UNEP-27

 அத்தியாயம்-27


            காரிருளில் மிதந்து வரும் தென்றலை போல் வலம் வந்து கொண்டிருந்தாள் நிலா மகள். அழகான இரவு, ரம்மியான வேளை, இதமான தென்றல் காற்று என, அந்த இரவு வேளை அத்தனை சுகமாய் இருக்க, நகரத்தின் அந்த  பிரம்மாண்டமான ஹோட்டலில், ஆரவ்ஜெயந்தன் மற்றும் அமிர்தாவின் வரவேற்பு விழா கோலாகலமாக தொடங்கியது.


நகரமே போக்குவரத்தில் ஸ்ம்பித்து போகும் வகையில், அந்த இடத்தில் பிரபலங்களின் வருகை அலைமோதியது. திரையுலகத்தில் இருந்த அத்தனை பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த காரணத்தினால், ஆரவ்வின் திருமணவிழாவில் கலந்து கொள்ள, இந்தியா முழுவதும் உள்ள அத்தனை திரை பிரபலங்களும், அங்கு வருகை புரிந்து இருந்தனர்.


அவர்களை காண வேண்டி, மக்கள் கூட்டம்  ஒருபக்கம் குவிய, செய்தி சேகரிக்க ஊடகளாவியவர்கள் ஒரு பக்கம் குவிய அவர்களை கட்டுப்படுத்த, காவல்துறையும் அங்கு குவிந்து இருந்தனர்.


ஒருவர் பின் ஒருவராக வந்த பிரபலங்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து, மலர்தூவி வரவேற்பு கொடுத்தார் பாலகிருஷ்ணன். அனைவருக்கும் பட்டாடையில் ஜொலித்த ராஜ சிம்மாசனத்தில் அமர வைத்து உபசரிப்பு கொடுக்கப்பட்டது.


ஓரளவிற்கு பிரபலங்கள் வந்து விட்டிருக்க, டிஜேக்கள், இசை தட்டை வண்ண வண்ண விளக்குகளின் மாயசாலத்தில், ஒலிக்க செய்ய, அந்த இடமே இசையின் பிடியில் அதிர்ந்தது.


சட்டென்று அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, இசையும் நிறுத்தப்பட்டு, அந்த இடமே இருள் சூழ்ந்த நிசப்தமான இடமாக ஒரு சில நிமிடங்கள் வைக்கப்பட, அனைவரும் சட்டென்று இருட்டில் தடுமாறினார்.


உடனே ஒலிபெருக்கியில், டிஜே, ஆரவ் ஜெயந்தனையும், அமிர்தாவையும் பற்றி வர்ணனை கொடுத்து வரவேற்பு கொடுக்க, அங்கே ஒரு இடத்தில் மட்டும் விளக்கு எறியப்பட, அங்கே ஆரவ்ஜெயந்தனும், அமிர்தாவும் ஒருவருக்கொருவர் கைகோர்த்து, அந்த வரேவேற்பு கம்பளத்தில் நின்றிருந்தனர்.


அனைவரும் அவர்களை திரும்பி பார்த்த சமயம், திரையிசை பாடல் ஒலிக்கப்பட, ஆரவ்வோ, அமிர்தாவின் கையை பற்றி ஒரு சுற்று சுழற்றி நிற்க வைத்து, பாடலுக்கு ஏற்ப நடனம் ஆட, அவளோ, ஒன்றும் புரியாது அவன்  இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.


கூடும் காதல் கைகள் விலகாது என்றும்…
தேடும் ஏக்கம் நெஞ்சில் தீராதம்மா…

 காதல் வாழும் வாழும்…
அழகிய நினைவு…

இலக்கண கவிதை…
எழுதிய அழகே…
உருகியதே என் உயிரே…

உனதிரு விழிகள்…
இமைத்திடும் பொழுதில்…
பகலிரவு உறைகிறதே!!

என்று ஒலிக்கப்பட்ட பாடலுடன் கூடவே பாடியவன், அதற்கு ஏற்றார் போல் நடன அசைவுகளை ஆடியவன், கடைசியில் அவளை கையில் ஏந்தி கொண்டு நடக்க ஆரம்பிக்க, சட்டென்று தூக்கியவனை கண்டு, அதிர்ந்தவள், விழுந்து விடாமல் இருக்க, அவன் தோளை சுற்றி கைபோட்டு கொண்டு, அவஸ்தையை நெளிய, அதை பற்றியெல்லாம் அவன் கவலை கொள்வது போலவே தெரியவில்லை.

