UNEP-29

 அத்தியாயம் 29


          உடல் தான் இயங்க முடியாமல் இருந்ததே தவிர, அவளது உள்ளம், ஒவ்வொரு நொடியும், ஆரவ்வை தான் எண்ணிக் கொண்டிருந்தது. கை, கால்களை சுருக்கி, சுருண்டு படுத்து கிடந்தவளை, உள்ளுக்குள் ஓடும் அவன் குரலே, இன்னமும் அவளை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தது.


இமைகள் மூடி இருந்த பொழுதும், அவளுக்குள்ளே, கேட்ட அவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக அவளை சுயநினைவிற்கு கொண்டு வந்தது.


‘நான் உன்னை விட்டுட்டு எங்கே போக போறேன்? எனக்கு தெரியாதா? நான் இல்லாமல் உன்னால் இருக்க முடியாதுன்னு. நான் சாகும் போது கூட உன்னையும் கூட்டிட்டு தான் போவேன். அதனால் நீ இவ்வளவு கவலைப்பட தேவையில்லை’

என்றது அவளுக்குள் அவனது குரல். அசரிரீயாக கேட்ட அவனது குரலில், மெல்ல மெல்ல சுயநினைவை பெற்றவள், திறக்க முடியாமல் இருந்த இமைகளை மெல்ல திறந்தாள்.


யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை. தலைசுற்றுவது போல் உணர்ந்த பொழுது வந்து கட்டிலில் விழுந்தவள், தான் எத்தனை மணிநேரம் ஆனதோ தற்பொழுது தான் கண் விழிக்கிறாள்.


தற்பொழுதும் உடலில் தெம்பு இல்லை தான். இருந்தாலும் எங்கேயோ அவன் குரல் கேட்பது போல் இருக்க, மெல்ல கட்டிலை விட்டு இறங்கி வந்தவள் வாசலில் நின்று, வரவேற்பறையை பார்க்க, அவளது பிராத்தனையை பொய்யாக்காமல் நிறைவேற்றி இருந்தார் அவள் மண்டியிட்டு பிராத்தனை செய்த பெயர் தெரியாத அந்த இறைவன்.


மங்கலாக தெரிந்த கண்ணிலே ஆரவ்வின் உருவம் அவளுக்கு நன்றாக தெரிந்தது. 


“ஆரவ், எங்க டா போன? எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா?”

என பாலகிருஷ்ணன் அவனைக் கட்டிக்கொண்டு கதற, 


“அப்பா, நான் நல்ல இருக்கேன். என்னை பாருங்க. அதான் வந்துட்டேன்ல அப்புறம் ஏன் இப்படி அழுறீங்க?” என அவரை சமாதானப்படுத்த, அனைத்தையும் அறையின் வாசலில், பிடிமானதிற்காக, தலையை சுவரில் சாய்த்து அவனையே விழி அகலாது பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா.


‘எனக்கு தெரியும் நீங்க வந்துடுவீங்கன்னு. உங்களால் என்னை விட்டு இருக்க முடியாது’ என மனதோடு அவனோடு பேசிக்கொண்டவள் அவனருகே செல்லவில்லை. கண்களை நிறைத்தபடி அவனை தான் தன்னுள் உள்வாங்கி கொண்டிருந்தாள்.


“சார், எங்க தான் போனீங்க? நீங்க இல்லாமல் நான் எப்படி?”

என்ற ஹரிக்கு குரல் கரகரக்க, 


“எங்க போனாலும், என்கிட்ட சொல்லிட்டு தானே போவீங்க. இல்லை கூட்டிட்டு போவீங்க. இந்த தடவை மட்டும் ஏன் விட்டுட்டு போனீங்க? எவ்வளவு பயந்து போய்ட்டோம் தெரியுமா? தெரியாத ஊரில் எங்கே போய் உங்களை தேடுறதுன்னே தெரியல. இருந்தும் தேடி பார்த்துட்டு தான் இருந்தோம். நீங்க வந்ததே ரொம்ப சந்தோஷம் சார்”


என்றவன் ஆரவ்வை கட்டிக்கொண்டு கண்ணீர் சிந்த, அவனது கண்ணீர் ஆரவ்வின் சட்டையை நனைத்தது. எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும் ஹரி கூட அழுகையை வெளிப்படுத்தியதும் ஆரவ்விற்கு அவர்களது மனநிலையும் தன்மீதிருக்கும் அன்பும் புரிந்தது.


“எனக்கு ஒன்னும் இல்லை ஹரி. ஜஸ்ட் சின்ன ஆக்சிடெண்ட்”


என்றதும் இருவரும் அதிர்ந்து பார்க்க, தற்பொழுது தான் கவனித்தனர் அவன் தலையில் அடிப்பட்டதற்கான கட்டு கட்டி இருப்பதை.


