து பார்த்து வளர்த்து இருந்தனர். முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் கூட தந்தையின் முன் போய் நின்றால் போதும், அவனுக்கு தோள் கொடுத்து  நல்வழிப்படுத்துவார். இன்று கண்ணீர் சிந்துகிறான். தற்பொழுது மனதின் பாரம் இறங்க, தந்தையின் தோளை தான் எதிர்பார்த்தான் ஆரவ் ஜெயந்தன்.


“ஆரவ்.., ஆரவ் கண்ணா” என அவனது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காது, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர் பாலகிருஷ்ணாவும், நிர்மலாவும்.


அவர்களை கண்டதும், துள்ளி எழுந்து ஓடியவன், 


“அப்பா..” என பாலகிருஷ்ணனை தாவி வந்து கட்டிக்கொண்டான். அத்தனை நேரம் அடக்கி வைந்திருந்த தன் துக்கத்தை அவர் தோள் சாய்ந்து கொட்டி தீர்த்தான்.


ஒருவரை எந்தளவிற்கு நேசித்து இருக்கிறோம் என்பது, அவர்களுக்காக நாம் விடும் கண்ணீரே சொல்லி விடும் அல்லவா!!


“இட்ஸ் ஓகே ஆரவ், ஒன்னும் இல்லை. பார்த்துக்கலாம்”  என கதறும் மகனுக்கு பாலகிருஷ்ணன் ஆறுதல் வழங்க, அவனோ,


“அப்பா.. அமிர்தா.., அமிர்தாவுக்கு இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. என்னால் தான் அவளுக்கு இந்த நிலைமை. முழுக்க முழுக்க நான் தான் காரணம். 


அவ சின்ன குழந்தை மாதிரி ப்பா. உலகமே தெரியாது. எல்லாரையும் உடனே நம்பிடுவா. அவளை போய்..,  அடிக்க எப்படி தான் மனசு வந்ததோ? அவளை நீங்க பார்க்கலையே, முகமெல்லாம் வீங்கி, எல்லா இடமும் கன்னி போய், அவனால் பேசவே முடியல. நடக்க முடியல. அங்கங்கே ரத்தம் வேற வந்துச்சு ப்பா. 


அவ உடம்பு சரியிலைன்னா கூட ஒரு இன்ஜெக்ஷன் கூட  போட மாட்டா. கேட்டா வலிக்கும்னு உதட்டை பிதுக்கி சின்ன குழந்தை போல சொல்லுவா. இப்படி அடிச்சு இருக்காங்க, அவளால் எப்படி வலி தாங்கி இருக்க முடியும்? எவ்வளவு கதறி இருப்பா? நினைக்க நினைக்க என்னால் முடியல ப்பா. என்னால், தான்.., நான் தான்,”


என ஒவ்வொன்றாக கூறி அழுதவனின் கண்ணீர் பாலகிருஷ்ணனின் தோளை நனைத்தது.


“ஆரவ்..ரிலாக்ஸ். இப்படி நீ அழுவறதுனாலும், உன்னையே நீ காரணம் காட்டிக்கிறதுனாலும், உன்னோட குற்றஉணர்ச்சி தான் அதிகமாகுமே தவிர, வேற எதுவும் மாறிடாது.


அமிர்தாவுக்கு இப்படி நடந்திருக்க வேண்டாம், ஆனால் நடந்து போச்சு. இனிமேல் எதுவும் நடக்காமல் அவளை பொத்தி பாதுகாக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அதை மட்டும் யோசி. 


உனக்கு அழ தெரியும்ன்றதே எங்களுக்கு இன்னைக்கு தான் தெரியுது. எவ்வளவு அழனுமோ, எல்லாத்தையும் இப்பவே அழுது முடிச்சுடு. அமிர்தாவை பார்க்கும் போகும் போது, நீ தெளிவான மைண்டோட இருக்கணும். நீ அழுதா, அவளும் நடந்ததை நினைச்சு அழுவா. அதனால் ரெண்டு பேருக்கும் கஷ்டம் தான் அதிகமாகும். 


அவ கண்டிப்பா பயந்து போய் இருப்பா. அதனால் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு உன்னோடது. அதை மனசில் வச்சுக்கோ. அடுத்தடுத்து என்ன பண்ணலாம் யோசி. மைண்ட் பிரீயா இருந்தா தான் சரியா யோசிக்க முடியும். என் பையன் கண்டிப்பா சீக்கிரம் ரெகவர் ஆகிடுவான். ஹீ இஸ் அ வெரி பிரேவ் பாய்”


என அவனின் முதுகு தட்டி, அணைத்து தெளிவாக எடுத்துரைக்க, ஆரவ்வும் தந்தையின் வார்த்தைகளில் சற்றே தெளிந்தான். அவரை விட்டு விலகி, கண்களை அழுந்த துடைத்து கொண்டவன், 


“எஸ் ப்பா. நவ் அம் கிளியர். கண்டிப்பா அமிர்தாவை நான் பார்த்துப்பேன். அதேபோல அவளோட இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவங்களை நான் சும்மா விடவே மாட்டேன். அவ பட்ட வேதனை போலவே நாலு மடங்கு வேதனையை திருப்பி கொடுப்பேன்”


என உறுதியாக கூறியவனின் தோளில் தட்டி கொடுத்தார் பாலகிருஷ்ணா. மகன் தெளிவாகி விட்டான் என்பதே அவருக்கு போதுமானதாக இருந்தது.


