UNEP-23

 அத்தியாயம்..23


          சிறப்பு நீதிமன்றத்தில், வெளியே இருக்கும் மக்கள் யாரையும் வழக்கு நடக்கும் இடத்திற்கு அனுமதிக்காது, வழக்கு பதிவு செய்தவர், குற்றம் சாட்டப்பட்டவர், இருதரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் மட்டுமே இருப்பர்.


சில பாதுகாப்பு காரணங்களுக்காக இதுபோலும் வழக்கு நடத்தி, தீர்ப்பு கூறும் வழக்கம் உண்டு.


கமிஷ்னரின் உதவியோடு, அமிர்தாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு, இந்த வழக்கை பதிவு செய்திருந்தான் ஆரவ். அதன்படி  செய்ய வேண்டிய எல்லா முறைகளையும் சட்டப்படி செய்தவன், ராமமூர்த்தி மீதும், அமிர்தாவை துன்புறுத்திய அந்த பெண் காவலர் மீதும், மற்றும அதற்கு உதவி புரிந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்தான்.


இதில் நகரத்தின் கமிஷ்னர் அவனுக்கு பக்கபலமாக இருக்க, எவரும் தப்பிக்காதவாறு, அனைத்தையும் திட்டம் போட்டு அதன்படி செயல்படுத்தினர். ஆரவ் அடித்ததின் காரணமாக ராமமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று கொண்டிருக்க, ஓரளவிற்கு அவருக்கு  காயங்கள் குணமாகி இருந்த சமயம், தகுந்த ஆதாரங்களை திரட்டி, அதனை சமர்ப்பித்து, அவரை அங்கேயே கைது செய்து கூட்டி வந்திருந்தனர் காவல் துறை.  


நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த ஆரவ்வை, ஊடகங்களின் கேள்விகள் சூழ்ந்து அவனை செல்லவிடாமல் தடுக்க, ஆரவ்வோ,


“உள்ளே போக டைம் ஆச்சு. கேஸ் முடிஞ்சதும், கண்டிப்பா எல்லாமே உங்களுக்கு சொல்றேன். பிளீஸ் இப்போ போக வழிவிடுங்க”


என கூறியதும், அவனது சொல்லிற்கு மரியாதை கொடுத்து, விலகி நின்றனர் அனைவரும்.


பத்திரமாக அமிர்தாவை உள்ளே அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அவளை அமர செய்ய, என்ன நடக்கிறது என்பது புரியாமல் அவனையே பார்த்தப்படி இருந்தாள் அமிர்தா.


அனைவரும் வந்துவிட்டு இருக்க, நீதிபதியும் சிறிது நேரத்தில் அங்கே பிரவேசமானார். ராமமூர்த்தியையும், அந்த பெண் காவலரையும் கைது செய்து அங்கே கூட்டி வர, அவர்களை கண்டதும், அமிர்தாவின் உடலோ நடுங்க ஆரம்பித்தது.


கை கால்கள் எல்லாம் நடுங்க, தன்னிச்சையாக ஆரவ்வின் முழங்கையை பற்றிக்கொண்டவள், தன்னை அவன் பின்னே மறைத்துக் கொண்டாள் அமிர்தா.


ஆரவ்வோ, அவள் கைகளை தட்டி கொடுத்து, ஆறுதல் கூற, அவள் நடுக்கம் குறைந்தபாடில்லை.


நீதிபதி வழக்கை ஆரம்பிக்கலாம் என்றதும், ஆரவ் தரப்பு வழக்கறிஞர், அமிர்தா மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்து, அவளை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அடித்து துன்புருத்தி இருக்கின்றனர்.


அதற்கு காரணம் ராமமூர்த்தி. அவர் பணம் கொடுத்து தான், இந்த பெண் அதிகாரி இப்படி செய்திருக்கிறார் என்று விவாதம் வைக்கப்பட, நீதிபதி அனைத்தையும் குறிப்பெடுத்து கொண்டார்.


ராமமூர்த்தி தான் செய்தார் என்பதற்கான ஆதாரமாக, மங்கலாக தெரிந்த சிசிடிவி கேமிராவின் வீடியோ கொடுக்கப்பட்டது.


தற்பொழுது உள்ள, நவீன தொழில்நுட்பம் மூலம் மங்கலாக தெரிந்த, உருவங்கள் எல்லாம், தெளிவாக காட்டப்பட்டு இருந்தது.


அதனால் அதில் இருந்த உருவங்கள், ராமமூர்த்தி, மற்றும் அவரது அடியாட்கள் தான் என்பது அதில் தெள்ளதெளிவாக தெரிய, அந்த நேரத்தில் எதற்கு அங்கு செல்ல வேண்டும் என்ற கேள்வி எழுப்பட்டது.