“என்ன டா? என்னாச்சு? தலையில் என்ன இவ்வளவு பெரிய கட்டு”

என பாலகிருஷ்ணன் பதற, 


“அப்பா, பயப்படாதீங்க, ஒன்னும் இல்லை சின்ன அடி தான். அன்னைக்கு தூக்கம் வராம கொஞ்சம் வாக் போய்ட்டு வரலாம் கிளம்பி வெளியே போனேன். அப்படியே நடந்துட்டே ரொம்ப தூரம் போய்ட்டேன்.


வெதர் சரியா இல்லையா அதான், எதிர்க்க வந்த வண்டியை கவனிகல, அந்த கார் மோதி கீழே விழுந்துட்டேன்.  தலையில் அடிப்பட்டுச்சு. அப்புறம் ஆக்சிடெண்ட் பண்ணவரே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் சேர்த்து இருக்கார்.


என்னை அவர் ரிலேட்டிவ் சொல்லி தான் அட்மிட் பண்ணிருக்கார். ஏதாவது பிரச்சனை வந்துருமோனு நினைச்சு பண்ணதால், விஷயம் போலீஸ் வரை போகல. அதனால் தான் நீங்க கம்பலைன்ட் பண்ணி இருக்கும் போது, அவங்களுக்கு சரியான தகவல் கிடைக்கல.


மூணு நாள் மயக்கத்திலே இருந்தேன். தலையில் மட்டும் தான் அடி. மயக்கம் தெளிஞ்ச பின்னாடி தான் என்ன நடந்துன்னே நியாபகம் வந்துச்சு.


கண்டிப்பா என்னை காணும்னு நீங்க பதறி போய் இருப்பீங்க தெரியும். அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்”

என்றதும் அனைவரும் திகைத்து நின்றனர். 


“ஆரவ், என்ன டா, என்னென்னமோ சொல்ற? ஏதாவது விபரீதமா ஆகி இருந்தால்”

என பாலகிருஷ்ணனுக்கு அத்தனை படப்படப்பாக வந்தது. சுற்றி இருந்தவர்களுக்கும் அதே எண்ணம் தான்.


“அதான் எதுவும் ஆகலையே அப்புறம் ஏன் பற்றப்படுறீங்க? விடுங்க ப்பா. ரொம்ப ஸ்ட்ரெஸ் எடுத்து உடம்பை கெடுத்துக்காதீங்க”

என ஆறுதல் சொல்ல, ஹரியும் நிலைமையை சீராக்க,


“சார், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சுன்னு விடுங்க. அதான் ஆரவ் சார் வந்துட்டார்ல, வொரி பண்ணிக்காதீங்க," என்றான்.


"அப்பா, அமிர்தா கிட்ட எதுவும் சொல்லலைல?"  என்று கேட்டான், அவளின் மனநிலை அறிந்து. அவனுக்கு தெரியதா? அவனின் மனைவியை பற்றி. தனக்கு ஒன்றென்றால் அவள் நிலைகுலைந்து போய்விடுவாளே!! என்றெண்ணி கேட்க, அப்பொழுது தான் இருவருக்கும் அமிர்தாவையே நியாபகம் வந்தது. 


சட்டென்று இருவரும் அவனது அறையை திரும்பி பார்க்க, அங்கே அமிர்தா அவனை வெறித்து பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. இருவரின் பார்வையை தொடர்ந்து ஆரவ்வும் திரும்பி பார்க்க, அமிர்தா  இருந்த தோற்றம் கண்டு அவனுக்கோ கண்கள் கலங்கி போனது. 


“அமிர்தா..,” என வேகமாக அவள் அருகே ஓடிவந்தான் ஆரவ். 


“என்னமா? ஏன் டா இப்படி இருக்க? " என கேட்டவனுக்கு விழி நீர் வெளியே வந்து விழுந்தது அவளுக்காக. நின்ற இடத்தில் இருந்து அசையாது, இமைக்க கூட தோன்றாது அவனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள் அமிர்தா. 


விழி கூட அசையாது அவனை பார்த்து கொண்டிருக்கும் போதே அவனுக்கு தெரிந்து விட்டது. அந்தளவிற்கு அவள் தன்னை தேடி இருக்கிறாள் என்று.


“அமிர்தா, நான் வந்துட்டேன். நல்ல இருக்கேன் பார். ஏன் மா பேச மாட்டேன்கிற? என மீண்டும் மீண்டும் அவள் அமைதியை பொறுக்க முடியாது கேட்க, அவளின் மௌனம் மட்டுமே அவனிடம் பதில் கூறியதே தவிர அவள் நா பேசவில்லை.