“ஆரவ், யாரா இருந்தாலும் செய்த தப்புக்கான தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும். அமிர்தா நிலைமைக்கு காரணமானவங்களை சட்டத்தின் முன்னிறுத்தி அவங்களுக்கான தண்டனையை வாங்கி கொடு”

என பாலகிருஷ்ணன் அறிவுறுத்த,


“நிச்சயமா ப்பா. ஒருத்தரையும் நான் சும்மா விடுறதா இல்லை. ஆரவ் ரொம்ப சாப்ட், ஒன்னும் பண்ண மாட்டான்னு நினைச்சுட்டு இருக்காங்க. இனி தான் அவங்களுக்கு என்னோட இன்னொரு முகம் தெரிய போது பாருங்களேன்”

என அத்தனை தீர்க்கமாக கூறினான்.


நிர்மாலவும் ஆரவ் அருகில் நின்று அவனை தட்டி கொடுத்தார்.

“ஆரவ் கண்ணா, எல்லாம் சரியாகிடும். நீ அழாதே டா. என்னால் பார்க்கவே முடியல" எனக்கூற, அவனும், 


“இல்ல ம்மா, அழல. அம் ஓகே" என்றான்.


“அமிர்தாவுக்கு இப்போ எப்படி இருக்கு?" என்று நிர்மலா கேட்க,


 “ட்ரீட்மெண்ட் போய்ட்டு  இருக்கு மா. இன்னும் டாக்டர் எதுவும் சொல்லலை" என்றதும், மூவரும் மருத்துவரை எதிர்பார்த்து, அங்கிருந்த இருக்கையில் வந்து அமர்ந்தனர்.


இவர்கள் வந்ததை தொடர்ந்து, விஷயம் கேள்விப்பட்டு, அஞ்சலியும், சதாசிவமும் அறக்க பறக்க மருத்துவமனை நோக்கி ஓடி வந்தனர்.


அவர்கள் யாரென்று தெரிய பட்சத்தில், ஆரவ் இருக்கும் பகுதியில் உள்ளே நுழைய விடாது காவலர்கள் தடுத்து நிறுத்த, சதாசிவமோ,


“அவங்க நம்பர் உன்கிட்ட இருந்தா, போன் போடு அஞ்சலி. அமிர்தாவுக்கு என்னாச்சுன்னே தெரியல. பயமா இருக்கு”

எனக் கூற, அவளும் ஹரியின் அலைபேசிக்கு அழைத்தாள்.


ஹரியும் அவளது அழைப்பை தவறவிடாது ஏற்று,


“அஞ்சலி, என்னாச்சு? என்ன இந்த நேரத்தில் கூப்பிட்டு இருக்க?”

என கேட்டான்.


“தம்பி, நான் அஞ்சலியோட மாமா, சதாசிவம். என்ன தம்பி? என்னாச்சு அமிர்தாவுக்கு? டிவியில் ஏதேதோ சொல்றாங்க. பயமா இருக்கு. அதான் ஹாஸ்பிடல் வந்து இருக்கோம். உள்ளே விட மாட்டேன்கிறாங்க. கொஞ்சம் உள்ளே விட சொல்லுங்க தம்பி”

என அவர் கூற, ஹரியும்,


“இருங்க சார் வரேன்” என்றவன் நேராக ஆரவ்விடம் சென்று விஷயத்தை கூறினான். அவனும்,


“அவங்க வந்து கேட்டா, நான் என்ன பதில் சொல்றதுன்னே தெரியல ஹரி. அதுவும் அஞ்சலி முகத்தை என்னால் பார்க்கவே முடியாது. அவ்வளவு கில்டியா இருக்கு”

என வருத்தப்பட்டவன்,


“நீ போய் கூட்டிட்டு வா ஹரி. கேஷுவலா கூட்டிட்டு வர போல வா. இல்லைனா, மீடியா அவங்களை புடிச்சு வச்சுக்கிட்டு இன்டெர்வியூ பண்ணிட்டு இருப்பாங்க, நிலைமை தெரியாம”

என்று அவனை அனுப்பி வைக்க, ஹரியும் அவர்களை தேடி வெளியே வந்தான்.


அவர்களை கண்டதும்,  “உள்ள வாங்க” என அமைதியாக அழைத்து வர முயல, ஏதோ கேட்க வந்த சதாசிவத்தை, கைப்பிடித்து தடுத்தி நிறுத்தினாள் அஞ்சலி.


கண்களால் சுற்றுப்புறத்தை காட்ட, அவரும், அதை புரிந்து கொண்டு அமைதியாகினார். தான் சொல்லாமலே நிலைமையை கையாண்ட, அஞ்சலியை நினைத்து மனதோடு மெச்சி கொண்டான் ஹரி.


உள்ளே வந்த சதாசிவமும், அஞ்சலியும் ஆரவ் அருகில் ஓடி வந்து,


“தம்பி, .. என்னபா? என்னாச்சு? அமிர்தா நல்ல இருக்காளா?  டிவியில் ஏதேதோ சொல்றதா அஞ்சலி காட்டினா. அதான் பயந்து போய் வந்து இருக்கோம். ஆபீஸ் தானே வந்தா, அதுக்குள் என்னாச்சு? அவளுக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ?" என அவர் அழுது கரைய, ஆரவ்வோ,


“அங்கிள், நான் இப்போ உங்ககிட்ட என்ன சொல்றதுன்னே தெரியல. அமிர்தாவுக்கு இப்படி ஆனதுக்கு காரணம் நான் தான். என்னை மன்னிச்சுடுங்க”


என கையெடுத்து கும்பிட்டு கேட்க, சதாசிவமும், அஞ்சலியும் அவனை புரியாமல் பார்த்தனர்.


“நீங்க என்ன சொல்றீங்கன்னே எனக்கு புரியல தம்பி. எதுக்கு மன்னிப்புலாம் கேட்கிறீங்க? அவ உயிருக்கு ஒன்னும் ஆபத்து இல்லையே!!”