அதன் பின் காவல்துறை வந்தது, அவளை அழைத்து சென்றது என எதுவும் அதில் பதிவாகத போது, ஆரவ் அதனை பக்கத்து அலுவலக முகப்பில் இருந்த சிசிடிவி கேமரா பதிவில் இருந்து எடுத்து வந்து சமர்ப்பித்து இருந்தான்.


ஆரவ் அலுவலகத்தின் கேமிராவை செயல் இழக்க செய்தவர், பக்கத்து அலுவலகத்திலும் கேமிரா இருக்கும் என்பதை மறந்து விட்டார்.


அமிர்தாவை காவல் நிலையம் கொண்டு வந்து அவளை அடித்து துன்புறுத்தியது உண்மை தான் என, அங்கிருந்த காவலர்கள் ஒத்து கொண்டனர். 


அதன்பின் ஆரவ் தேடி வந்த போது, அவர்கள் அமிர்தா அங்கில்லை என்று மறுத்தது, கமிஷ்னர் வந்ததும், அவளை அங்கிருந்து மீட்டு கொண்டு வந்தது. மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்றது வரை அனைத்தையும் ஆரவ் ஆதாரங்களுடன் அங்கு சமர்பித்தான்.


எந்தவித தடங்கலும் இல்லாது, எல்லா குற்றங்களும் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.


நீதிபதி கடைசியாக, அமிர்தாவின் வாக்குமூலத்தையும் கேட்க அழைக்க, அவளோ பயந்து போய் ஆரவ் பக்கத்தில் ஒட்டிக் கொண்டாள்.


“அமிர்தா போ, என்ன நடந்ததுன்னு சொல்லு. பயப்படாதே” என அவன் தைரியம் சொல்ல, அதற்குள் அவளை இரண்டு முறை அழைத்து  விட்டிருந்தனர். மெதுவாக எழுந்தவள், பயந்து பயந்து அவர் முன் போய் நிற்க, நீதிபதியோ, 


"சொல்லு மா, அன்னைக்கு என்ன நடந்தது" என கேட்க, அவளுக்கோ சர்வமும் நடுங்கியது. ஏற்க்கனவே பயத்தில் இருந்தவளுக்கு  தற்பொழுது காட்டிய அனைத்து ஆதாரங்களும் அவளுக்கு மீண்டும் அன்றைய நாள் நினைவுகளை நினைவுபப்டுத்தி விட்டது போல் ஆகி விட, இன்னும் இன்னும் பயந்து போனாள். இத்தனை பேர் முன்பு அவளுக்கு வார்த்தையே வரவில்லை.  


வியர்க்க, விறுவிறுக்க அவளோ, “அது.. அது.. வந்து..,” என திக்க,


“தைரியமா சொல்லு மா” என்றார் நீதிபதி. அவளோ அதற்கும் பயந்து, ஆரவ்வை திரும்பி பார்க்க, அவனோ கண்களாலேயே அவளுக்கு தைரியமூட்ட, அவளோ அவனை இறைஞ்சுதலாக பார்த்தாள்.


சட்டென்று எழுந்து நின்றவன்,


“சார், அமிர்தா, ரொம்ப பயந்து போய் இருக்கா, நான் பக்கத்தில் இருந்தா, அவ பயப்படமா சொல்லுவா. நீங்க அலோ பண்ணினீங்கன்னா நான் அவ கூட இருக்கட்டுமா?”

என அனுமதி கேட்க, அவரும் சரியென்று கூறினார்.


உடனே அவளருகில் சென்று அவன் நின்றதும், அதற்காகவே காத்திருந்தவள் போல, வேகமாக அவனை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டாள்.


ஆரவ்வும் அவளை அணைவாக பிடித்துக்கொண்டு,


“நான் தான் கூடவே இருக்கேனே அமிர்தா மா. பயப்படகூடாது. நீ இப்படி பயந்து ஒடுங்கி போகணும் தான் இவங்க எண்ணமே. அந்த சந்தோஷத்தை நீ அவங்களுக்கு தரவே கூடாது. தைரியமா பேசு”

என ராமமூர்த்தியை சுட்டிக்காட்டி, அவளுக்கு நம்பிக்கை கொடுக்க, அவளோ, பயத்துடனே சரியென்று என்று தலையாட்டினாள்.


“அன்னைக்கு.., நா.. ன், ஆபீசில் இருக்..கும் போது, இவங்க வந்தாங்க”


என ராமமூர்தியையும், அவருடன் வந்த அடியாட்களையும் சுட்டிக்காட்டி கூற, ஆரம்பித்தவள், அங்கு நடந்த அனைத்தையும் கூறி முடித்தாள்.