அவனுக்கோ பயம் பிடித்துக் கொண்டது. அவனது மேலையே அவள் பார்வை நிலைகுத்தி இருந்ததே தவிர, அவளிடம் அசைவு இல்லை.


அதற்குள் பாலகிருஷ்ணனும், ஹரியும் அவர்கள் அருகில் வந்தனர்.


“சார், அமிர்தா ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. நீங்க காணும்னு விஷயம் தெரிஞ்சதில் இருந்து, அவங்க அவங்களாவே இல்லை”

என ஹரி கூற, 


“அவளை பத்தி எனக்கு தான் தெரியுமே ஹரி. எனக்கு சின்னதா ஒன்னுன்னா கூட அவ தாங்க மாட்டா. காணாமல் போன விஷயத்தை சொல்லி இருக்கீங்க. உயிரை கையில் பிடிச்சுட்டு இருந்து இருப்பா? இப்போ கூட நான் வந்தது கனவா இருந்துற கூடாதுனு தான் வேண்டிட்டு இருப்பா. அவ கண்ணு கூட இமைகல பாருங்க. உங்களை யார் அவ கிட்ட சொல்ல சொன்னது?”


என கடிந்து கொண்டவன், அமிர்தாவின் புறம் திரும்பி, அவளது கன்னங்களை இரு கைகளால் தாங்கி,


“பேசு மா. நான் தான் வந்துட்டேன்ல, அப்புறமும் ஏன் இப்படி இருக்க? எனக்கு ஒன்னும் இல்ல. நான் நல்ல இருக்கேன் பார்”


என கூறியவனின் ஸ்பரிசம், அவளை நிகழ் உலகத்திற்கு கொண்டு வர, நடுங்கும் விரல்களால், மெல்ல, அவனது தலைகட்டை நோக்கி அவள் கைகளை உயர்த்திய தருணம், அவள் கையை பற்றி கொண்டவன்,


“அது ஒன்னுமில்லை மா, சின்ன காயம் தான்” என கூறி முடிப்பதற்குள் அவளுக்கு கண்கள் இருட்டி கொண்டு வந்தது. மயங்கி சரியா போனவளை,


“அமிர்தா,” என அவளை தாங்கி கொண்டான் ஆரவ். 


உடனடியாக அவளை ஏந்தி கொண்டவன், அறையினுள் இருந்த கட்டிலில் கிடத்தி, அவள் கன்னம் தட்ட, அவளுக்கோ விழிப்பு வரவில்லை.


“ஹரி, டாக்டரை காண்டாக்ட் பண்ணி வர சொல்லு” என கட்டளையிட, ஹரியும் அங்கு இருந்த மருத்துவரை வரவழைத்தான். பின் மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து, அதீத மன உளைச்சலாலும், இரண்டு நாள் உண்ணாததாலும் மயக்கம் வந்துள்ளது என்று கூறி அவளுக்கு சிகிச்சை அளித்து விட்டு, நன்றாக ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்று கூறிவிட்டு சென்றார்.


அமிர்தாவின் அருகிலே அமர்ந்து அவளையே பார்த்து கொண்டிருந்தான் ஆரவ். 


பின் நேரமாவதை உணர்ந்து, தந்தையிடமும், ஹரியிடமும்,


“நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. நான் அமிர்தாவை  பார்த்துகிறேன்” என்றதும்,


 “நீயும் ரெஸ்ட் எடு ஆரவ்” என கூறிவிட்டு இருவரும் அவரவர் அறைக்கு சென்றனர்.


ஆரவ், அறையின் கதவை சாற்றி விட்டு வந்து, அமிர்தாவை அணைத்தபடி படுத்து கொண்டான். உறக்கம் வரவில்லை. அவளையே தான் பார்த்து கொண்டிருந்தான். முழுதாக பத்து நாள் கூட ஆகவில்லை, அவளை விட்டு இங்கு வந்து, அதற்குள் வாடி, வதங்கிய கொடி போல் இருக்கிறாள். 


“ஏன் மா, நீ இப்படி இருக்க? உன்னை விட்டுட்டு எங்க போய்ட போறேன் நான். எப்பவும் நான் உன் கூட தானே இருக்கேன். நான் திரும்ப வரமாட்டேன் நினைச்சுட்டியா?”


என உறங்கும் அவளிடம் மெல்ல கேட்டு கொண்டிருக்க, 


“அப்படி நினைச்சு இருந்தா, இந்நேரம் நான் செத்து போய் இருப்பேன்”


என்றாள் சட்டென்று அவன் கேட்டதற்கு பதிலாக.


உறங்கி கொண்டிருக்கிறாள் என்று நினைத்தவள், பதில் கூறவும் திகைத்து விழித்தவன்,


“என்னமா? ரெஸ்ட் எடுக்கலையா? அதுக்குள் எழுந்துட்ட!!”

