UNEP-24

 அத்தியாயம்-24


ஆரவ், அமிர்தா தனக்கு யார் என்பதை உலகிற்கு கூறி, அடுத்த வாரம் தங்கள் இருவருக்கும் திருமணம் என்று கூறியதும், சற்று நேரத்திற்கு அங்கு அமைதி நிலவியது. அனைவருக்குமே அதிர்ச்சி என்றால், அமிர்தாவிற்கோ இது பேரதிர்ச்சியாக இருந்தது.


கண்கள் விரிய அவனை சட்டென்று திரும்பி பார்க்க, அவன் பார்வையை உணர்ந்து, அவள் புறம் திரும்பியவன், புன்னகையுடன் ஒற்றை கண் சிமிட்டினான். அதில் தன்னிலை வந்தவள், சுற்றம் உணர்ந்து நாணத்துடன் தலையை தாழ்த்திக் கொண்டாள். அனைவர் முன்பு என்ன கேட்க முடியும்? அதனால் அமைதியாகி போனாள்.


ஆரவ்வும் சிரிப்புடன் முன்னே திரும்பியவன்,


"அன்னைக்கு நான் சொன்னேன்ல, என் லவ்வ, இவங்க அப்செப்ட் பண்ணதும் உங்க கிட்ட சொல்றேனு. சோ இவங்களை தான் மேரேஜ் பண்ணிக்க போறேன். மிஸ். அமிர்தாஸ்ரீ. நெஸ்ட் வீக் மிஸஸ். ஆரவ் ஜெயந்தன்"

என அத்தனை மகிழ்ச்சியாய் கூறியவனின் சந்தோஷம் அமிர்தாவையும் தொற்றிக் கொண்டது.


“வாழ்த்துக்கள் சார். நாங்க இதை எதிர்பார்க்கவே இல்லை”

என கூட்டத்தில் ஒருவர் கூற, தன்னுடைய வழக்கமான பாணியில், இடது மார்பில் தன் வலது கையை வைத்து, 


“தேங்க் யூ சோ மச்” என்றான் ஆரவ்.


“சார், அப்புறம், ராமமூர்த்தி சார் மேலே எதுக்கு கேஸ் போட்டு இருக்கீங்க? அவர் என்ன பண்ணார்?”

என கேள்விகள் முன்வைக்கப்பட, ஆரவ்வோ, 


“எல்லாமே சொல்றேன். அமிர்தாவை நான் முதன் முதலில் பார்த்த பொழுதே, அவங்களை நான் விரும்ப ஆரம்பிச்சுட்டேன். அடுத்து என் காதலை சொல்லும் போது, அவங்க அதை ஏத்துகல. 


இருந்தாலும், என்னோட காதல்ல எந்த மாற்றமும் இல்லாமல் தான் இருந்தேன். லாஸ்ட் ப்ரெஸ் மீட் அப்போ உங்க கிட்ட நான் சொல்லி இருந்தேன். பட் இவங்க தான்னு அவங்க பெயரை கூட நான் மென்ஷன் பண்ணல. ஏன்னா, நான் அவங்க மேலே வச்ச காதல், எந்தவிதத்திலும் அவங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்திட கூடாது என்பதால் தான்.


ஆனால், ராமமூர்த்தி சார், எப்படியோ அமிர்தா தான் நான் விரும்புறவங்க என்பதை கண்டு பிடிச்சுட்டார்”

என்றதும், இடையில் ஒருவரோ


“அவருக்கு நீங்க இவங்களை காதலிக்கிறதுனால என்ன பிரச்சனை? அவர் எதுக்கு உங்க காதலி யாருன்னு கண்டுபிடிக்கணும்?”

என கேட்க,


“ராமமூர்த்தி சார்க்கு நான் அவர் கூட படம் பண்ணும் போதே, என் மேலே ரொம்ப பிரியம். என்னோட நலம் விரும்பியா, எனக்கு நிறைய நல்லது  பண்ணி இருக்கார்.


அது எல்லாம், அவரோட நல்ல குணம் அப்படின்னு நினைச்சேன். ஆனால், அது அப்படி இல்லை, வேற ஒன்னு இருக்குன்னு கொஞ்ச கொஞ்சமா தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். அவரோட நோக்கம், என்னை அவர் பொண்ணுக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும் என்பது நாளாடைவில் தான் எனக்கு தெரிஞ்சது.


பட், எனக்கு அவர் பொண்ணு மேலே எந்த இண்ட்ரெஸ்ட்ம்  இல்லை. ஏன்னா நான் தான் அமிர்தாவை காதலிச்சுட்டு இருந்தேனே!! அவர் மறைமுகமாக சில விஷயங்கள் செய்து, அவரோட நோக்கம் என்னன்னு எனக்கு புரிய வச்சார். நானும் அதே போல, எனக்கு அவர் பொண்ணு மேலே எந்தவித அபிப்பிராயமும் இல்லைனு மறைமுகமா சொல்லிட்டு தான் இருந்தேன்.


அதனால் தான் அன்னைக்கு நான் காதலிக்கிற விஷயத்தை உங்க எல்லார் கிட்டயும் சொன்னேன். அப்போ அவரும் என் பக்கத்தில் தான் இருந்தார். இனி புரிஞ்சுப்பார் என்று தான், நான் அப்போ வேலை விஷயமா மும்பை போய் இருந்தேன்.