என பொருக்க மாட்டாமல் அவர் கேட்டு விட,


“அச்சோ அங்கிள் அதெல்லாம் இல்லை. ஆனால் இப்போ என்ன நடந்ததுன்னு சொல்ல கூடிய சூழ்நிலையில் நான் இல்லை. ஆனால் நிச்சயம், அமிர்தா பழைய மாதிரி திரும்ப வருவா, அதுக்கு நான் கியாரண்டி. என்னை நம்புங்க, என் அமிர்தாவை நான் நல்ல பார்த்துப்பேன்” என்றான் அதையே மீண்டும் மீண்டும்.


“என்ன தம்பி சொல்றீங்க? எனக்கு ஒன்னும் புரியல. அவ அப்பா அம்மா இல்லாத பொண்ணு தம்பி. சின்ன வயசில் இருந்து நிறைய கஷ்டத்தை அனுபவிச்சுட்டா. நான் வெறும் அவங்க இருக்கிறதுக்கு தான் இடம் கொடுத்து இருக்கேனே தவிர, அதை தவிர்த்து வேறேதும் என்னால் செய்ய முடியல. 


அவளுக்குன்னு இருக்கிறது அஞ்சலி மட்டும் தான். அமிர்தாவுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா தாங்கிக்க முடியாது தம்பி. நீங்க ரொம்ப பெரிய ஆளு, வசதி, வாய்ப்பு, பேர் புகழ்னு எல்லாம் இருக்கு. அதுக்காக, அந்த சின்ன பொண்ணு வாழ்க்கையில் விளையாடிடாதீங்க.  நான் உங்களை தப்பு சொல்லல, தப்பா எதுவும் நடந்துட கூடாதுனு சொல்றேன். அவ நல்ல தானே இருக்கா?”


என ஆதங்கமாய் வந்து விழுந்த அவர் வார்த்தைகளில் வெகுவாக துவண்டு போனான் ஆரவ். அவரிடம் என்ன விளக்கம் கொடுப்பது என்பது புரியாது அவன் திணற, அதனை கையில் எடுத்துக் கொண்டார் பாலகிருஷ்ணன்.


“சார், உங்க பயம், அக்கறை எல்லாமே எங்களுக்கு புரியுது. இது ஆரவ்வே எதிர்பார்க்காமல் நடந்து முடிஞ்சுடுச்சு. என்ன நடந்ததுனு சொல்லி உங்களை இன்னும் கலவரப்படுத்த வேண்டாம் தான் அவன் எதையும் சொல்ல முடியாம தவிக்கிறான். எல்லாம் சரியாகும்னு நம்புவோம்”

என அவர் விளக்கம் கொடுக்க, அரைமனதாக தலையாட்டினார் சதாசிவம். அதற்கு மேல் அவர்களிடம் என்ன கேட்பது என்று அவருக்கு தெரியவில்லை.


அழுது கொண்டிருந்த அஞ்சலியின் அருகில் வந்த ஆரவ், அவள் கண்ணீரை துடைத்து விட்டு,


“அஞ்சலி, எனக்கு தெரியும், உனக்கு உன் அக்கான்னா உயிர். அவளுக்கும் அப்படி தான். எனக்கும் அவ என் உயிருக்கு நிகரானவ தான். என் உயிருக்கு மேலா அவளை நான் நல்லா பார்த்துப்பேன். உனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கு தானே?!!”

என அவன் கேட்க, ஆமாம் என தலையாட்டினாள் அஞ்சலி.


“இந்த நம்பிக்கை கெட்டு போகிற அளவுக்கு நிச்சயம் நான் நடந்துக்க மாட்டேன். எனக்கு தெரியும், நீ ரொம்ப மெச்சுருட்டி உள்ள பொண்ணு. நிலைமையை புரிஞ்சுக்கோ. 


உன் அக்காவை நான் பார்த்துகிறேன். நீ உன் படிப்பில் கான்செண்ட்ரேட் பண்ணு. நீ நல்ல படிக்கணும்னு தான் அவ ஆசையே. நல்ல குணமாகி எழுந்து வரும் போது உன்னை கேட்கிற முதல் கேள்வியே எக்ஸாம் எப்படி எழுதின என்பது தான். நடக்கிற எதையும் மண்டையில் போட்டுக்காதே. ரிலாக்ஸா படி. நல்ல எக்ஸாம் எழுது. ஏதாவது தேவைனா உடனே கால் பண்ணு”


என கூறியவன், அவள் தலையை ஆறுதலா தடவி விட, அவளும் கண்களை அழுந்த துடைத்து கொண்டு சரியென்று தலையாட்டினாள்.


“சரிங்க தம்பி, உங்களை நம்பி தான் எங்க பொண்ணை பார்க்காமலே விட்டுட்டு போறோம். அவளுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கோங்க. நாங்க கிளம்புறோம்”


என சதாசிவம் விடைபெற, அஞ்சலியும், ஆரவ்விடம்


‘அக்காவை நல்ல பார்த்துக்கோங்க’ என செய்கை செய்ய, இருவருக்கும் பொதுவாக,


“கண்டிப்பா நல்ல பார்த்துப்பேன். என் அம்மா மேலே சத்தியமா”

என வாக்கு கொடுத்த பின் அவன் மேல் முழு நம்பிக்கை வைத்து அங்கிருந்து விடைபெற்று கொண்டனர் சதாசிவமும், அஞ்சலியும். ஹரியிடம், அவர்களை பத்திரமாக வீட்டுக்கு அழைத்து செல்லும்படி கூறினான்.


இந்த நிலையில், இந்த நேரத்தில், அவர்களை வேறு வாகனத்தில் அனுப்பி வைக்க மனம் வரவில்லை.


“வாங்க சார், நம்ம காரிலே போலாம்” என அழைக்க, அவரோ,


“இல்ல தம்பி, நாங்க ஆட்டோ பிடிச்சு போறோம்”

என வர மறுத்தவரை வலுகட்டயாமாக காரிலே அழைத்து வந்தான் ஹரி.