என்றவனுக்கு,


“உங்களை பார்த்ததும் எல்லாம் சரியா போச்சு. இப்போ பார்த்துட்டே இருக்கணும் போல இருக்கு”


என்றவள் அவனை நெருங்கி வந்து மார்போடு ஒன்றி கொண்டாள்.


ஆரவ்வும் அவளை அணைத்து கொண்டவன், 


“ரொம்ப பயந்துட்டியா?” என்று கேட்க, 


“ரொம்பவே” என்றாள் தழுதழுத்த குரலில்.


“உங்க கிட்ட இருந்து போன் வராமல் இருக்கவும் கூட கொஞ்சம் தைரியமா தான் இருந்தேன். வேலையா இருப்பீங்க. திரும்ப கூப்பிடுவீங்கனு தான் இருந்தேன். மூணு நாள் ஆனதும் தான், பயம் வந்துடுச்சு.


என்கிட்ட பேசாமல் நீங்க இருக்க மாட்டீங்கனு தெரியும். பேசாமல் இருக்கீங்கன்னா, ஏதோ ஆகி இருக்குனு தான் தோணிட்டே இருந்தது. உங்களுக்கு நான் கூப்பிட போது லைன் போகலை. அப்புறம் மாமா கிட்ட சொல்லி ஹரி அண்ணா கிட்ட பேசும் போது தான் விஷயம் தெரிஞ்சது. அப்புறம் நடந்த விஷயத்தால் தான் ரொம்பவே உடைஞ்சு போய்ட்டேன்”


என்றதும், என்ன அது? என்பது போல கேள்வியாய் நோக்கினான் ஆரவ்.


“அது.., அத்தையும் மாமாவும் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வந்து இருந்தாங்க, அத்தை அத்தம்மா கிட்ட, என் ராசியால் தான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு. நான் ஒரு அதிர்ஷ்டமில்லாதவ, அதனால் தான் நீங்க காணாம போய்டீங்க சொல்லும் போது, எனக்கே பயம் வந்துருச்சு.


ஒருவேளை என்னால் தான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சோன்னு தோன ஆரம்பிச்சுடுச்சு. அத்தம்மா கூட, அவங்க சொன்னது உண்மை போல என்னை பார்த்தாங்க. மனசே உடைஞ்சு போச்சு. நீங்க மட்டும் வராமல் போய் இருந்தீங்க. என்னால் தான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சுன்னு செத்து போய் இருப்பேன்”


என கூறியவளின் முகத்தை தாங்கியவன், அவளது இதழ்களை தன் இதழ்களால் இணைத்து இருந்தான்.


பிரிவின் துயரம் வெகுவாக இருவரையும் தாக்க, அதில் இளைப்பாற தேவையானதாக இருந்தது இந்த இதழ் முத்தம்.


நீண்ட நேரம் முழுதாக நீண்ட இதழணைப்பு விருப்பமே இல்லாது முடிவுக்கு கொண்டு வர, மெல்ல அவளது இதழ்களுக்கு விடுமுறை விடுத்தவன், 


“இனிமேல் இப்படி பேசின, அப்புறம் நான் இப்படி தான் செய்வேன். பொறுமையா பார்த்துட்டு இருக்க மாட்டேன் பார்த்துக்கோ”

என கோபம் போல் சொன்னவனை புன்னகையுடன் பார்த்தாள் அமிர்தா.


சட்டென்று அவள் மனநிலையை மாற்றும் பொருட்டு தான், இந்த இதழணைப்பு என்றாலும், இன்னமும் இளைப்பாறி கொள்ள வேண்டும் என அவன் மனம் முரண்டு பிடித்தது.


“உன்னால் தான், நீ என் கூட இருக்கிறதால் தான், நீ என் வாழ்க்கையில் வந்ததால் தான், உன்னை நான் மறுபடியும் பார்க்கணும் என்ற பிடிவாதத்தால் தான், இப்போ இங்கே உன் பக்கத்தில் நான் இருக்கேன். நீ தான் நான் மீண்டும் வர காரணம்,”


என கூறி முடிக்கும் முன்பே, அவனது இதழ்களை சிறை பிடித்து இருந்தாள் அமிர்தா, தன் இதழ்களால்.


அவளாகவே உரிமையாய் தன் உடைமையை, தனக்கு உரியதை, தன் தயக்கங்களை விடுத்து முன்வந்து கொடுத்த இதழ் முத்தத்தை அத்தனை ரசித்தான் ஆரவ்.


அவளின், அத்தனை ஏக்கமும், பயமும், காதலும் கலந்து கொடுத்த இதழணைப்பில் தன்னையே தொலைத்திருந்தான்.