அப்படியே அவளை தூக்கி கொண்டு மேடை வரை நடந்து வர, வரும் பாதையில் அவன் வர வர ஒவ்வொரு விளக்குகளாக அரைவட்ட வடிவில் ஒளிர, அத்தனை ரம்மியமாக அனைத்தும் புகைப்படமாக்கப்பட்டது.

அடர் ஒயின் வண்ணம் கொண்ட, கவுன் போன்ற ஆடையை அமிர்தா அணிந்திருக்க, அதற்கேற்றார் போல, கருப்பு வண்ண கோட் அணிந்து, உள்ளே வெள்ளை நிற சட்டையும், கருப்பு நிற பேண்டும் அணிந்து, அவளை தாங்கி கொண்டே வந்தவன், பாடல் வரிகளை அவளை பார்த்து கொண்டே பாட, அவளுக்கோ வெட்கம் தாளவில்லை.

அத்தனை பேர் இருக்க, இதுஎன்ன, என்பது போல் அவன் கையில் நெளிந்தப்படியே இருக்க, மேடை வந்த பின்பு தான் அவளை இறக்கி விட்டான் ஆரவ் ஜெயந்தன்.

இருவரும் ஒரு சேர மேடையை அலங்கரிக்க, விதவிதமாக அவர்களை புகைப்படம் எடுத்தனர் புகைப்பட கலைஞர்கள்.

“சார், பார்ஹெட்ல கிஸ் கொடுக்கிற போல போஸ் கொடுங்க,”

என்றதும், திகைப்புடன் அவனை அமிர்தா திரும்பி பார்க்க, ஆரவ்வும் சரியாக அந்நேரம் அவளை பார்த்து புன்னகைத்தான்.

‘வேண்டாமே!!’ என கண்களாலேயே அமிர்தா கெஞ்ச, ஆரவ்வோ, முன்னே திரும்பி,

“இட்ஸ் டூ மை பிரைவசி. அந்த போஸ்லாம் வேண்டாம். போதும் போட்டோஸ் எடுத்தது. எல்லாரும் வெயிட் பண்றாங்க”

என புகைப்படகலைஞர்களிடம் கூற, அப்பொழுது தான் அமிர்தாவிற்கு அப்பாடா என்று இருந்தது.

அதன் பிறகு  ஒவ்வொரு பிரபலங்களும் மேடைக்கு வந்து இருவருக்கும் வாழ்த்து கூறி புகைப்படம் எடுத்து கொள்ள, ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுதும் அமிர்தாவோ, பயந்து பயந்து ஆரவ்வின்  கைகளை பிடித்து கொண்டே இருந்தாள்.

அவனும் அவள் கைகளை தட்டிக்கொடுத்து, 

“எதுவும் இல்லை பயப்படாதே! நான் பக்கத்திலே தான் இருக்கேனே!!”

என்று தைரியமூட்டி கொண்டே நின்றான்.

யார் வந்தாலும், அவனருகில் சென்று ஒளிந்து கொள்வது போலவே நின்றிருந்தவளை, ஒவ்வொரு முறையும் புகைப்படம் எடுப்பவர், அவளை நேராக நிற்க வைக்க பெரும்பாடுதான் பட்டார்.

“ஒழுங்கா  நில்லு மா, வந்தவளுக்கு லேட் ஆகுது பாரு”

என ஒவ்வொரு முறையும் ஆரவ் கூறும் பொழுதெல்லாம் முகம் சுருங்கி போனாள் அமிர்தா. அவளுக்கோ அவனுக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுக்கிறோமோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது.

நேரம் செல்ல, செல்ல ஓரளவு சமாளித்து கொண்டு, பயத்தை கொஞ்சமே கொஞ்சம் விட்டொழித்து அவனருகில் சரியாக நின்று கொள்ள பழகி கொண்டாள்.

இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த விழா, இரவு பத்து மணி ஆகியும் தொடர்ந்து கொண்டிருக்க, அமிர்தாவிற்கு ஒருகட்டத்திற்கு மேல் நிற்க முடியவில்லை. கால் வலி எடுக்க ஆரம்பித்து இருந்தது.