அதுக்கு பின்னே, என்னோட ஆபீசில் தனியா இருந்த அமிர்தாவை பார்க்க வந்தவர், அவரோட மோதிரத்தை அமிர்தா திருடிட்டதா போலீசில் பொய்யான கேஸ் போட்டு, அவங்களை அரேஸ்ட் பண்ணி கூட்டிட்டு போய் அங்கே அவங்களை அடிச்சு துன்புறுத்த வச்சு இருக்கார். அதுக்கு உடந்தை அங்க இருந்த லேடி போலீஸ். அவங்களும் காசு வாங்கிட்டு அவர் சொன்ன போல செஞ்சு இருக்காங்க.


அமிர்தா மேலே திருட்டு பழி போட்டால், மே பி, நான் இவங்களை வேண்டாம் சொல்ல வாய்ப்பிருக்கு. இல்லை அவங்களை ஸ்டேஷன்லையே அடிச்சு கொலை பண்ணிட்டு, அவங்க எங்க போனாங்கனு தெரியாது சொல்ல பிளான் போட்டு இருக்கலாம். இல்லை, அவங்க பேரில் பொய் கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிட்டாலும் எனக்கும் அவங்களுக்கும் மேரேஜ் நடக்க போறதை தடுக்கலாம், என பிளான் போட்டு அமிர்தாவை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க.


மொத்தமா, அமிர்தாவை என் வாழ்வில் இருந்து எடுத்துட்டு, அவர் பொண்ணை கொண்டு வரணும் என்பதற்காக, நிறைய வேலை பார்த்து இருக்கார்.


அவரை என் அப்பா இடத்தில் வச்சு இருந்தேன். அவர் போய் இப்படியொரு கேவலமான காரியம் பண்ணுவார்னு நினைச்சு கூட பார்க்கல. இப்படி ஒருத்தர் கூட படம் பண்ணேன்னு நினைக்கும் போதே அருவருப்பா இருக்கு.


எனக்கு தெரியும் என் அமிர்தாவை பத்தி. அவங்க ஒரு ஈ, எறும்புக்கு கூட துரோகம் பண்ணாதவங்க.


அவங்க கிட்ட காசு பணம் இல்லைனாலும் ஒருநாளும், யார்கிட்டயும் கையேந்தி நின்னதில்லை. உழைச்சு தான் சாப்பிடணும்னு வைராக்கியமா வாழுறவங்க. அவங்களை லவ் பண்ண இதுவும் ஒரு காரணம். அவங்க மேலே வீண் பழியை போட்டு கஷ்டப்படுத்தினது தான் ரொம்ப வேதனையா இருக்கு. இதுக்கு அவர் டாட்டரும் உடந்தை. எல்லாம் சேர்ந்து தான் பண்ணி இருக்காங்க. ஒரு பொண்ணா இருந்துட்டு, இன்னொரு பொண்ணுக்கு எப்படி இவ்வளவு கஷ்டத்த கொடுத்தாங்க தெரியல.


அமிர்தா இல்லைன்னா, அவர் பொண்ணை எப்படி நான் மேரேஜ் பண்ணிப்பேன் யோசிச்சார் தெரியல. என் லவ் அவ்வளவு வீக் இலைன்னு இப்போ புரிஞ்சு இருக்கும். சோ எங்களுக்கான நியாயம் கிடைச்சு இருக்கு"


என அவன் நடந்த அனைத்தையும் கூறி முடிக்க, அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவர்களுக்கு ராமமூர்த்தி மீதும் அவரது மகளின் மீதும் அத்தனை ஆத்திரமாக வந்தது.


“ச்சைக் என்ன மனுஷன் இந்த ராமமூர்த்தி. காசு பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணலாமா?! பாவம் இல்லையா இவங்க. இப்படியா பண்ணுவாங்க. அவரைலாம் சும்மாவே விட கூடாது. கல்லால் அடிச்சு கொல்லனும்"

என அங்கிருந்தவர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.


“கோபப்படாதீங்க, சட்டப்படி அவங்களுக்கான தண்டனையை வாங்கி கொடுத்தாச்சு”

என்றான் ஆரவ் பொறுமையாக.


“நீங்க சும்மா இருங்க சார். எப்படி இப்படி கிரிமினலா யோசிகிறங்க. இதில் அந்த பொண்ணும் கூட்டு இருக்குனு நினைக்கும் போது எங்களுக்கு மனசே ஆறல”


என கூட்டமாய், அவன் பேட்டியை கண்டு கொண்டிருந்தவர்கள் கொந்தளிக்க, மறைமுகமாக சிரித்து கொண்டான் ஆரவ்.


சரியாக அந்நேரம் காவல்துறை வாகனத்தில் ராமமூர்த்தியை ஏற்ற அழைத்துக் கொண்டு வர, அவரை  சூழ்ந்து கொண்டனர் மக்கள்.