தவிப்பினால் பெரும் முத்தம் கூட காதலின் பேரழகு தான் இல்லையா!!


மெல்ல அவள் அவனை விட்டு விலகும் சமயம், முற்றுப்புள்ளியை, மெல்ல கீழிறக்கி, கமாவாக மாற்றி, மீண்டும் விட்டதில் இருந்து துவங்கினான் ஆரவ். கிழிந்த தோளில் அவன் மேலும், மேலும் துளையிட்டு, தோண்ட தோண்ட நீரருவி நிரம்பி வழிந்ததில், தாகமும் தீர்ந்தது, அவர்களது ஏக்கமும் தீர்ந்தது. அத்தனையும் கொடுத்தது அந்த இதழ் முத்தம்.


ஏக்கமும், தாகமும், தாபமமாய் மாற, அவனது விரல்கள், அவளது அந்தகார அந்தரங்கத்தில் ஸ்வரம் மீட்ட, ராகமாய் ரகசியமாய் அவள் கூச்சங்களும் வெட்கங்களும் அந்த அரையெங்கும் இசை பாடியது.


வாயால் வலி தந்தும், நாவினால் நனைத்தும், விரல்களால் வீக்கம் தந்தும், விரகங்கள் தீர்ந்தும்,  என எல்லாம் நடந்தால் தானே நிறைவேறும் வண்டின் தேனெடுக்கும் ஆசை. அவனின் ஆசையும் மெல்ல மெல்ல நிறைவேறியது பூவாய் மாறிய அமிர்தாவினால்.


அவளோ, தயங்கி, பயந்து, கண்களை மூடி, மெத்தையுடன் கரங்களால் சண்டை போட்டு என ஆரவ்வின் நெருக்கத்தில் திணற, ஆரவ்வோ, அவளின் மெத்தையோடு பிணைந்த கைகளை, எடுத்து தன்னை சுற்றி போட வைத்தவன், அவளின் நெருக்கத்தில் நொருங்கி போனான். அவள் கழுத்தின் வாசத்தை நுகர்ந்து, கத்துமடலோடு இதழ்கள் கூச, 


“அமிர்தா, என மெல்லிய குரலில் அழைக்க, அவளால் பதில் கூற முடியவில்லை என்றாலும், “ஹ்ம்ம்” என்றாள் ஈனமான குரலில்.


“உனக்கு சம்மதமா? என்று அந்த உணர்வின் பிடியிலும் கூட அவள் சம்மதத்தை, அவளின் மனநிலையை அறிய முற்பட்டது அவளின் மீதான அவன் காதல்.


பட்டென்று அவள் விழிகள் மலர்ந்து, அவனை காண, அவனும் அந்நேரம் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான்.


எந்த மாதிரியான நேரத்தில், அத்தனை தாபம் இருந்த பொழுதும், தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் அவனது காதல் அவளை இன்னும் இன்னும் நெகிழ செய்ய, தயக்கத்துடன் பதிந்து இருந்த அவன் மீதிருந்த தன் கைகளின் அழுத்தத்தை கூட்டி, அவளை இறுக அணைத்து கொள்ள, அந்த அணைப்பே சொல்லியது அவளின் சம்மதத்தை ஆரவ்விற்கு. 


அதன் பின் என்ன? சீரான வேகத்தில் செல்லும் நதியை அணை போட்டு தடுக்கலாம், காட்டாற்று வெள்ளமாய் மாறிய பின்பு அணையெல்லாம் வெறும் காதிதம் தானே!! ஆரவ்வும் அது போல தானே!

அவளின் சம்மதம் வரை அவன் நதி தான், சம்மதம் கிடைத்த பின்பு அவனும் காட்டாற்று வெள்ளமே!! அவளை சுழற்றி சுருட்டி தன்னுள் அடக்கி கொண்டான்.


காணாமல் போய் கிடந்த காயும் நிலவினை அணைத்து, தாபங்களின் ஓசையினை ஒலிபரப்பி, கட்டிலை சிறை பிடித்து, முத்துக்களை மறைத்திருக்கும் கடலலையின் ஆடைகள் களைந்து, தடுமாறும் விரல்களை இணைத்து, காதலின் கனவுகளை விரித்து, கண் உறக்கத்தை துறந்து, கரை சேர்க்கும் காமத்தை கடந்து, இருவரின் உறவும் கலந்து, கரைந்து, உணர்ந்து, உணரப்பட்டு, என பெண்ணவளின் மென் சரால், ஆடவனின் கனமழையில் காணாமல் போயிற்று.