வீட்டு வாசலில் அவர்களை இறக்கி விட்டு, விடைபெற்று கிளம்பும் சமயம் அங்கு பிரவேசமானார் கலா.


“ஏய், எங்க டி உன் அக்கா? என்ன யாரோ ஒருத்தன் கையில் தூக்கி வச்சு இருந்தானே அவன் கூட ஓடி போய்ட்டாளா?” என வார்த்தைகளை கொட்ட, கேட்டு கொண்டிருந்த ஹரிக்கு அவரின் பேச்சை தாங்க முடியவில்லை.


“ஏம்மா!! என்ன பேசுறீங்க? அமிர்தா ஹாஸ்பிடலில் இருக்காங்க” என்றதும்,


“யோவ் நீ யாருய்யா? நான் இங்க பேசிட்டு இருக்கேன். நீ ஏன் பதில் சொல்ற?”

என அவனிடமும் அவர் வார்த்தைகளை கொட்டினார்.


“ஏய் கலா, இப்போ இங்க நடுத்தெருவில் பேசியே ஆகணுமா? உள்ளே வா என்னாச்சுனு தெளிவா சொல்றேன். அதைவிட்டுட்டு அவர் கிட்ட ஏன் சண்டைக்கு போற”

என சதாசிவம் அவரை அடக்க, 


“நீங்க சும்மா இருங்க. என் வீட்டு வாசலுக்கு வந்து, என்னையே கேள்வி கேட்கிறான், சும்மா விட சொல்றீங்களா? அதெல்லாம் முடியாது, நான்  இங்க நின்னு தான் பேசுவேன்”

என இவர் சதாசிவத்தை அடக்க, அவர் தான் வாயை மூடிக்கொள்ளும் நிலை வந்தது.


“தம்பி, இவ இப்படி தான், எதையாவது லூசு போல பேசிக்கிட்டு இருப்பா, நீங்க கிளம்புங்க” என ஹரியை கிளம்ப சொல்ல, அவனோ,


“என்ன சார் இவங்க மரியாதை இல்லாமல் பேசுறாங்க. அதுவும் ஆரவ் சாரையும், அமிர்தாவையும் வச்சு அசிங்கமா பேசுறாங்க. எப்படி அமைதியா போக முடியும்? ஆரவ் சாரை பத்தி யார் தப்பா பேசினாலும் நான் சும்மா இருக்க மாட்டேன். போனால்  போதுன்னு  உங்க முகத்துக்காக அமைதியா போறேன்" என்று கோபமாக இரைந்தவன், கலாவின் புறம் திரும்பி, அவரை நன்கு முறைத்து விட்டு கிளம்ப எத்தனித்தான்.



“அப்படி தான் டா பேசுவேன். என்ன பண்ணுவ? இது என் வீடு. அந்த ஓடுகாலி பெத்த ரெண்டையும் வச்சு வளர்த்தது நான். இந்த வீட்டில் இருக்கிறதுனால்  எல்லாரும் என்னை தான் வந்து கேட்கிறாங்க. இவ அக்கா பண்ண அசிங்கத்துக்கு நான் ஏன் பேச்சு வாங்கணும்?  இந்த தெருவில் என்னை நிமிர்ந்து பார்த்து கூட எவளும் பேச மாட்ட, இப்போ என் முகத்துக்கு நேராவே சிரிச்சுட்டு போறாளுங்க. எலலத்துக்கும் காரணம் யாரு? எவனோ ஒருத்தனும், இவ அக்காளும் தானே!! 


ஓடிபோறது தான்  அவ ரத்தத்திலே இருக்கு. அதனால் தான் நல்ல பணக்காரன் மாட்டினதும் வளைச்சு போட்டுட்டா போல. ச்சைக்"


என அந்த அர்த்த ராத்திரியில் வரம்பு மீறிய அவரின் கத்தலில் அந்த தெருவில் உள்ள அனைவருமே கூடி விட்டனர்.


ஹரிக்கு இதெல்லாம் கேட்கவே முடியவில்லை. அவனுக்கு தான் அவரின் பேச்சில் அத்தனை அசிங்கமாய் இருந்தது. அருவருப்புடன் அவரை பார்த்து வைத்தவனுக்கு, அவருக்கு பதில்  பேசவே பிடிக்கவில்லை.


சாக்கடையில் கல் எறிந்தால் தன் மீது தான் படும் என்ற தோரணையில் தான் அவன் நின்றிருந்தான். அவனின் முகப்பாவணையை அவதானித்த அஞ்சலியோ, ஹரியின் புறம் திரும்பி அழுகையுடன்,


“நீங்க கிளம்புங்க. அத்தை எப்போதும் இப்படி தான். அவங்களுக்கு எங்களை பேசலைன்னா தூக்கமே வராது. இதெல்லாம் பழகி போச்சு”


என அவனை கிளம்ப சொல்ல, அவன் அங்கிருந்தால் இன்னும் இன்னும் மோசமான பேச்சுக்கள் தான் வளரும் என்று நினைத்த ஹரி, அஞ்சலியிடம் தலையசைப்பை கொடுத்து விட்டு அவன் கிளம்ப, கலா அப்பொழுதும் அவனை விடவில்லை.


“ஏய் எங்க போற? கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ” என தடுத்து நிறுத்த, ஹரி தன் பொறுமையை இழந்திருந்தான்.


“கலா, ஒழுங்கா உள்ளே போ, நீ கத்துற கத்துக்கு தெருவே நம்மள தான் வேடிக்கை பார்க்குது அசிங்கமா இருக்கு உள்ளே போ” என சாதசிவத்தின் எந்த பேச்சும் அவரிடம் எடுபடவில்லை.