“யோவ் நீ மனுஷன் தானா? பெரிய மனுஷன் மாதிரி ஊருக்குள் திரிஞ்சுட்டு இவ்வளவு சீப்பான வேலைய பார்த்து இருக்க? உன்னை எல்லாம் நடுரோட்டில் நிக்க வச்சு செருப்பால் அடிக்கணும்”


என ஆளாளுக்கு ராமமூர்த்தியை கரித்துக் கொட்டி, கையில் கிடைத்தவற்றை அவர் மேல் தூக்கி எறிய, அவமானத்தில் கூனி குறுகி போனார் அவர்.


அவரின், அவமானத்தை ரசித்து பார்த்த ஆரவ், அவரையே பார்த்து கொண்டிருக்க, ராமமூர்த்தி, தன் மேல் வீசப்பட்ட கல்லையும், மண்ணையும் தடுத்து கொண்டிருந்தவர் பார்வையில் ஆரவ் விழுந்தான். அவனோ  நக்கலாக அவரை பார்த்து புன்னகைக்க, அவரோ வெறித்து பார்த்தார் அவனை.


சிறிது நேரம் முன்பு, அவன் கூறிய, இதோடு முடிஞ்சு போகலை, இன்னும் இருக்கு என்பதன் அர்த்தம் தற்பொழுது புரிந்தது ராமமூர்த்திக்கு.


எத்தனை செல்வாக்குடன் இருந்த தன்னை, இப்படி முன் பின் தெரியாவதவர்கள் எல்லாம் அடித்து அவமானம் படுத்தும் நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டுடானே” என அவருக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது. ஒரே ஒரு நாளில் அவரின் பேர், புகழ், செல்வாக்கு என அனைத்தையும் ஒன்றுமில்லாமல் செய்து விட்டான் ஆரவ்.ஆரவ்வின் பேட்டியை கண்ட திரைப்பட சங்கம், ராமமூர்த்தியை தயாரிப்பாளர் உறுப்பினரரில் இருந்து நீக்குவதாக அறிக்கை விட்டது. இனி வரும் அவரால் எந்த படத்திற்கும் தயாரிப்பு செய்ய முடியாது.. மீறி செய்தால், அத்திரைப்படம் வெளிவர விட மாட்டோம் என்றும் கூறி இருந்தது.


ஆரவ் போட்ட திட்டம் அனைத்தும் நிறைவேறியது.


காவலர்கள் இடையிட்டு ராமமூத்தியை மீட்டு, வாகனத்தில் ஏற்றி விட, வாகனமும் அங்கிருந்து புறப்பட்டது. கண்ணில் இருந்து மறையும் வரை ராமமூர்த்தி, ஆரவ்வை முறைத்து பார்த்து கொண்டே இருக்க, அவர் பார்வையை அசராமல் எதிர்கொண்டான் ஆரவ்.


அதேசமயம் இவன் பேட்டியை நேரலையில் கண்ட மற்ற மக்களும், அவனின் ரசிகர்களும், ராமமூர்த்தி  வீட்டினை முற்றுகையிட்டு, அவர் வீட்டில் கல்லெறிந்து, அவர்கள் வீட்டு பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தனர்.


வீட்டில் தனியாக இருந்த, கஸ்தூரியும், ஸ்ரேயாவும் பயந்து, தெரிந்தவர்களுக்கு அழைக்க, அவர்களோ அவளை திட்டி தீர்த்தனர்.


“நீயெல்லாம் ஒரு பொண்ணா? உன் அப்பாக்கு தான் அறிவில்லைன்னா உனக்கு கூடவா இல்லை. இவ்வளவு கீழ்தரமா நடந்து இருக்கீங்க. இனி என்னை கூப்பிடாதே"

என்றதும், 


“அங்கிள் என்னாச்சு? ஏன் இபப்டியெல்லாம் பேசுறீங்க? எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க”

என ஸ்ரேயா கெஞ்ச,


“பண்றதெல்லாம் பண்ணிட்டு என்ன நடந்ததுன்னு வேற கேட்கிறீயா? டிவியை  போடு பாரு"


என அவர் தொடர்பை துண்டித்து விட, உடனே தொலைக்காட்சியை உயிர்ப்பித்து பார்க்க, ஆரவ் கொடுத்த பேட்டி, ராமமூர்த்திக்கு வழங்கப்பட்ட தண்டனை, மக்களின் கொந்தளிப்பு என அனைத்தும் அதில் ஒளிபரப்பப்பட, தோய்ந்து போய் அமர்ந்து விட்டாள் ஸ்ரேயா.


கஸ்தூரி மகளை கட்டிக் கொண்டு


“அப்பவே நான் சொன்னேன். இதெல்லாம் வேண்டாம். அந்த பையனுக்கு பிடிகலைன்னா விட்டுடுங்கனு. ரெண்டும் பேரும் கேட்கவே இல்லை. இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கீங்கனு பாரு. யாரும் நமக்கு உதவி கூட பண்ண வர மாட்டேன்கிறாங்க”


என அழுது கரைய, ஸ்ரேயாவுக்கும் இதனை எப்படி சமாளிப்பது என்பது புரியவில்லை. தந்தை தான் அவளது பக்கப்பலம், அவர் இல்லாத நேரத்தில் இந்த சூழ்நிலையை எப்படி கடந்து வருவது என்பது தெரியவில்லை. வெளியே கேட்கும் மக்களின் கொந்தளிப்பு அவளை ரொம்பவே அச்சுறுத்தியது. செய்த தவறு எல்லாம், அவள் முன்பு பூதாகரமாக நிற்க, பயத்தில் வெடவெடத்து தாயை இறுக பற்றி கொண்டாள். இங்கு அங்கு எங்கும் நகரவில்லை. நகரவும் முடியவில்லை.