ஏற்க்கனவே மட்டுப்பட்டிருந்த அந்த கால்வலியின் தாக்கம், மீண்டும் வந்துவிட்டிருக்க, அவளால் சுத்தமாக நிற்க முடியவில்லை. ஒரு காலை தூக்கி இன்னொரு காலில் நிற்பதும், இன்னொரு காலில் நின்று மற்றொரு காலில் நிற்பதும் என மாறி மாறி நிற்க, அவளின் அசவுகரியம் ஆரவ்விற்கும் புரிந்தது.

“கால் ரொம்ப வலிக்குதா?” என கேட்க, ஆமாம் என தலையாட்டியவளின்  முகத்தில் வலியின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.

இருந்தாலும் சட்டென்று அங்கிருந்து நகரவோ, அவளை அமர வைக்கவோ முடியாத  சூழ்நிலையில் அவள் கைகளை பிடித்துக் கொண்டே,

"இன்னும் கொஞ்ச நேரம் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. முடிஞ்சதும் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுக்கலாம்" என ஆறுதல்படுத்திக்கொண்டே இருந்தான். இருவருக்கும் சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறுவதற்கு  கூட நேரமில்லாமல் போனது. இன்னும் ஒருமணி நேரம் சென்ற பின்பே வந்திருந்த அனைவரும் விழாவில் கலந்துக் கொண்டு விடைபெற்று சென்றனர். 

சோர்ந்து போய்விட்டாள் அமிர்தா.  காலெல்லாம் மரத்து போன உணர்வில், அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து விட, அவள் அருகில் ஆரவ்வும் அமர்ந்து கொண்டான். அவனுக்குமே சோர்வு தான். காலையில் திருமணம், தற்பொழுது வரவேற்பு என, அவனுக்கும் தொடர்ந்து வேலை தான் அல்லவா!!

“ரொம்ப வலிக்குதா?” என அவள் கையோடு கைக்கோர்த்து கேட்க, அமிர்தாவோ பதிலேதும் சொல்லாது அவன் தோளிலே சாய்ந்து கொண்டு கண்மூடி கொண்டாள். அவளை தோளோடு அணைத்து கொண்டு, 

“சரி யாருமில்லை, நான் வேணும்னா தூக்கிட்டு போகவா” என்றதும், வேண்டாம் என தலையாட்டினாள்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருக்க, பாலகிருஷ்ணனும், நிர்மலாவும் அவர்கள் அருகில் வந்து,

“ரெண்டு பேரும் போய் சாப்பிட்டு வந்துடுங்க, கிளம்பலாம்”

என்று கூற, மெதுவாக கண் திறந்து பார்த்தவள், அவர்கள் நின்றிருப்பதை கண்டு, சட்டென்று விலகி கொண்டாள்.

“இதோ வரோம் மா. நீங்க சாப்பிடீங்களா?” என்று ஆரவ் கேட்க,

“நாங்க எல்லாம் சாப்பிட்டு முடிசாச்சு, என்றதும், 

‘அஞ்சலி எங்கே?” என்றான், அவள் அங்கு இல்லாததை கண்டு.

“நேரமாச்சுல அதான் அவளை அப்பவே ஹரி கூட வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டேன். போய் ரெஸ்ட் எடுக்கட்டும்”

என்றவர், அவர்களை சாப்பிட அனுப்பி வைக்க, இருவருக்குமே தற்பொழுது உணவு உண்ணும் நிலை இல்லை.

“எதுவும் வேண்டாம். ரொம்ப டையார்டா இருக்கு” என அமிர்தா கூறவும், ஆரவ்வும் “சரி கிளம்பலாம்” என இருவரும் வீடு நோக்கி புறப்பட்டனர்.

அவர்களுக்கு முன்னே, நிர்மலாவும் பாலகிருஷ்ணனும் இல்லத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர்.

வீடு வந்ததும் இறங்கிய ஆரவ், அமிர்தாவும் இறங்கி நிற்பதற்குள் அவளை கைகளில் ஏந்தி இருந்தான் ஆரவ்.

அவளோ அதில் அதிர்ந்து,

“இறக்கி விடுங்க. அத்தம்மா தப்பா நினைக்க போறாங்க” என இறங்க முற்பட, 

“ஷூ.., அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நான் என்ன அடுத்தவன் பொண்டாடியையா தூக்கிட்டு போறேன். என் பொண்டாட்டியை தான் தூக்கிட்டு போறேன். அதனால் அமைதியா வா”

என்றதும் அவளும் சிரிப்புடன் வாகாக அவன் மார்பின் மீது சாய்ந்து கொண்டாள்.