“உண்மைக்கே அந்த மோதிரத்தை நான் திருடல. அது எப்படி என் பைக்குள் வந்ததுனு தெரியாது”

என கண்ணீருடன் கூறியவள், மேலும்,


“என்னை ஸ்டேஷன் கூட்டிட்டு போனாங்க. அங்கே போனதும், ஒரு பேப்பர் கொடுத்து, அதில் நீ தான் திருடினன்னு எழுதி இருக்கோம் கையெழுத்து போடுனு அடிச்சாங்க. என்னால் வலி தாங்கவே முடியல. இருந்தாலும் நான் திருடல, நான் போட மாட்டேன் சொன்னதும், கொம்பு வச்சு அடிச்சாங்க. உடம்பில் எல்லா இடத்திலும் காயம். வலி தாங்காமல் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். அப்புறம் இவர் வந்து என்னை மீட்டு கொண்டு வந்தார்”


என அனைத்தையும் ஒன்று விடாமல் கூற, நீதிபதி குறிப்பெடுத்து கொண்டார்.


“சார், இவங்களுக்கு எப்படியாவது இவ மேலே பழியை போட்டு உள்ளே வைக்கணும். அதனால் எனக்கும் இவளுக்கும் நடக்க போற மேரேஜை ஸ்டாப் பண்ணலாம் பிளான் பண்ணி இதெல்லாம் பண்ணி இருக்காங்க. எனக்கு இவங்களோட நோக்கம் புரிஞ்சுடுச்சு. நான் இல்லாத சமயத்தில் இவர் என் ஆபீஸ் வந்துருக்கார்னு தெரிஞ்ச போதே கண்டுபிடிச்சுட்டேன். அன்னைக்கு மட்டும் நான் கொஞ்சம் லேட்டா போய் இருந்தாலும், இவ செத்தே போய் இருப்பா.


எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் கேஸ் கொடுத்து, கோர்ட்டுக்கு வந்து இருக்கோம். பிளீஸ் சார், தப்பு செஞ்சவங்களுக்கு சரியான தண்டனை கொடுங்க”


என ஆரவ்வும் நீதிபதியிடம் முறையிட, அவரோ இருவரையும் சென்று அமர கூறினார்.


எல்லாவற்றையும் விசாரித்து முடித்து, அப்பொழுதே தீர்ப்பும் வழங்கினார் நீதிபதி.


ராமமூர்த்திக்கு, பத்து ஆண்டு கால சிறை தண்டனையும், அவருக்கு துணையாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு, அவர் பதவியை விட்டு நீக்கியும், அவருக்கும் பத்து ஆண்டு கால சிறை தண்டனையையும், உடன் இருந்தவர்களுக்கு ஐந்தாண்டு கால தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்று கூறியவர், மேலும், அமிர்தா அனுபவித்த மன உளைச்சலுக்கு விலையாக, இருவரும் பத்து லட்சம் ரூபாய் தனித்தனியாக கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைக்க, ஆரவ்வின் முகத்திலே வெற்றி புன்னகை. கிடைத்த வெற்றியை தனுக்குள் புகுத்தி கொண்டு வலது கையை எடுத்து, இடது மார்பில் வைத்து அழுத்தி தட்டி கொண்டான்.


ஹரியோ, கைதட்டி ஆரவாரம் செய்தவன், நேராக வந்து ஆரவ்வை, கட்டிக்கொண்டு, 


“சார், நாம சாதிச்சுட்டோம்” என ஆர்ப்பட்டாமாக தன் மகிழ்ச்சியை  தெரிவித்தவன்,


“இந்த சந்தோஷத்தை நான் செலிபிரேட் பண்ணியே ஆகணும். நான் போய் பட்டாசு வெடிச்சு கொண்டாட போறேன்”

என துள்ளலுடன், வெளியேற, அவனருகே வந்தார் கமிஷ்னர்.


அவருக்கு கைகுலுக்கி,


“நீங்க இல்லைனா, எங்களுக்கு இவ்வளவு சீக்கிரம் நியாயம் கிடைச்சு இருக்காது. வெரி தேங்க்புல் போர் எவேரித்திங் சார்”

என நன்றி தெரிவித்தான் ஆரவ்.


“இட்ஸ் மை டூட்டி மிஸ்டர்.ஆரவ். நியாயம் தானே எப்பவும் ஜெயிக்கும் அதான் நடந்து இருக்கு. சரி பார்க்கலாம்”

என அவர் விடைபெற்று சென்றதும், ராமமூர்த்தியையும், அந்த காவலாளியையும் அழைத்து கொண்டு சென்ற நேரம், அவனருகில் வந்த ராமமூர்த்தி ஆரவ்வை முறைத்து பார்த்தார்.