—-----------------


“சார், மேடம் கிட்ட, சில விஷயங்கள் கேட்கலாமா?”


என மீண்டும் ஊடகவியலாளர்கள் அமிர்தாவை பேட்டி காண கேள்விகளை கேட்க ஆரம்பிக்க, அதில் அதிர்ச்சியாய் அவர்களை நோக்கினாள் அமிர்தா.


அவர்கள் கேட்டதும் பயந்து போனவள், சட்டென்று ஆரவ்வின் கையை பிடித்துக் கொண்டு, அவன் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள். அவளின் நிலை அவனுக்கும் புரிந்தது.


“ஸாரி.., அவங்க இவ்வளவு நேரம் நின்னதே பெரிய விஷயம். ரொம்ப நேரம் நிக்க முடியாது. கால் வலிக்கும். இன்னொரு நாள் நிச்சயம் பேசலாம்”

என்றவனுக்கு, 


“ஓகே சார். அவங்க ஹெல்த் தான் இப்போ முக்கியம். நாங்க நெஸ்ட் டைம் இன்டெர்வியூ பண்ணிக்கிறோம். 


“சார், உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்ல ஆசைப்படுறோம். இவ்வளவு நேரம் பேசும் போது, ஒரு தடவை கூட இவங்களை, நீங்க மரியாதை குறைவா ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. வார்த்தைக்கு வார்த்தை மரியாதை கொடுத்து பேசுறீங்க. கிரேட் சார் நீங்க”

என அவனை பாராட்ட,


“இதில் பாராட்ட எதுவுமே இல்லை. என் மனைவிக்கான மரியாதையை நான் தான் முதலில் கொடுக்கணும். நான் கொடுத்தா தான், மத்தவங்களும் மரியாதை கொடுப்பாங்க. இது ஒரு நார்மலான விஷயம். இதை பெரிசா பேச வேண்டாம். என்றவன்,


“நாங்க கிளம்புறோம், மேரேஜ் டேட், டைமிங் எல்லாம் சோசியல் மீடியாவில் அப்டேட் பண்றேன். தேங்க் யூ”


என பேட்டியை முடித்துக் கொண்டு, அவளை யாரும் தொந்தரவு செய்யாது வகையில், குஞ்சை பாதுகாக்கும் தாய் பறவை போல அத்தனை அணைவாக, பொத்தி, பாதுகாத்தப்படி அழைத்து வந்து காரில் ஏற்றி, தானும் ஏறி கொள்ள, கார் அங்கிருந்து புறப்பட்டது.


காரில் அமர்ந்த பின்பும் கூட, அவளை பிடித்திருந்த நிலையை மாற்றி கொள்ளவே இல்லை ஆரவ். நடப்பது அனைத்தும் கனவா? நனவா? என்பது புரியாது இன்னும் இன்னும் அவனை நெருங்கி அவன் தோள் சாய்ந்தப்படி தான் அந்த பயணத்தை மேற்கொண்டாள் அமிர்தா.


“உண்மையாவே, அடுத்த வாரம் நமக்கு கல்யாணமா?”

என தோள் சாய்ந்தப்படியே அமிர்தா கேட்க,


“இல்லை, சும்மா சொன்னேன்,” என்றவனை சட்டென்று அமிர்தா நிமிர்ந்து பார்க்க,


“என்ன பார்க்கிற? போதும் போதும் இந்த கண்ணுக்குள் என்னை மொத்தமா சுருட்டி வச்சுகிட்டது. இந்த ஜென்மத்தோட அடிமை சாசனத்தை தான் எழுதி கொடுத்துட்டேனே!! அப்புறம் இன்னனமும் இப்படி ஏன் பார்க்கிற? 


உலகத்துக்கே கேட்கிற மாதிரி நமக்கு நெஸ்ட் வீக் மேரேஜ்னு சொல்லிட்டேன். இப்போ வந்து உண்மையா கேட்டால்!! நான் என்ன சொல்றது?”

என அவன் கூறும் பாவனையில் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.


“நீங்க எனக்காக நிறைய செய்து இருக்கீங்க!! இதுக்காக நான் என்ன கைம்மாறு செய்ய போறேன் தெரியல”

என்றவளின் குரல் கமற, அவள் முகத்தை நிமிர்த்தி,


“என் மேலே நீ வச்சு இருக்கிற உன் காதலை மனப்பூர்வமா ஒத்துக்கோ. அது போதும்”

 என்று அத்தனை எதிர்ப்பார்ப்புடன் கூறியவனின் பார்வையை சந்திக்க முடியாது, அவள் இமை தாழ்த்தினாள்.


அவன் மீது அத்தனை காதல் இருக்கிறது தான். அதன் வெளிப்பாடு தான் இது. ஆனால் அதை வாய் வார்த்தையா கூற ஏனோ ஒரு தயக்கம், எப்படி கூறுவது என்பது தெரியவில்லை. அமைதியாகி போனாள். அவளின் நிலை அவனுக்கும் புரிந்தது. அதற்கு மேல் அவனும் எதுவும் பேசவில்லை.