வீட்டு வாசல் வந்ததும், நிர்மலாவோ,

“இரண்டு பேரும் அங்கேயே நில்லுங்க. சுத்தி போடணும்” என குரல் கொடுத்ததும், அவளை இறக்கி அருகில் நிற்க வைக்க, நிர்மலாவும் அவர்களுக்கு திருஷ்டி கழித்து உள்ளே அழைத்து சென்றனர்.

ஓய்வாக இருவரும் சோபாவில் அமர்ந்ததும் அவர்கள் அருகில் வந்தவர், 

“ஆரவ் நீ போய் கீழே இருக்கிற ரூமில் குளிச்சுட்டு ரெடி ஆகிட்டு வா, அங்கேயே ட்ரெஸ் வச்சு இருக்கேன்”, என்று ஆரவ்விடமும், 

“நீயும் இந்த ரூம் போய் குளிச்சுட்டு புடவை கட்டிட்டு வந்துரு மா. சீக்கிரம்”

என்று அமிர்தாவிடமும்  கூற, இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

“ம்மா, எதுக்கு இப்போ இதெல்லாம் பண்ண சொல்லிட்டு இருக்கீங்க? செம டையார்டா இருக்கு. தூங்க போறோம் நாங்கவிடுங்க”

என ஆரவ் கூற, 

“டேய் கண்ணா, இதெல்லாம் சம்பிரதாயம் டா. சாந்திமுகூர்த்தம் வைக்கணும்ல. போ போய் பத்தே நிமிஷத்தில் தயாராகி வா”

என்றதும், ஆரவ் திரும்பி அமிர்தாவை பார்க்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள். தவிர்க்க முடியாத ஒன்று என்பதால் இருவரும் தயாராக எழுந்து கொண்டனர்.

 இருவரையும் அறைக்கு அனுப்பி வைக்க, ஆரவ் தயாராகி வெளிவந்து விட்டான். அமிர்தா தான் புடவையை எப்படி கட்டுவது என்பது தெரியாமல் திணறி கொண்டிருந்தாள்.

அவளறை கதவை தட்டிய நிர்மலா, 

“அமிர்தா, சீக்கிரம் வெளியே வா மா. நேரமாச்சு”

என குரல் கொடுக்க, அவளோ பதறி போனாள். வெளியே அமர்ந்திருந்த ஆரவ்வோ, அமிர்தாவை யோசிக்க அப்பொழுது தான் அவனுக்கு நியாபகமே வந்தது. அவளுக்கு புடவையே கட்ட தெரியாது என்பது. சட்டென்று இணையதளத்தில் புடவை எப்படி கட்டுவது என்ற வீடியோவை பார்த்து உடனே அவளுக்கு அனுப்பி வைத்தான்.

அலைபேசி ஓசையில் அதனை எடுத்து பார்க்க, ஆரவ் அனுப்பிய வீடியோவை பார்த்தவளுக்கு, பதற்றத்தையும் மீறிய புன்னகை மலர்ந்து அவளை லேசாக்கியது. இத்தனை நேரம் அவளுக்கு கூட அந்த யோசனை தோன்றவில்லை. அவளவன், அவளுக்காக யோசித்து ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வதே, அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

சட்டென்று அந்த வீடியோவை பார்த்து கட்ட முயற்சி செய்ய, எங்கே முதல் முயற்சியிலே வந்து விடுமா என்ன?  இருந்தாலும் ஓரளவிற்கு கட்டியவள், அவசரமாக வெளியே வர, இருவரையும் பூஜை அறையில் நிற்க வைத்து, சாமி கும்பிட வைத்தவர், ஆரவ்வை அவனறைக்கு முதலில் அனுப்பி வைத்தார்.

பின் அமிர்தாவிடம் பால் சொம்பினை கையில் கொடுத்து, 

“இங்க பாரு அமிர்தா, இதுக்கு முன்னே எப்படியோ?! ஆனால் இப்போ நீ இந்த வீட்டோட மருமகள், ஆரவ்வோட பொண்டாட்டி. அதுக்கு ஏத்த போல நடந்துக்கணும்.

ஒரு  மாமியாரா நான் இதெல்லாம் சொல்ல வேண்டியது என்னோட கடமை. ஆரவ் எங்களுக்கு ஒரே பையன். அவன் ஆசைப்பட்டது எதையுமே நாங்க கொடுக்காமல் விட்டத்தில்லை.