“இதோ பாருங்க, வயசுக்கு மரியாதை கொடுத்து தான் அமைதியா இருக்கேன். இல்லை, நீங்க பேசின பேச்சுக்கு நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. வயசுக்கேத்த மாதிரியா பேசறீங்க. உங்க வீட்டு பொண்ணை பத்தி நீங்களே இவ்வளவு அசிங்கமா பேசுறீங்களே உங்களுக்கே இது கேவலமா இல்லை”


“ஏய், ஏய், என்ன? வாய் ரொம்ப தான் நீளுது உனக்கு. என்ன பண்ணுவ என்னை? உன்னால் ஒன்னும் பண்ண முடியாது” அவர் நிறுத்துவது போல தெரியவே இல்லை.


“என்ன பண்ணுவேன்னா, இருங்க, போலீஸ்க்கு போன் பண்றேன். எனக்கு கமிஷனர் வரை தெரியும். ஒரே ஒரு போன் போட்டா போதும் உடனே வருவாங்க. பப்ளிக் நியூசென்செஸ் கேஸில் உள்ளே வைக்கிறேனா இல்லையானு பாருங்க”

என அவன் அலைபேசியை எடுக்க, சதாசிவம் தடுக்காது அமைதியாய் தான் நின்றார். 


மனைவிக்கு இது தேவை தான் என்று அமைதியாகி விட அஞ்சலி தான், ஹரியின் செயலில் பதறி போனார்.


“வேண்டாம், வேண்டாம்” என அவள் செய்கையில் அவனிடம் கெஞ்ச, அவளின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து அவன் அலைபேசியை இறக்கி விட, கலாவிற்கோ உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியில் கெத்தாக நின்றிருந்தார்.


அஞ்சலியின் செய்கைக்கு ஹரி மதிப்பு கொடுத்து அமைதியாகிடுவதை பார்த்தவர், ஹரியை அவமான படுத்தும் நோக்கோடு,


“ஏய், என்ன கமிஷ்னரா? சிஎம் வந்தா கூட என்னை ஒன்னும் பண்ண முடியாது. ஆமாம், அது என்ன அவ சொன்னதும் நீ அமைதியாகிற, அப்போ உனக்கும் அவளுக்கும் நடுவில் என்ன இருக்கு?


என்ன? அடுத்து நீங்க ரெண்டு பேரும் ஓட போறீங்களா? ஏன் டா, போயும் போயும் உனக்கு இவளா வேணும். பரவாயில்லை, இந்த ஊமைச்சி கூட பலே கில்லாடி தான். தாம் தூம்னு குதிச்சுட்டு இருந்தவன், நீ கண் காட்டினதும் பொட்டி பாம்பா அடங்கி போறான்னா? அந்த அளவுக்கு கைக்குள் போட்டு வச்சு இருக்க? திறமை தான்”


என அவர் இருவரையும் இணைத்து வைத்து பேச அதிர்ந்து போய் பார்த்தனர் ஹரியும், அஞ்சலியும்.


அஞ்சலி, அவர் பேச்சை கேட்க முடியாது, காதுகளை பொத்தி கொள்ள, ஹரியோ


“ஏய், என்ன பேசுற நீ? அவ சின்ன பொண்ணு, அவளையும் என்னையும் சேர்த்து வச்சு பேசிட்டு இருக்க? அசிங்கமா இல்லை. இதுவே நீ பெத்த பொண்ணா இருந்தா இப்படி பேசுவீயா?


என்று கேட்டவனுக்கு அவரின் இந்த பேச்சை ஜீரணிக்கவே முடியவில்லை.


“கலா, உனக்கென்ன புத்தி மழுங்கி போச்சா எதுக்கு இப்படிலாம் அசிங்கமா பேசுற?”

என சதாசிவம் அவரை அதட்ட, அங்கே அஞ்சலி தான், வாய்விட்டு அழுது கொண்டிருந்தார்.


நிச்சயமாய் இப்படி ஒரு பேச்சு வரும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. இவர் நாக்கு என்ன நாக்கா? இல்லை தேள் கொடுக்கா? இப்படி விஷத்தை கக்குகிறாரே என்று அவனுக்கு ஆற்றமையாய் இருந்தது.


இன்று இந்த ஒரு சில நிமிடங்களிலே, அவரின் குணம் என்னவென்று புரிந்து போனது. சில நிமிட பேச்சே தாங்க முடியவில்லை. இத்தனை வருஷமாய் எப்படி அந்த இரு பெண்களும் இவரின் பேச்சை தாங்கி கொண்டனர் என அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


சட்டென்று, அந்த முடிவை எடுத்திருந்தான் ஹரி. இனியும் எதற்கு இவர்களுக்கு இந்த கஷ்டம்?  தான் சென்ற பின்பும் இதையே கூறி, அஞ்சலியை வேதனை படுத்துவார் என்பது புரிய, அஞ்சலியின் புறம் திரும்பி,


“அஞ்சலி, இவங்க சொன்னதுக்கு எதுக்கு அழுற? ஒருத்தர் மனசு நோக்கடிகனும்ன்னா முதலில் அவங்க கேரக்ட்டரை தான் தப்பா பேசுவாங்க. அதுக்கு நாம ரியாக்ட் பண்ணோம், அவ்வளவு தான். அவங்க நினைச்சத்தை நடக்க நாம விடவே கூடாது. அதனால் கண்ணை துடை. உனக்கும் எனக்கும் தெரியும், நம்மை பத்தி. இவங்க சொன்னா அது உண்மையாகிடுமா?!