நேராக அவர்கள் வாகனம் வந்து நின்ற இடம், ஆரவ்வின்  இன்னொரு வீடான கெஸ்ட் ஹவுஸ்ற்கு  தான் கூட்டி வந்திருந்தான்.


அவர்கள் வந்ததும் கையில் ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தார் நிர்மலா. 


“வாமா, உடம்பு இப்போ பரவாயில்லையா?” என அவளிடம் கேட்க, அவளுக்கோ அவரை கண்டதும் முதலில் பயம் தான் வந்தது.


ஆரவ்வை இறுக்கமாக பிடித்து கொண்டவள் அவனை பயத்துடன் பார்க்க, அவனோ புன்னகையுடன்,


“அம்மா” என்றான். எங்கேயோ பார்த்த முகம் போல் தான் தோன்றியது. ஆனால், அவனின் தாய் இவர் தான் என்பது தற்பொழுது தான்  தெரிந்தது. முதல் முறையாக நேரில் பார்க்கிறாள். அவர் முன்னாடியே ஆரவ்வின் கையை பிடித்துக் கொண்டிருப்பதை தவறாக எண்ணுவாரோ என பட்டென்று அவன் கையை விடுத்து, அவரை பார்க்க, நிர்மலாவும் புன்னகையுடன்,


“நான் தப்பாலாம் எதுவும் நினைக்க மாட்டேன். நீ தாராலமா என் பையனை பிடிச்சுக்கலாம்”


என்று கூற, அவளோ சங்கடமாக நெளிந்தாள். அவளின் சங்கடம் உணர்ந்து, ஆரவ்வோ அவள் தோள் சுற்றி கையை போட்டு கொள்ள, அமிர்தாவோ அதிர்ந்து போனாள்.


நிர்மலா இருவருக்கும் ஆரத்தி சுற்றி முடித்து பொட்டு வைக்க, உள்ளே போக சொல்ல, அப்பொழுதும் அவன் கையை எடுக்கவில்லை.


“கையை எடுங்க. தப்பா நினைக்க போறாங்க” என மெல்ல கிசுகிசுக்க, 


“என் வைப் மேலே நான் கை போடுறேன். அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. வேணும்னா அவங்க கிட்டவே கேட்கவா”


என அசராமல் கூறியவன், தாயை அழைக்க வாய் திறக்க, சட்டென்று கை வைத்து அவன் வாய் பொத்தினாள்.


“என்ன பண்றீங்க? சும்மா இருங்க கொஞ்ச நேரம்”


என அத்தனை உரிமையாய் அவனிடம் நடந்து கொண்டதை எண்ணி உல்லாசமானான் ஆரவ். உல்லாசமாய் அவளை கண்கள் சிரிக்க பார்த்து, சட்டென்று அவள் மூடியிருந்த கையில் முத்தம் வைக்க, அதிர்ந்து போனாள் அமிர்தா.


கண்கள் விரிய அவனை பார்த்தவள், சட்டென்று கையை விலகிக் கொண்டு, அவனை விட்டு தள்ளி நிற்க, அதற்குள் நிர்மலா உள்ளே நுழைந்தார்.


“ஏன் ரெண்டு பேரும் நின்னுட்டு இருக்கீங்க? உட்காருங்க” என்பதற்குள் அங்கு வந்து சேர்ந்தார் பாலகிருஷ்ணன். அவரை கண்டதும் அவளுக்கு “அப்பா” என அறிமுகப்படுத்த, அமிர்தாவிற்கோ கை கால்கள் எல்லாம் உதறியது.


“உடம்பு எப்படி இருக்கு மா?” என அவர் கேட்டதும், எல்லா பக்கமும் தலையை ஆட்டி வைத்தாள் அமிர்தா.


அஞ்சலியும் ஒரு அறையில் இருந்து வெளிவர, அவளை கண்டதும், ஓடி சென்று கட்டிக் கொள்ள, அவளும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.


“அஞ்சலி, இங்க பாரு, அழக் கூடாது. அக்கா வந்துட்டேன்ல. எனக்கு ஒன்னுமில்லை. ஆமாம் நீ இங்க எப்படி?”

என கேட்க, அவளும் அன்று நடந்த அனைத்தையும் செய்கையில் கூற, அன்றிலிருந்து ஆரவ் வீட்டில் தான் இருப்பதாக கூறினாள். நிர்மலாவும் பாலகிருஷ்ணனும் தன்னை நன்றாக பார்த்து கொள்வதாக கூற, சட்டென்று திரும்பி ஆரவ்வை பார்த்து கண்களாலையே நன்றி கூற, அவனோ அவளை பார்த்து புன்னைகையுடன் கண் சிமிட்டினான்.


ஆரவ்வின் காதல் அவளை திக்கு முக்காட செய்தது. தான் எவ்வளவு தூரம் விலக நினைத்தாலும், தன்னை அவனிடமே இழுத்து வந்து விடுகிறது அவன் காதல்.