அவனோட செல்வாக்கு என்னன்னு நான் சொல்லி உனக்கு தெரிய தேவையில்லை. அவன் நீ தான் அவனுக்கு மனைவியா வரணும் சொன்னதும், உன்னோட எதைப்பத்தியும் அவனும் சரி நாங்களும் சரி  பொருட்படுத்தல. அது உனக்கே தெரியும்.

இனி ஆரவ்வை பார்த்துக்க வேண்டியது உன் பொறுப்பு. நாங்க இருப்போம் தான். இருந்தாலும், நீதான் இனி அவனுக்கு எல்லாம். அவன் இன்னமும் எங்களுக்கு குழந்தை மாதிரி தான். எந்தவொரு அம்மாக்கும் அவங்க பிள்ளைங்க எவ்வளவு வந்தாலும் குழந்தை தானே!!

என்றதும் சுருக்கென்று இருந்தது அமிர்தாவிற்கு. அவள் அன்னை அப்படி நினைக்காமல் போய் விட்டாரே!! என கண்கள் கலங்க, இமைத்தட்டி அதனை வெளிக்காட்டாது நின்றிருந்தாள்.

“அவன் என்ன சொன்னாலும் கேட்கணும். அவன் சொல்படி நடந்துக்கணும். அப்புறம் வேறென்ன சொல்ல போறேன், எல்லா மாமியாரும் சொல்றது தான், சீக்கிரமே ஒரு பேரனையோ? பேத்தியோ பெத்து கொடுத்துட்டா போதும். நாங்க எங்க பேர குழந்தைங்க கூட சந்தோஷமா காலத்தை ஓட்டிடுவோம்”

என்றதும், அவளுக்கோ கைகள் எல்லாம் நடுங்க ஆரம்பித்து இருந்தது. அவர் இவ்வளவுநேரம் பேசியது எதுவுமே அவளுக்கு புரியவில்லை. கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை போல, பேந்த பேந்த முழித்து கொண்டிருந்தாள்.

“போ மா” என அனுப்பி வைக்க, அவளோ நடுக்கத்துடன் அவனறைக்கு சென்றாள். இது தான் முதல்முறை அவனறைக்கு செல்வது. பயப்பந்து உருள ஆரம்பித்தது அவளுக்கு.

அவனறைக்கு சென்று என்ன செய்ய வேண்டும்? யாராவது ஏதாவது சொல்லி இருந்தால் கூட பரவாயில்லை. சொந்தபந்தம் என்று யாருமில்லை. நண்பர்கள் என்று கூட யாரும் இருந்ததில்லையே!!

உடல் வேறு கொஞ்சம் எனக்கு ஓய்வு கொடேன் என்று வேறு அவளை கெஞ்ச, அவனிடம் என்ன? எப்படி? என எதுவும் புரியாது. அவனறைக்கு சென்று கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய, பிரம்மாண்டமான அறையே அவளை வரவேற்றது.

மெல்ல உள்ளே நுழைந்து கதவை சாற்றி விட்டு உள்ளே வந்தவள், ஆரவ்வை தேட, அவனோ அங்கில்லை. கட்டிலின் வரை வந்தவளுக்கு அவன் அங்கும் இருப்பதாய் தெரியாமல் இருக்க, சுற்றும் முற்றும் பார்த்து  கொண்டிருந்தாள்.

“வா அமிர்தா” என அவன் குரல் அருகில் கேட்டதும் திடுக்கிட்டு திரும்ப, பால் சொம்பு வேறு தள்ளாடியது. 

“நான் தான், ஜஸ்ட் கூப்பிட தானே செஞ்சேன். அதுக்கு ஏன் இவ்வளவு பயப்படுற?”

என லேசாக கடிந்து கொண்டவன், அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி மேஜை மீது வைத்து விட்டு, 

“பால்கனியில் உட்கார்ந்து இருந்தேன்”

என்று கூற, அவளோ குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. அவன் இயல்பு போல தான் இருந்தான், ஆனால் அவளுக்கு தான் இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாது உள்ளுக்குள் தவித்து போனாள்.

அவள் அணிந்திருந்த சேலையை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன், சிரிப்புடன், 

“பரவாயில்லை, பிரஸ்ட் டைம்மே ஓரளவிற்கு நல்ல தான் கட்டி இருக்க”, என்றதும், தன்னையே குனிந்து பார்த்தாள் அமிர்தா.