மேகங்களின் மோதலில் மழை பெய்வது போல, மழையின் துளிகள் மண்ணோடு கலப்பது போல, மலைமுகடுகளில் நதி பிறப்பது போல, அமைதியான நதி ஆர்ப்பட்டமான கடலுடன் காணாமல் போவது போல, ஆர்ப்பட்டமான கடலின் உள்ளே இருக்கும் நிசப்தமான ஆழத்தை போல, மொட்டிலிருந்து மலர் மலர்வது போல, மலரின் மடியில் தேனை உறிஞ்சும் வண்டு போல, அவளுடனான மோதலில் வியர்வை மழை பொழிந்து, பொழிந்த மழை இருவரின் உடலிலும் கலந்து, இருக்கும் நிலை உணர்ந்து பிறக்கும் வெட்கம், அவனின் அதிரடியில் காணாமல் கரைந்து, அவனின் வன்மையிலும் ஒரு மென்மை அவளை தாங்க, பெண்ணவளின் பூரணத்தில் ஆணவனின் ஆண்மை மலர, ஆணவனின் அண்மையில் பெண்ணவளின் பெண்மை பூத்து குலுங்கி மணம் வீசியது.


பெண்ணவளின் ரகசியங்களை அறிந்து கொள்ள, ஒருஇரவு, ஒருதனிமை, ஒரு கூடல், ஒரு தாபம் மட்டும் போதுமா என்ன? அதுவும் காதலின் ஊடே புணரும் கூடலில் புரிதலான காதலின் அழகில், இன்னும் நிறைய நிறைய இரவுகள் தேவை, தனிமைகள் தேவை, கூடல்கள் தேவை அல்லவோ!!


இன்னுமும்  நீண்ட அந்த இரவை, தனிமையை, காதலான கலவிக்கு உபயோகப்படுத்துவதில் என்ன தான் தவறு?!! மீண்டும் தொடர்ந்தது இருவரின் புரிதலான புணர்வு. 


முதலிருந்த தயக்கம், அடுத்தடுத்து குறையும் என்பதெல்லாம் அமிர்தாவிற்கு இல்லை போலும், மீண்டும் தயக்கம், நடுக்கம், பதற்றம், வெட்கம் என எல்லாமே அவளுள் பிரவாகம் எடுக்க, அத்தனையையும், குடைக்குள் அடைக்கும் மழை போல அவளை அடைத்து, அணைத்து, ஆதரித்து, அரவணைத்து இருந்தான் ஆரவ்.


ஒற்றை பார்வைக்கே பரிதவிக்கும் அவன் இதயம், அவள் மொத்த அழகையும் எப்படி தாங்கும்? தாங்கினான், கொண்டாடினான் கொடுத்து வாங்கினான்.


கூடல் முடிந்து, ஆசுவாசம் அடைந்து, அவனின் மார்பில் தஞ்சம் புகுந்து விழிகளை மூடி இளைப்பாறியவளை தனக்குள் புகுத்தி கொண்டு இன்புற்றான் ஆரவ்.


“அமிர்தா,” என மீண்டும் அதே மெல்லிய குரலில் அழைக்க, தற்பொழுதும் அவளுக்கு பேச்சு வரவில்லை, நாணம் இடைவந்து புகுந்து அவள் பேச்சை தடை செய்ய, தற்பொழுதும் “ஹ்ம்ம்” என்று முணங்கினாள் அமிர்தா.


“நான் ரொம்ப கஷ்டப்படுத்துட்டேனா?” என்று கேட்டதும், அவளோ வெட்கத்துடன்,


“என்ன? இப்படி கேட்கிறீங்க? எனக்கு கூச்சமாக இருக்கு” என அவள் முகம் பார்க்காமல் கூறியவளிடம், 


“பின்னே, உன்னை கேட்காமல்?!! என்ன மொத்த பாரத்தையும் தாங்குனது நீதானே!! எவ்வளவு தான் என்னை கண்ட்ரோல் பண்ணிக்கிட்டாலும், என்னையும் மீறி என் உணர்வுகள் வெளிவந்து உன்னை காயப்படுத்தி இருந்தா? அதான் கேட்கிறேன்”

என்று விளக்கம் கூறியவனை கண்டு காதல் பெருகியது அமிர்தாவிற்கு.


‘அதெல்லாம் எதுவுமில்லை, அந்த வலிகள் எல்லாம் எனக்கு சுகமான வலிகள் தான், எதுவும் என்னை வருத்தவில்லை’ என்பது போல் அவளோ அவன் வெற்று மார்பில் முத்தம் பதித்து தன் பதிலை செயலில் கூறினாள்.


அவனும் அவளை இறுக அணைத்துக் கொண்டு, 


“தூங்கு மா, ரொம்ப டையார்டா இருப்ப, ஏற்க்கனவே உடம்பு சரியில்லை உனக்கு, இதில் நான் வேற”

என்றவனின் கைநீட்டி வாய் பொத்தி, அவன் பேச்சை தடை செய்தாள்.