தற்பொழுது மட்டும் யாருமில்லாமல் இருந்து இருந்தால், நிச்சயம் ஓடி சென்று கட்டி பிடித்து தன் காதலை வெளிப்படுத்தி இருப்பாள். பெரியவர்கள் இருக்கிறார்கள் என்று அமைதி காத்தவளின் பார்வை காதலாக அவனையே தொட்டு தொட்டு மீண்டது.


“உள்ளே வரலாமா!!” என வாசலில் கேட்ட குரலில் அனைவரும் திரும்பி பார்க்க, அங்கே சதாசிவமும் கலாவும் நின்றிருந்தனர்.


“வாங்க,” என அழைத்த பாலகிருஷ்ணன் அவரை வரவேற்று அமர கூறினார். சதாசிவம் அமிர்தாவின் அருகில் சென்று அவள் தலையை ஆதுரமாக தடவி கொடுத்து,


“எப்படி இருக்க டா. எல்லாம் கேள்விப்பட்டேன். மனசே கஷ்டமாகி போச்சு. இனி எல்லாமே நல்லதாவே நடக்கும். அதான் தம்பி உன் கூடவே இருக்கிறாரே!!”


என்றதும், ஆரவ்வை திரும்பி பார்த்தாள் அமிர்தா. அந்த ஒற்றை காதலான பார்வை, அவன் வாழ்நாள் முழுவதும் போதுமே!!


“நான் நல்ல இருக்கேன் மாமா. நீங்க எப்படி இருக்கீங்க? என்ன இங்க வந்து இருக்கீங்க?”


என்று கேட்க,  “தம்பி தான் மா வர சொல்லி இருந்தாங்க. கொஞ்சம் பேசணும் சொன்னாங்க அதான் வந்தோம்”

என்று பதில் கூறியவர், அஞ்சலியின் நலத்தையும் விசாரித்து விட்டு  வந்து இருக்கையில் அமர்ந்தார் சதாசிவம்.


சதாசிவம் புன்னகை முகமாக இருந்தாலும், கலா கடுகடுவென தான் அமர்ந்திருந்தார்.


அஞ்சலியையும், அமிர்தாவையையும் கண்டு முகத்தை சுழித்து கொண்டவர், 


“இதான் உங்க வீடா? ஹ்ம்ம் நல்ல தான் இருக்கு”

என சுற்றும் முற்றும் பார்த்தப்படி கேட்க,


“இல்லைங்க, இது எங்களோட கெஸ்ட் ஹவுஸ். வீடு வேற இடத்தில் இருக்கு” என்று நிர்மலா கூறியதும்,


“அமிர்தா, நீ கெட்டிக்காரி தான். உங்க அம்மா மாதிரி விவரம் இல்லாமல் இல்லை நீ. நல்ல பெரிய இடமா தான் புடிச்சு இருக்க”


என வார்த்தையில் நஞ்சை கக்க, சதாசிவமோ,


“உன்னை பேசக்கூடாதுனு சொல்லி தான் கூட்டிட்டு வந்தேன். அமைதியா இருக்கியா. இல்லை வீட்டுக்கு கிளம்புறியா?”

என மெல்லமாக அவரைத் திட்ட, கழுத்தை நொடித்து கொண்டார் கலா.


அவர்களுக்கு குடிக்க, காபியை கொண்டு வந்து வேலைக்காரர் கொடுத்ததும், அதனை பருக ஆரம்பித்தனர் இருவரும்.


பாலகிருஷ்ணன், நிர்மலா இருக்கையில் அமர்ந்திருக்க, அவர்களுக்கு பின்பு ஆரவ், அமிர்தா, அஞ்சலி நின்றிருந்தனர்.


“சார், உங்களுக்கு ஏற்க்கனவே இந்த விஷயம் தெரிஞ்சு இருக்கலாம். இருந்தாலும், முறைப்படி சொல்ல வேண்டியது எங்க கடமை.


ஆரவ், அமிர்தாவை விரும்புறான். அவளை தான் கல்யாணம் பண்ணனும் இருக்கான். ஏற்க்கனவே நிறைய பிரச்சனையை ரெண்டு பேரும் கடந்து வந்துட்டாங்க. இனியும் தள்ளி போட வேண்டாம் தான், அடுத்த வாரமே ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம் முடிவு பண்ணி இருக்கோம்.


அமிர்தாவிற்கு, அப்பா, அம்மா இல்லைனு கேள்விப்பட்டோம். நீங்க தான் அவளை வளர்த்து ஆளாகினது. உங்க சம்மதம் வேணும். அதனால் தான் உங்களை கூப்பிட்டோம். நீங்க என்ன சொல்றீங்க?”

என பாலகிருஷ்ணன் கூற, 


“ரொம்ப சந்தோஷம் சார். அமிர்தா  இவ்வளவு பெரிய குடும்பத்தில் மருமகளா போக போறா என்பதே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷம். இனி அவ உங்க பொறுப்பு. சின்ன வயசில் இருந்தே நிறைய கஷ்டப்பட்டுட்டா, இனியாவது நல்ல இருக்கணும். நீங்க நல்ல பார்த்துப்பீங்கன்னு நம்பிக்கை இருக்கு”

என்றார் அவரும் மகிழ்ச்சியாக.