“சரி, இந்த கபோர்டில் உனக்கு தேவையான ட்ரெஸ் இருக்கு”

என கூறியவனை நிமிர்ந்து பார்க்க, அவன் அந்த அலமாரியை திறந்து காட்டினான். அவளோ விழிகள் விரிய அதை பார்க்க, 

“நீ சுடிதார் போட்டே பழகிட்டனு எனக்கு தெரியும். இது நயிட் ட்ரெஸ் சுடிதார் போல தான் இருக்கும். தூங்க கம்பர்டபுளா இருக்கும். சாரி கட்டிட்டுலாம் தூங்கவே முடியாது. நீ  மாத்திட்டு வா. நான் பால்கனியில் இருக்கேன்”

என கூறிவிட்டு அவன் பால்கனி கதவை சாற்றி விட்டு செல்ல, அவனது கண்ணியம் இன்னும் இன்னும் அவளை நெகிழ செய்தது.

ஏகப்பட்ட வண்ணங்களில், இருந்த அதனை பார்த்தவளுக்கு பிரம்மிப்பாக  இருந்தது. அதிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டவளுக்கு அத்தனை சவுகரியமாக இருந்தது.

கதவை திறந்து பால்கனியில் வந்து அவன் பக்கத்தில் அமர, அவனும் அவள் முகம் பார்த்து அமர்ந்தான். அவளோ தலையை நிமிர்த்தவே இல்லை. எதுவும் பேசவில்லை. அவள் மனதிலோ ஏகப்பட்ட பயம் சூழ்ந்து இருந்தது. அவளை யோசனையாக பார்த்தவன்,

“என்னாச்சு உனக்கு? நார்மலா இல்லாத போல இருக்கே? ஏதாவது என்கிட்ட சொல்லனுமா?”  என கேட்க மௌனம் மட்டுமே வந்தது அவளிடம்.

“அம்மா ஏதாவது சொன்னாங்களா?”

என சரியாய் கேட்க, அவளோ நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“அப்போ அம்மா தான் ஏதோ சொல்லி இருக்காங்க. என்ன சொன்னாங்க?”

என்று கேட்க, அவளோ 

“அது.. அது.. வந்து, உங்களை நான் தான் பார்த்துக்கணும். உங்க பேச்சை கேட்டு நடக்கணும். நீங்க என்ன சொன்னாலும் செய்யனும். சீக்கிரமே.., குழந்..தை”

என திக்கி திணறியவள், முடிக்க முடியாது தலை கவிழ்ந்து விட்டாள்.

“ஒஹ்ஹ், அதனால் என்ன? எல்லா மாமியாரும் இப்படி தானே சொல்லுவாங்க. அதுக்கு போய் இப்படி நேர்வஸ் ஆகலாமா? உனக்கு என்னை பத்தி தெரியாதா? அப்படியா உன்கிட்ட நடந்துக்குவேன். காலையில் இருந்து என்கூட எவ்வளவு சகஜமா இருந்த, அதே போல் இரு. நமக்குள் நடக்க வேண்டியது எல்லாம் தானா நடக்கும். நான் கம்பெல் பண்ண மாட்டேன். 

மேரேஜ்க்கே நீ மனசளவில் பிரிப்பேர் ஆகலை. நான் தான் ஹரிபரியா ஏற்பாடு பண்ணேன். அதுக்கு ரீசன் இருக்கு. வேற வழி இல்லாமல் தான் சீக்கிரமா நம்ம மேரேஜ் முடிஞ்சுடுச்சு.

அதுக்காக, எல்லாமே சீக்கிரமே நடக்கணும்னு நான் எப்போ சொன்னேன். நமக்கான லைப் இப்ப தான் ஸ்டார்ட் ஆகி இருக்கு. முதலில் நாம நிறைய லவ் பண்ணுவோம். அப்புறம் மத்ததெல்லாம் தானா நடக்கும். நீ இதுவரைக்கும் என்னை லவ் பண்றேன் ஒரு வார்த்தை கூட சொல்லல. எப்போ சொல்ல போற?”

என அவனின் நீண்ட விளக்கத்தில் அவள் மனதின் பதற்றம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. மெதுவாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“சரி, உனக்கு எப்போ சொல்லனுமோ அப்போ சொன்னால் போதும். போய் தூங்கலாமா?” செம டையார்ட்டா இருக்கு” என்றதும் அவளும் சரியென்று தலையாட்டினாள்.