ரோட்டில் போற  ஏதோ சொறி நாய் கத்திக்கிட்டு இருக்குனு விடு. போய் உன்னோட புக்ஸ் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா. நாம ஆரவ் சார் வீட்டுக்கு போவோம். இங்க இருந்தேனு வை பேசி பேசியே உன்னை கொன்னுடும் இந்தம்மா. உன்னால் நிம்மதியா படிக்கவும் முடியாது. ஒழுங்கா எக்ஸாம் எழுதவும் முடியாது. 


சாக்கடைனு தெரிஞ்சு அதுமேலே நடந்தா, நம்ம காலு  தான் அழுக்காகும். ஒதுங்கி போறது பெட்டர். போய் எடுத்துட்டு வா”

என அஞ்சலியிடம் கூறினாலும், கலாவை பார்த்து முறைக்கவும் அவன் தவறவில்லை.


அஞ்சலி அதிர்ந்து போய் அவனை பார்க்க,


“நிஜமா தான் சொல்றேன் அஞ்சலி. உனக்கு இப்போ பீஸ்புல்லான, மைண்ட் வேணும். அது இங்கே நிச்சயமா கிடைக்காது. கிளம்பி வா”

எனக் கூற, அவள் திரும்பி சதாசிவத்தை பார்த்தார். 


“உங்க ரெண்டு பேருக்கும் இப்போவாவது விடிவு காலம் வந்துச்சுனேனு சந்தோஷமா தான் இருக்கு மா. நீ கிளம்பு. எனக்கு சம்மதம் தான். என்னை விட, அங்கே எல்லாரும் உன்னை நல்ல பார்த்துப்பாங்க நம்பிக்கை இருக்கு. கூட அமிர்தாவும் இருக்கா. அது போதுமே”


என அவளை செல்ல அனுமதித்தார் சதாசிவம். நடப்பதை எதையும் புரியாமல் பார்த்து கொண்டிருந்தார் கலா. அவள் சென்று விட்டால், இனி யாரை பேச முடியும்? கரித்து கொட்டாமல் அவரால் இருக்க முடியாதே!!


“ஏங்க? கட்டின பொண்டாட்டியை, எவனோ ஒருத்தன் நாய், சாக்கடை சொல்றான், உங்களுக்கு கொஞ்சம் கூட ரோஷம் வரல. அவனை நாலு போடறத விட்டுட்டு, இவளை அவன் கூட அனுப்பிட்டு இருக்கீங்க?” என கணவனிடம் தன் கோபத்தை காட்ட. சதாசிவமோ,


“ரோஷமா? எனக்கா? அதெல்லாம் என்னைக்கு உன்னை கல்யாணம் பண்ணேனோ, அன்னைக்கே என்னை விட்டு போய்டுச்சு. இருந்தாலும் கொஞ்சம் வருத்தம் தான். நாய் கூட உன்னை சொல்லி நாயை அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்”


என சதாசிவம் கூற, கலாவோ அவரை பார்வையாலையே எரித்தார். அதற்குள் அஞ்சலி தன்னுடைய பொருள்களை எடுத்து கொண்டு வந்து விட, அவள் முன் போய் நின்ற கலா,


“ஏன் டி, எவனோ ஒருத்தன் கூப்பிட்டானு, அர்த்த ராத்திரியில் அவனை நம்பி போறீயே பொண்ணா நீ? ஒழுங்கா இங்கேயே இரு. அவன் கூட போய் வாழ்க்கையே நாசமாக்கிட்டு தான் வர போற பாரு”

என அவளை போக விடாது தடுக்க, அவளோ அவரை தாண்டி காரின் அருகில் வந்தாள்.


சட்டென்று அவள் கையை பிடித்து போகவிடாது  தடுக்க, அதனை கண்ட ஹரி,  அவரின் கையை எடுத்து விட்டு உதறி விட, அவரோ அவனின் அந்த சின்ன செயலிலேயே தடுமாறி கீழே விழுந்து விட்டார்.


அஞ்சலியும் காரில் ஏறி கொண்டு சதாசிவத்தை நோக்கி தலையாட்ட, அவரும் அவளை நிம்மதியுடன் வழி அனுப்பினார்.


“ஏங்க, என்னை தூக்கி விடுங்க. எந்திரிக்க முடியல” என்ற கலாவின் குரலை எதையும் காதில் வாங்கவில்லை சதாசிவம்.  உனக்கு இது தேவை தான் என்றபடி உள்ளே சென்று விட்டார்.


மீண்டும் மருத்துவமனைக்கு வந்து நேராக ஆரவ் முன்னாடி ஹரி அஞ்சலியுடன் போய் நிற்க,


“என்ன டா? என்னாச்சு?” என ஆரவ் கேட்டதும், அங்கு நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான் ஹரி.


“உங்களையும், அமிர்தாவையும் பத்தி அசிங்கமா பேசினாங்க, அப்புறம் என்னையும் அஞ்சலியை பத்தி அசிங்கமா பேசுறாங்க. அந்த பொம்பளைக்கு இருக்கிறது வாயா, இல்லை காவாயா தெரியல. அவ்வளவு பேட் பேட்டா வருது. அதான் நீங்க பார்த்துப்பீங்கன்னு கூட்டிட்டு வந்துட்டேன். பாவம் சார் அஞ்சலி, அங்க இருந்தா அந்தம்மா பேசியே கொன்னுடும் போல”

நடந்ததை விவரிக்க, ஆரவ்விற்கும் ஹரி செய்தது நியாயம் என்று தான் பட்டது.


“ம்மா,” என தாயை பார்க்க, அழுது கொண்டிருந்த அஞ்சலியின் அருகில் வந்தவர், அவள் கண்களை துடைத்து விட்டு,


“நான் பார்த்துகிறேன் ஆரவ். எப்படியும் அஞ்சலி உங்க கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம வீட்டுக்கு தானே வர போறா. அது இப்பவே நடக்குது.நடக்கிறது எல்லாம் நல்லதுக்குனு எடுத்துப்போம் கண்ணா”

என்று மகனின் மனநிலை புரிந்து கூறியவர்,


“அஞ்சலி வா மா நம்ம வீட்டுக்கு போகலாம்”

என அவளை அழைத்து கொண்டு புறப்பட, உடன் பாலகிருஷ்ணனும் அவர்களுடன் புறப்பட்டார்.


இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என சோர்ந்து போனான் ஆரவ்.


சிகிச்சை முடித்து விட்டு அறையில் இருந்து மருத்துவர் வெளி வர, அதுவரை தலையை கையில் தாங்கி அமர்ந்திருந்த ஆரவ், அவரின் அரவம் கேட்டதும் சட்டென்று வேகமெடுத்து அவரருகில் ஓடி வந்தான்.


"சார் அமிர்தாவுக்கு எப்படி இருக்கு? நார்மல் தானே?"

என்று பதற்றத்துடன் கேட்க,


“ட்ரீட்மெண்ட் முடிஞ்சது ஆரவ். அவங்களோட வெளி காயத்துக்கு என்னால் மருந்து போட முடியும். ஆனால் உள்காயத்துக்கு மருந்து நீங்க தான். மனசளவில் ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா தான் ரெக்கவர் பண்ண முடியும். பிரஸ்ட் அவங்களுக்கு கம்ப்ளீட் ரெஸ்ட் வேணும். எந்தவொரு நெகட்டிவ் வைப்பும் அவங்க கிட்ட வராத அளவுக்கு பார்த்துக்கோங்க. அவங்க நல்ல தூங்க இன்ஜெக்ஷன் போட்டு இருக்கேன். நீங்க போய் பார்க்கலாம்.


கண்டிப்பா காயம் எல்லாம் ஆற மினிமம் ஒன் மந்த் ஆகலாம். வேற ஏதாவது இருக்கான்னு, கம்ப்ளீட் ஸ்கேன் பண்ணி இருக்கோம். ரிப்போர்ட்ஸ் வந்ததும் பார்த்துட்டு அடுத்து என்னன்னு பார்ப்போம். டோன்ட் ஓரி”


என கூறியவர் அவனிடமிருந்து விடைபெற்று கொண்டார்.


இந்த நிலையில் அவளை காண தைரியம் இல்லையென்றாலும், அவளுக்கு தன் அரவணைப்பு தேவை, அது தான் அவளை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் என்பதை உணர்ந்து, தடதடக்கும் மனதுடன் அமிர்தாவை அனுமதித்த அறையினுள் நுழைந்தான் ஆரவ்ஜெயந்தன்.


வாடி, வதங்கிய கொடி போல், படுத்து கிடந்தவளை  காண காண, அவனின் உள்ளம் கதறி துடித்தது. கண்களின் திரையை கண்ணீர் மறைக்க, அவளின் தலையை லேசாக தடவி விட்டான்.


ஆங்காங்கே, காயத்திற்கான மருந்து இடப்பட்டு இருக்க, அதனை லேசாக விரல்கள் நடுங்க தொட்டு பார்த்தான். எப்படி தான் வலி தாங்க போறாளோ? என வேதனையாய் இருந்தது அவனுக்கு.


நடந்து முடிந்த அனர்த்தங்கள் யாவும் நினைவில் வர, கடைசியாக இதற்கு காரணமான ராமமூர்த்தி, வந்து நிற்க, கொஞ்சம் கொஞ்சமாக அவனது முகம் கோபத்தை தத்தெடுத்தது.


அதே கோபத்துடன் அறையை விட்டு வெளிவந்தவன், மருத்துவமனை வாயிலை நோக்கி சென்றவனை யோசனையுடன் பார்த்தான் ஹரி.


“சார், சார், இந்த நேரத்தில் எங்க போறீங்க? கார் எடுத்துட்டு வரவா?”

என கேட்க, 


“இல்ல ஹரி, நான் ஒரு வேலையா போறேன். நானே ட்ரைவ் பண்ணிக்கிறேன். நீ இங்க இருந்து அமிர்தாவை பார்த்துக்கோ”


எனக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான்.


நேராக அவன் வந்து நின்ற இடமோ, ராமமூர்த்தியின் இல்லம் தான்.


காரை விட்டு வேகமாக இறங்கியவன், வீட்டின் அழைப்பு மணியை விடாது அடிக்க, அதில் பயந்து போய் எழுந்து வந்தனர் ராமமூர்த்தி குடும்பத்தினர்.


ராமமூர்த்தி கதவை திறந்ததும், அங்கே ஆரவ்வை கண்டதும் அதிர்ந்து விட்டார்.


“ஏஜே,... என்ன? இந்த நேரத்தில்?” என ராமமூர்த்தி கேட்க, அவர் குரலே அவரின் பயத்தை காட்டியது அவனுக்கு.


“வர வேண்டிய சூழ்நிலை. உள்ளே போய் பேசலாமா?”


என்றதும், அவரோ “வாங்க வாங்க” என்றார் இயல்பை வரவழைத்து கொண்டு.


உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தவன், அவரையே தீர்க்கமாக பார்க்க, அவனின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் ராமமூர்த்தி. ஷ்ரேயாவுக்குமே படப்படப்பாக வந்தது.


“டிவி நியூஸ் பார்த்து இருப்பீங்களே?”

என்று ஆரவ் கேட்க, 


“ஆமாம் ஆரவ் பார்த்தேன். இந்த மீடியாவுக்கு வேற வேலையே இல்லை. இப்படி தான் தப்பு தப்பா எழுதி வைப்பாங்க. அந்த பொண்ணு உங்க ஆபீசில் தானே வேலை பார்க்குது. பார்த்த நியாபகம் இருக்கு. என்னாச்சு? என்ன நடந்தது ஆரவ்?