இவர்கள் பேச்சில் இடையிட்ட கலா,


“உங்க பையனுக்கு அமிர்தாவை கல்யாணம் பண்ண போறீங்க சரி. அமிர்தாவை பத்தி முழு விவரமும் தெரிஞ்சு தானே பண்ண போறீங்க” 

என பீடிகை போட,


“அமிர்தாவை பத்தி என்ன விவரம் இருக்கு தெரிஞ்சுக்க?”

என்று கேட்டார் நிர்மலா.


“அவ அப்பா, அம்மாவை பத்தி தெரியுமா?”

என்று கலா கேட்க, 


சதாசிவமோ, “கலா இப்போ இது ரொம்ப முக்கியமா? கொஞ்ச நேரம் சும்மா இரு” என அடக்கினார்.


“நீங்க சும்மா இருங்க. ஒருவேளை கல்யாணத்துக்கு பின்னாடி விஷயம் தெரிஞ்சு, அமிர்தாவை வீட்டை விட்டு அனுப்பிட்டா என்ன பண்ணுவீங்க. அதனால் முழுசும் சொல்லிடுவோம்”


என்ற கலா அமிர்தாவின் பெற்றோர்களை பற்றி கூற ஆரம்பிக்க, அமிர்தாவோ கைகளை பிசைந்து கொண்டிருந்தாள். அஞ்சலி அமிர்தாவின் முகத்தை கலக்கத்துடன் பார்க்க, அவளை தன் மார்பில் பின்னோடு சாய்த்து கொண்டு தட்டி கொடுத்தாள் அமிர்தா.


“என்ன விஷயம்? அமிர்தாவோட அப்பா, அம்மா உயிரோடு இல்லை அதானே!!

என நிர்மலா கேட்க,


“அவளோட அப்பா தான் இறந்து போயிட்டார். ஆனால் அம்மா உயிரோடு தான் இருக்கா. என்றதும்,


“உயிரோடு இருக்காங்களா? எங்கே இருக்காங்க?”


என திகைத்து போனார் பாலகிருஷ்ணன்.


“உயிரோடு இருக்கானு தெரியும். எங்கே இருக்கான்னுலாம் தெரியாது. ஏன்னா இவ அம்மா, இவளுங்க  சின்ன பிள்ளையா இருக்கும் போதே எங்க தெருவில் உள்ள ஒருத்தனோடு ஓடி போய்ட்டா. சின்ன பிள்ளைங்க இருக்கேன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல், எங்க தலையில் கட்டிட்டு, அவ சந்தோஷம் தான் முக்கியம்னு போயிட்டா.


அவ பொண்ணை தான் உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வர போறீங்க. நீங்க வேற நல்ல அந்தஸ்து உள்ள குடும்பம். நாள பின்னே விஷயம் தெரிஞ்சு ஏன் முன்னமே சொல்லல கேட்டா, அதான் சொல்லிட்டேன்”


என வந்த வேலை முடிந்தது என்பது போல அவர்களை பார்க்க, நிர்மலாவும், பாலகிருஷ்ணனும் அதிர்ந்து போய் அமர்ந்திருந்தனர்.

உண்மையா என்பது போல சதாசிவதை பார்க்க, அவரும் ஆமாம் என தலையை குனிந்து கொண்டார்.


அமிர்தாவோ மிகவும் அவமானமாக உணர்ந்தாள். அவர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்கள் என எண்ணி கூனி குறுகி போய் நின்றிருந்தாள். அருகில் நின்றிருந்த ஆரவ்வை நிமிர்ந்து பார்க்க கூட திராணி இல்லாமல் இருந்தாள்.


இந்த விஷயத்தை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்டால், என்ன சொல்வது? தான் அவனை ஏமாற்றி விட்டதாக  நினைப்பானோ என்று யோசித்து யோசித்து கலங்கி போனாள்.


நிர்மலா, அதிருப்தியாக மகனை பார்க்க, ஆரவ்வோ, கலாவின் புறம் திரும்பி,


“அதைப்பத்தி நீங்க எதுவும் கவலை 

படவேண்டாம். அமிர்தா எல்லாமே என்கிட்ட சொல்லிட்டா. எனக்கு அதனால் எந்த பிரச்சனையும் இல்லை. அவங்க அம்மா ஏதோ பண்ணாங்க என்பதற்க்காக இவங்களை எப்படி குற்றம் சொல்ல முடியும்? நான் கல்யாணம் பண்ணிக்க போறது அமிர்தாவை, அவளை பத்தி எனக்கு தெரியும். அது போதும் எனக்கு”

என திட்டவட்டமாக கூற, கலா தான் தன் வாயை மூடி கொள்ள வேண்டியதாய் போயிற்று.


ஆர்வ இப்படி கூறியதும், திகைத்து போய் சட்டென்று அவனை அமிர்தா திரும்பி பார்க்க, அவனோ கண்களை சிமிட்டி புன்னகைத்தான்.


“ஆரவ் சொல்றது தான் எனக்கும் தோணுது. அவங்க எப்படி இருந்தா என்ன? அவன் வாழ போறது அமிர்தா கூட, இல்லாதவங்களை பத்தி நமக்கென்ன?”


என பாலகிருஷ்ணன் கூற, கலாவின் முகமோ தொங்கி போயிற்று. ஆனால் சதாசிவதிற்க்கோ நிரம்ப மகிழ்ச்சி.