“என்னையே நீ உள்ளே வச்சுட்டல. உன்னை பார்த்துகிறேன். உன்னை சந்தோஷமா வாழவே விட மாட்டேன்”

என மிரட்ட, அதற்கெல்லாம் அவன் காது கொடுக்கவே இல்லை.


காதுக்குள் சுட்டு விரலை விட்டு குடைந்து கொண்டே,


“ஒஹ்ஹ் அப்புறம்,” என்றான் நக்கலாக.


“ஹலோ மிஸ்டர் ராமமூர்த்தி சார். என்ன? என்ன சொன்னீங்க? நீங்க என்னை சந்தோஷமா வாழ விட மாட்டீங்களா? நல்ல காமெடி சார். என் வேலை இதோட முடிஞ்சு போச்சுன்னு நினைச்சு நீங்க சந்தோஷப்பட்டுடாதீங்க?!! இன்னும் இருக்கு”

என கடிகாரத்தை பார்த்தவன்,


“இன்னும் கொஞ்சம் நேரத்தில் தெரிஞ்சுடும்”

என ஆரவ் கூற, ராமமூர்த்தி என்னவாக இருக்கும் என்று யோசிக்கும் முன் அவரை அங்கிருந்து இழுத்து சென்று விட்டு இருந்தனர்.


நடப்பவற்றை எல்லாம் பார்த்த, அமிர்தாவோ, ஆரவ் அவள் மீது வந்திருக்கும் காதலை எண்ணி பூரித்து போனாள். இப்படி ஒரு காதல் கிடைக்க தான் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


தன்னை திருடி என்று முத்திரை குத்தப்பட்ட வாயாலே, தன்னை நிரபராதி என்று கூற வைத்து விட்டானே!! தனக்காக மட்டுமே, இதையெல்லாம் செய்த ஆரவ் மீது மேலும் மேலும் காதல் பெருகியது அமிர்தாவிற்கு.


அவனின் கரங்களை இறுக பற்றி கொண்டவள், மகிழ்ச்சியுடன் அவன் தோளில் உரிமையாய் சாய்ந்து கொள்ள, அவனோ,


“என்னவாம் மேடம்க்கு? ஒரே ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு”


என கேலியாய் கேட்டவனின் குரலில் இருந்தது, அப்பட்டமான மகிழ்ச்சி மட்டுமே!!


அவன் கேட்ட கேள்விக்கு, ஆமாம் என்று தலையாட்டிவள்,


“எனக்காகவா?” என கேட்க,


“நமக்காக” என்று திறுத்தினான் ஆரவ். அதில் மேலும் நெகிழ்ந்தவள், அவனை பிடித்திருந்த கைகளின் அழுத்தத்தை கூட்டி, மேலும் அவனை ஒட்டி கொண்டாள்.


“இனி நம்ம லைப்பில் ஹாப்பி மட்டும் தான். அடுத்த சர்பிரைஸ் வெளியே இருக்கு. போலாமா?

என்றதும்,


என்ன? என்று கேள்வியாய் நோக்கினாள் அமிர்தா.


வெளியே அமிர்தாவுடன் வந்தவனை சூழ்ந்து கொண்டது, ஊடகங்கள்.


மீண்டும், என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது, எதனால் இந்த வழக்கு? ராமமூர்த்தி  என்ன செய்தார்? என்பதை வேறு வேறு வார்த்தைகளால் கேள்விகளை தொடுக்க,


ஆரவ்வோ அனைவர் முன்னிலையில், 


“நிச்சயமா, நீங்க கேட்ட எல்லா கேள்விகளுக்கும், பதில் சொல்றேன்.

அதுக்கு முன்னே, ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்,


என்னோட ஏ ஹார்ட்ஏ, இவங்க தான். அமிர்தாஸ்ரீ .இன்னோரு சந்தோஷமா விஷயம், நெஸ்ட் வீக் எங்களுக்கு மேரேஜ்”


என முகம் கொள்ள புன்னகையுடன் கூற, அதிர்ந்து போனது அங்கிருந்தவர்கள் மட்டுமல்ல, அமிர்தாவும் தான்.


அவன் இதழ்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையின் முடிவும்

நானாக இருப்பதில்

அத்தனை கர்வம்

எனக்கு!!










 





Comments

  1. Wow super Machi ana Rama மூர்த்தி ponnuku arav ஒரு panishment உம் கொடுக்கல

    ReplyDelete

Post a Comment