அவள் உள்ளங்கையில் இதழ் பதித்தவன், “சரி பேசல” என்றான்.


இருவரின் அருகாமையில், இருவரின் அதீத மனநிறைவில் தூக்கம் வராது இமைகளை மட்டும் மூடி இருந்தனர்.


சட்டென்று அவளை விட்டு ஆரவ் விலக, அமிர்தாவோ, 

அவன் விலகலில் அடித்து பிடித்து கொண்டு எழுந்தாள். ஆடைகளின்றி இருக்கும் நிலையில் போர்வையை எடுத்து முழுதாக தன்னை மறைத்து கொண்டவள்,


“என்னங்க? என்னாச்சு” என்றாள் பதற்றத்துடன்.


“ஒன்னுமில்லைங்க” என வழக்கம் போல் அவளின் மரியாதையான  அழைப்பிற்கு, பதில் மரியாதை கொடுத்தவன், அவள் காலருகே அமர்ந்து, அவள் கால்களை எடுத்து தன் மடியில் வைத்து கொண்டு கால்களை பிடித்து விட ஆரம்பிக்க, பதறி போனாள் அமிர்தா.


“என்னங்க என்ன பண்றீங்க? காலை விடுங்க” அவள் காலை இழுத்து கொள்ள முயல,


“ஷ்ஷ்ஷ்.., பேசாம அமைதியா தூங்குங்க நீங்க. எப்படியும் கால் வலிக்க செய்யும், நான் பிடிச்சு விடுறேன்”


என அவள் மறுக்க மறுக்க, விடாமல் கால்பிடித்து விட்டான் ஆரவ். அவன் உறங்காமல் அவளுக்கு உறங்க பிடிக்கவில்லை. அவளின் வலியை போக்காது அவனுக்கு உறக்கம் வரவில்லை.


மெல்ல அவள் விரல்களில் சொடக்கெடுத்தப்படி இருவரும் பேசி கொண்டிருந்தனர்.


உடல் சுகம் ஒருபுறம் இருந்தாலும், பேசி கொண்டே அவளுக்கு பக்குவமாய் பாதம் பிடித்து சொடக்கெடுக்கும் சுகம் அந்த சுகத்தை மிஞ்ச செய்து விட்டது அவனுக்கு.


கூடலுக்காக  செய்யும் பணிவிடை சுகமென்றால், கூடல் முடிந்து செய்யும் பணிவிடை சொர்க்கம் அல்லவா?!! எத்தனை ஆண் மகன்கள் கூடலுக்கு பின் மனைவியின் மனநிலையை அறிகின்றனர். அவனுக்கு மனைவியையும் புரிந்தது. அவளது வலியும் தெரிந்தது. சுகமான வலிகள் என்றாலும், அதுவும் வலிகளில் அடக்கம் தானே!! 


நல்ல கணவனாய், மனைவியை தாங்கும் ஆரவ்வை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் அமிர்தா.


“போதும்ங்க, வாங்க வந்து படுங்க”

என ஒருகட்டத்தில் அமிர்தா கெஞ்ச, அவனும், 


“வலி போயிடுச்சா? இல்லை எனக்காக சொல்றீங்களா? என்று கேட்டதும், அவனை அமிர்தா முறைத்து பார்க்க,


“ஓகே ஓகே, என் வீட்டமா சூடா ஆகுறாங்க. அமைதியா வந்து படுக்கிறது தான் எனக்கு நல்லது”


என வாய் பொத்தி நல்ல பிள்ளை போல அவன் வந்து அவளருகில் படுத்து கொள்ள, அவன் செய்கையில் பக்கென்று சிரித்து விட்டாள் அமிர்தா.


அவனும் சிரிப்புடன் அவளை அணைத்து கொள்ள, அவளும் வாகாக  அவன் அணைப்பில் அடங்கி கொண்டாள்.


விடியல் தெரியாத, அந்த நாளில் விடிந்தது தெரியாது விடியலை நோக்கி, அத்தனை நிறைவாக, அத்தனை மகிழ்வுடன், கணவன் மனைவியாய் வாழ்ந்த திருப்தியுடன் உறக்கத்தை தழுவினர் திரு ஆரவ்ஜெயந்தனும், திருமதி. ஆரவ்ஜெயந்தனும்.


காலநிலை காரணமாக, நேரமான பொழுதும் இருவரும் உறக்கத்தின் பிடியிலே தான் இருந்தனர். வெகு நேரம் கழித்து உறக்கம் கலைந்த அமிர்தா, அவன் வெற்றுடம்பின் மீது, தன் வெற்றுடம்பு புதைந்து இருப்பதை கண்டு வெட்கம் கொண்டவள், மெல்ல அவனை விட்டு விலக நினைக்க, அவனோ விடாது அவளை அணைத்திருந்தான்.