“ரொம்ப நன்றிங்க. தப்பு பண்ண அவ எங்கேயோ சந்தோஷமா இருக்கா, ஆனால் தப்பே பண்ணாத பிள்ளைங்க ரெண்டும் காலத்துக்கும் கலங்கி போய் இருக்குங்க. அவங்களை புரிஞ்சுகிட்டதுக்கு ரொம்ப நன்றிங்க”


என சதாசிவம் கூற, அடுத்து திருமணத்தை பற்றிய பேச்சுகள் நடைபெற்றன.


அமிர்தாவோ அடிக்கடி ஆரவ்வை திரும்பி திரும்பி பார்ப்பதுமாகவே இருந்தாள். அவள் மனதிலோ அத்தனை குழப்பம். ஏற்க்கனவே ஆரவ்விற்கு தன் அன்னையை பற்றி தெரியுமா? இல்லை தற்பொழுது தான் தெரியுமா? தெரிந்தும் தன்னை ஏற்று கொள்ள முடிவெடுத்து விட்டானே!! எதனால்? என ஏகப்பட்ட குழப்பங்கள் அவள் மனதில்.


அவள் அசைவிலேயே அனைத்தும் கண்டுபிடிப்பவன் அவன், அவள் கண்களில் வந்து போகும் குழப்பத்தையா அறியாமல் போவான். அவனுக்கு அவள் எண்ணம் புரிந்தது. இருந்தும் சபையில் எதுவும் பேச முடியாதே!!


அடுத்த வாரம் கோவிலில் திருமணம். அதன் பின் அன்றிரவே பிரபலமான ஓட்டலில் வரவேற்பு என முடிவு செய்யப்பட்டது. அதற்கான வேலைகளில் அனைவரும் முழ்கி போயினர்.


அமிர்தா அவளுக்கென கொடுக்கப்பட்ட அறையில் அமர்ந்து யோசித்து கொண்டிருக்க, உள்ளே நுழைந்தான் ஆரவ்.


அவன் வந்தது கூட தெரியாது யோசித்து கொண்டிந்தவள் முன்பு வந்து நின்றவன் கைகளை கட்டி கொண்டு அவளையே பார்க்க, வெகுநேரம் ஆகியும் கூட அவள் நிலையில் மாற்றம் இல்லை.


எதேர்ச்சையாக அவள் நிமிர்ந்து பார்க்க, ஆரவ்வை அங்கு கண்டதும் அதிர்ச்சியில் கண்கள் விரிந்தன அமிர்தாவுக்கு.


“எப்…போ.. வந்தீங்க? நான் கவனிக்கவே இல்லை”

என எழுந்து நிற்க, 


“நான் வந்தது கூட தெரியாமல் அப்படி என்ன யோசனை?”


“அது.. அது.. வந்து” என்றவள் திக்கி திணற,


“என்ன சொல்லு? எது இருந்தாலும் சொல்லு. நம்ம மேரேஜ் நடக்கும் போது, நம்ம ரெண்டு பேருக்கும் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும். வேற எந்த சங்கடமும் இருக்க கூடாது”


“அது.. என் ..அம்மா.., என் அம்மா பத்தி நான் உங்க கிட்ட முன்னவே சொல்லி இருக்கணும். ஆனால் சொல்றதுகான சந்தர்ப்பம் அமையல. ஆனால் நீங்க நான் முன்னமே சொல்லிட்டேன், உங்களுக்கு தெரியும்னு எனக்காக பொய் சொல்லிடீங்க.


உங்களுக்கு இந்த விஷயம் தெரிந்ததும் அதிர்ச்சியாய் இருப்பீங்க. இப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ண போறோமேனு உங்களுக்கு வருத்தமா இருக்கலாம். நான் தான் ஆரம்பத்தில் இருந்தே சொல்றேனே நான் உங்களுக்கு பொருத்தமானவ இல்லைனு. இப்போவும் ஒன்னும் இல்லை. நான் உங்களுக்கு வேண்டாம். வேறே ஒரு நல்ல பொண்ணை…,”


என அவள் முடிக்க வந்த வார்த்தைகளை எல்லாம், அவன் இதழ்களுக்குள் தான் சென்று முடிவடைந்தது. சட்டென்று அவளை இழுத்து அணைத்து இதழைத்து இருந்தான் ஆரவ்.


சத்தம் வராது, இதழும் இதழும் பேசும் பாடத்தை வஞ்சனை இல்லாது, அவளுக்கு ஆரவ் சொல்லி கொடுக்க, திடீரென்று  இதழ்கொண்டு நடத்திய இதழணைப்பில் திகைத்து போனாள் அமிர்தா. அவளின் திகைப்பை  ரசித்தப்படி, மேலும் மேலும் அவள் இதழுக்குள் மூழ்கினான் ஆரவ் ஜெயந்தன்.



அவளின் ஒற்றை பார்வைக்கே 

பரிதவிக்கும் என் இதயம்

எப்படி தான் தாங்கி கொள்ளும்

அவளின் அருகாமையை

மொத்தமாய் இல்லாவிட்டாலும்

ஒரு இதழ் முத்தமாவது 

எடுத்து கொள்கிறேனே!!


பிடிக்கும்…























Comments