இருவரும், அறைக்குள் நுழைந்து கட்டிலில் அமர,  மெத்தையை தடவி பார்த்தவள், அதன் மென்மையில் மீண்டும் மீண்டும் அதனை தொட்டு பார்த்து கொண்டே இருந்தாள்.

அவளின்  செய்கையை சிரிப்புடன் பார்த்தவன்,

“அமிர்தா, இந்த ரூம் நம்மளோடது. இங்க எல்லாமே உனக்கும் சொந்தம். அதனால் இது எடுக்கலாமா? அதை செய்யலாமா? என எதுவும் யோசிக்க கூடாது.  என்ன தோணுதோ உடனே எதுவா இருந்தாலும் செஞ்சுடு”

என்றதும் சரியென்று தலையாட்டியவளிடம்,

“சரி, அந்த பாலை எடு,” என்றான். அவள் எடுத்து கொடுக்க, 

“அதை நீயே குடிச்சுட்டு படு. காலையில் இருந்து சரியாவே நீ சாப்பிடலை”

என்றதும், அதனை வேகமாக குடித்தவள், இடையில் அவன்  நியாபகம் வர,

“உங்களுக்கு?” என்றாள் அவனை பார்த்து. 

“பாரு டா, என் பொண்டாட்டிக்கு என் மேலே அக்கறைய?” என கேலி செய்ய, அவளோ உரிமையாய் அவன் கூறியதில் வெட்கம் கொண்டாள். அதனை ரசித்து பார்த்தவன்,

“நான் புருட்ஸ் சாப்பிட்டேன். நீ குடி” என்றதும், மீதமிருந்ததை குடித்தவள், படுத்து கொள்ள, ஆரவ்வும் விளக்கை அணைத்து விட்டு வந்து அவளருகில் படுத்து கொண்டான்.

படுத்த பின்பு தான் அவளின் கால்வலி இன்னும் அதிகமாக தெரிய, புரண்டு புரண்டு படுத்தவள், கால்களை நீட்டி மடக்கி என உறங்க முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்.

அவளின் அசைவில் எழுந்து கொண்டவன், 

“என்னாச்சு அமிர்தா? ஏசி அதிகமா இருக்கா? கம்மி பண்ணிடவா?”

என கேட்க, அமிர்தாவோ, 

“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க. புது இடம்ல அதான் தூக்கம் வரல. நீங்க தூங்குங்க”

என்று சொல்லி கண்களை மூடி கொண்டாள். ஆரவ்வும் அது தான் காரணம் என்று நினைத்து மீண்டும் படுத்து கொண்டு உறக்கத்தை தழுவ, அமிர்தாவால் உறங்க முடியவில்லை.

மீண்டும் அவளது அசைவுகளை கண்டு கண் விழித்து பார்த்தவன், என்ன செய்கிறாள்? என்று பார்க்க, அமிர்தாவோ தன் கால்களை தானே பிடித்து கொண்டிருந்தாள்.

ஆரவ்விற்கு புரிந்து விட்டது. எழுந்து அவள் காலின் அருகில் சென்று அமர்ந்தவன், அவளது கால்களை தூக்கி தன் மடியில் வைத்துக் கொள்ள, பதறி அடித்து கொண்டு எழுந்தாள் அமிர்தா.

“என்ன? என்ன பண்றீங்க?” என்று பதற,

“ஷூ,” என வாய் மீது விரல் வைத்தவன்,

“கால்வலிக்குது தானே, நான் தான் கவனிக்காம விட்டுட்டேன். ஸாரி”

என அவனையே குற்றவாளி ஆக்கி மன்னிப்பு கேட்க, அமிர்தாவோ 

“ஏன் ஸாரி லாம் கேட்குறீங்க?” என்றாள் அவனை காதலாக பார்த்துக் கொண்டே.

“பின்னே, என் வைப்பை கவனிக்க வேண்டியது என் பொறுப்பு தானே!! கவனிக்காம விட்டது தப்புல அதான் ஸாரி. சரி என்று நீ படு, நான் பிடிச்சு விடுறேன். கால்வலி குறையும்”

என்றவனை சங்கடமாக பார்த்தவள், 

“அதெல்லாம் வேண்டாம். நீங்களும் டையார்ட்டா இருப்பீங்க. வந்து தூங்குங்க. கொஞ்ச நேரத்தில் அதுவே சரியாகிடும்”

என்றவளுக்கு, 

“எதுவும் பேச கூடாது. அமைதியா படு” என்று அதட்டி கூற, அமிர்தாவும் படுத்து கொண்டாள்.