என்று  ஒன்றுமே தெரியாதது போல கேட்க, 


“ஒஹ்ஹ், அமிர்தாவை உங்களுக்கு நியாபகம் இல்லையா? அவளுக்கு என்னாச்சுன்னு கூட உங்களுக்கு தெரியாதா?”


என போலியாக அவர் கூற்றை ஏற்று கொள்ள, அவரும் இல்லை என்று தலையாட்டினார்.


சட்டென்று தன் இருக்கையில் இருந்து விருட்டென்று எழுந்தவன் ராமமூர்த்தி என்னவென்று யோசிக்கும் முன் அவரின் சட்டையை  கொத்தாக பிடித்து, ஓங்கி அவர் கன்னத்திலே அறைய, அதிர்ந்து போய் விட்டனர் அனைவரும்.


“உனக்கு தெரியாதா? தெரியாது தான், எப்படி தெரியும்? அமிர்தாவை நீ பண்ண சொன்னதே வேறயாச்சே, அவ எப்படி என்கிட்ட வந்தானு உனக்கு தெரியாது தான்”


என ஒவ்வொரு வாக்கியத்துக்கும், இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி அறைய, அவர் கன்னமோ பன் போல வீங்கி போயிற்று.


“ஆரவ், என்ன பண்றீங்க?” என ஸ்ரேயா குறுக்கே வந்து கேட்க,


“இதோ இது தான் பண்றேன்,” என்று அவளையும் ஓங்கி அறைய, அதில் உதடு கிழிந்து ரத்தம் வழிய  தள்ளி போய் விழுந்தாள் ஸ்ரேயா.


“யோவ், நீ என்ன இவளுக்கு அப்பாவா? இல்லை மாமாவா? உன் பொண்ணு வியாபாரம் ஆகலைன்னா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும். வேற ஒரு நல்ல ஆம்பளையா பார்த்து தள்ளி விட வேண்டியது தானே!! நல்ல தானே இருக்கா,”


என வார்த்தைகளால் அடிக்க, அவமானத்தில் கூனி குறுகி நின்றார் ராமமூர்த்தி.


“உன் பொண்ணை என்கூட படு…” என வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டு,


“வாயில் அசிங்கமா வருது. பேசவே நாக்கு கூசுது. ஆனால் அதை செய்ய நினைக்கிற நீயெல்லாம் என்ன பிறவி?


அமிர்தா என்ன டா பண்ணா? அவளை போய் இப்படி அடிக்க சொல்லி இருக்க? அவ மேலே விழுந்த ஒவ்வொரு அடிக்கும் நீ பதில் சொல்லி தான் ஆகணும்”


 என்றவன் அவரை நைய புடைத்து விட்டான். அவனின் மொத்த ஆத்திரத்தையும் அவரிடம் மிச்சம் வைக்காமல் இறக்கினான். இடையில் தடுக்க வந்த ஷ்ரேயாவுக்குமே பலத்த அடிகள் விழுந்தது.


மகளையும், கணவனையும் காக்க வந்த கஸ்தூரியை பார்வையாலையே தடுத்து நிறுத்தினான்.


அவன் கொடுத்த சில அடிகளிலே துவண்டு போய் விழுந்த ராமமூர்த்தி, மேலும் மேலும் அடிவாங்க தெம்பில்லாது அங்கேயே தரையில் விழுந்து விட, அருகில் ஸ்ரேயாவும் வலி தாங்காது சுருண்டு விழுந்தாள்.


அங்கு அழகுக்காக வைத்திருந்த பூச்சாடியை ஆத்திரத்தோடு, தூக்க, எங்கே தங்கள் மீது போட்டு விடுவானோ என்று அஞ்சி இருவரும் நடுங்க, அவனோ அவர்கள் அருகில் தூக்கி போட, அதுவோ சில்லு சில்லாய் உடைந்து சிதறியது.


சற்று நேரத்தில் உயிர் பயத்தை காட்டியவனை அச்சத்துடன் இருவரும் பார்க்க, உடைந்த ஒரு பீஸை எடுத்தவன் அதன் கூர் பகுதியை ராமமூர்த்தி தொண்டையின் அருகில் வைக்க, அவர் விழிகளோ பெரிதாக விரிந்து கொண்டது.


“பயப்படாதா, கொல்ல மாட்டேன். ஏன்னா நீ அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. வெறும் அடியோடு போக ஆரவ் ஒன்னும் கேனை பையன் இல்லை. அவன் வேற மாதிரி, இப்போ புரிஞ்சுருக்கும் நான் யாருன்னு. 


இது சும்மா சாம்பிள் தான். வெயிட் பண்ணிட்டே இருங்க, உங்களுக்கான மெயின் பிக்சர் வத்துட்டே இருக்கு. இனி நீங்க  வாழ போற எல்லா நாளும் நரகம் தான்”


என்றவன் அந்த பீஸை தூக்கி எறிந்து விட்டு அங்கிருந்து வேகமாக வெளியேற, அப்படியே கண்களை மூடிய ராமமூர்த்தியின் கண்ணுக்குள் வந்து நின்றான் ஆரவ், அதுவும் ஆக்கரோஷமாக. அவன் கடைசியாக கூறிவிட்டு சென்ற வார்த்தைகள், அசரீரியாய் அவர் காதுகளில் ஒலித்து அவரை அச்சமூட்டி தவிக்க செய்தது.


ஏன் இவ்வளவு காதல் அவள் மீது மட்டும்

என்ற கேள்விக்கு

அவனின் பதில்

என் கற்பனையில் கூட வேறெந்த பெண்ணையும்  நினைக்க விடாத

அவளின் காதல் மட்டுமே!!


பிடிக்கும்..
























Comments