ஆரவ் அவளுக்கு கால்கள் பிடித்து விட, அந்த சுகத்தில் அவளது விழிகளும் தாமாக மூடி கொண்டது. சிறிது நேரத்திலே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள்.

அவள் உறங்கும் அழகை  கன்னத்தில் கைவைத்து சிறிது நேரம் பார்த்தவன், பின் எழுந்து வந்து அவள் பக்கத்தில் படுத்து கொண்டு உறங்கி விட்டான். இருவருமே மனம் நிறைந்த உணர்வோடு நிம்மதியாக உறக்கத்தை தழுவினர்.

காதலில் கலந்து, காதலாக வாழும் வாழ்வு என்றுமே, இனிமை தானே!! இருவரும் காதல் கொண்டு, காதலில் கலந்து, காதலில் கரைந்து, காதலாக அத்தனை இனிமையோடு வாழ்க்கையை வாழ ஆரம்பித்து இருந்தனர்.

சிரிக்க மறந்திருந்தவள், அவனால் அழுகையை மறந்திருந்தாள். சோக சித்திரமாக இருந்தவள், மலர்ந்து புன்னகைக்கும் மலர் போல மாறி இருந்தாள். ஏன் தான் இந்த வாழ்க்கையோ என்று வெறுத்து இருந்தவள், அவனுடனான இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் நீள வேண்டும் வேண்டி கொண்டாள். மொத்தத்தில் அவளின் அனைத்தும் மாற்றங்களும் அவனால் நடக்க, அவனுள் ஒன்றாகி போனாள் அவள்.

திருமணம் முடிந்து ஒருமாதம் ஆகிய நிலையில், ஆரவ் அவன் ஒத்து கொண்ட படத்தை இயக்க வேண்டி தயாரிப்பாளரிடமிருந்து அழைப்பு வர, அதற்காக அவன் அமெரிக்கா செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது.

படத்தின் காட்சிகள் அங்கே எடுப்பதற்காக ஆரவ் அங்கு பயணம் செய்ய, திருமணம் முடிந்து வரும், இருவருக்குமான முதல் பிரிவு இது என்பதால் வெகுவாக இருவருமே துவண்டு தான் போயினர்.

அங்கு சென்ற பின்பு தினமும் அமிர்தாவிற்கு அழைத்து விடுவான். அவளிடம் பேசாது ஒரு நாள் கூட அவன் நாட்கள் கழிந்ததில்லை.

அங்கு சென்று இரண்டு வாரம் கடந்த நிலையில், ஆரவ்வின் அழைப்பு அன்று அமிர்தாவிற்கு வரவில்லை. வேலை இருக்கலாம், அதனால் அழைக்காமல் இருந்திருக்கலாம் என்று தன்னை தானே தேற்றி கொண்டு நடமாட, மூன்று நாட்கள் இதே நிலைமை தான் ஓடியது.

அதற்கு மேல் பொறுக்க முடியாது, இவளே அவனுக்கு அழைக்க அழைப்பு போகவில்லை. மேலும் ஒருநாள் கடந்த நிலையில் அவளுக்கோ பயம்  தொற்றி கொண்டது. உடனே பாலகிருஷ்ணனிடம் சென்று விஷயத்தை கூற, அவரும் ஆரவ்விற்கு அழைக்க, அழைப்பு செல்லவில்லை.

உடனே ஹரிக்கு அழைக்க, நீண்ட நேர முயற்சிக்கு பிறகு ஹரியின் அழைப்பு கிடைக்க, ஹரியோ,

“சார், ஆரவ் சாரை மூணு நாளா காணும்”

என்று விஷயத்தை கூறியதும், “என்ன ஹரி சொல்ற? ஆரவ்வை காணுமா?”

என பாலகிருஷ்ணன் அதிர்ந்து கத்த அதை அருகில் நின்றிருந்த கேட்ட  அமிர்தாவோ, அந்த செய்தியில் உறைந்து போனாள்.

எல்லாவற்றிற்கும் நீ இருக்கிறாய்

என்ற வாழ்க்கைக்கு

பழகிக் கொண்டேன்

பழக்கியவனும் நீதானே!!

இனி என்னால் மாற முடியாது,

மாற்றவும் முயற்சிக்காதே!!

விரல் கோர்த்து உடனிரு

 அதுபோதும்!!


பிடிக்கும்..








Comments