லேசாக உறக்கம் கலைந்தவன், மீண்டும் அவளை அணைத்து கொண்டு உறங்க முற்பட,


“ஏங்க, விடுங்க, விடிஞ்சுடுச்சு போல. ரொம்ப நேரமா தூங்கிட்டு இருக்கோம். வெளியே தப்பா நினைக்க போறாங்க”

என அவளிடமிருந்து விடுபட முயல,


“இதில் தப்பா நினைக்க என்ன இருக்கு? என் பொண்டாட்டி கூட நான் தூங்குறேன். யார் கேட்பா? தூக்கம் வருது தூங்கலாம் வா மா”

என மீண்டும் அவளை இழுத்து அணைத்திருந்தான் ஆரவ்


“ஐயோ, நான் சொல்றதே உங்களுக்கு புரியல. மாமா நாம வருவோம்னு நமக்காக சாப்பிடாமல் வெயிட் பண்ணுவாங்க. விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகுது போல. இந்த ஊரில் ஒன்னும் தெரியல வேற. இங்க உங்க கூட படம் பண்ண வந்தவங்க எல்லாரும் இருக்காங்க. இவ்வளவு நேரம் தூங்கி இருக்கோம், லேட்டா வெளியே போனா என்ன நினைப்பாங்க? எழுந்திரிங்க”

என்றதும்,  ஆரவ்வோ சிணுங்கி கொண்டே,


“தூக்கம் வருது மா. நேத்து நீ என்னை ஒரு வழி பண்ணிட்ட, இன்னைக்கு முழுக்க தூங்கினா தான் எனக்கு இருக்கிற டையார்ட் போகும்”

என்று கூறியதும், அமிர்தாவோ


“அப்படி என்ன பண்ணேன் நான்? என முறுக்கி கொண்டாள்.


“என்ன பண்ணுனியா? சொல்லவா?”


என அவன் ஆரம்பித்து கூற கூற, அவளுக்கோ குப்பென்று முகம் மட்டுமல்ல முழுமையும் சிவந்து விட்டது. காதுமடல் கூச, உடலெல்லாம் சிலிர்க்க, என அவளை வெட்கம் பிடுங்கி தின்றது, அவன் கூறிய விஷயங்களால்.


“போதும்.., போதும்,” என அவள் அவன் வாய் பொத்திய போதும் கூட விடாது, அவள் கைகளை இறக்கி விட்டு விட்டு அவன் கூறி கொண்டே இருந்தான்.


“நீங்க பேசிட்டே இருங்க, நான் குளிக்க போறேன்” என்றவள் அவன் முகம் பார்க்காது போர்வையை எடுத்து போர்த்தி கொண்டு குளியலறை நோக்கி ஓடி, ஒளிந்து கொள்ள, ஆரவ்வோ விடாது,


“இரு அமிர்தா, நானும் வரேன். சேர்ந்தே குளிக்கலாம்” என்றவன் அவள் குளியலறை கதவை சாற்றும் முன், உள்ளே நுழைந்து இருந்தான்.


இருவரும் குளித்து முடித்து வெளியே வர,  அத்தனை நேரம் எடுத்தது. அங்கிருந்த கண்ணாடிகளுக்கும் கண் கூசி தான் இருக்கும், இருவரின் லீலைகளால்.


வெட்கம் சூழ்ந்த முகத்துடன் வெளியே வந்தவள் அவனை நிமிர்ந்து பார்க்க திராணி இல்லாது,


“நீங்க வெளியே போங்க, நான் ட்ரெஸ் மாத்திட்டு வரேன்” என்று கூறியதும் வாய்விட்டு சிரித்தவன்,


“எதே?!! வெளியே போகவா? என்கிட்ட இருந்து எதை மறைக்க போற? என்னமோ நான் எதையும் பார்க்காத மாதிரி தான். இங்கேயே தான் இருப்பேன். என் முன்னாடியே மாத்து”

என்றவன் சட்டமாக அமர்ந்து கொள்ள, 


“ஏங்க, எனக்கு கூச்சமா இருக்கு. நீங்க போங்க நான் சீக்கிரம் மாத்திட்டு வரேன்” என்றவளை கண்டு,


“சரி, வெளியேலாம் போக முடியாது, பால்கனியில் இருக்கேன். மாத்திட்டு கூப்பிடு”


என்று அவளின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து பால்கனியில் வந்து நின்று கொண்டான்.


அவளை பித்தாக்கும் மந்திரகோல் அவனது இந்த பண்பு தானே!! மீண்டும் மீண்டும் பித்தாகி போனாள் அவள் மீதான அவன் காதலினால்!!


இருவரும் தயாராகி முடிக்க, ஆரவ்வோ,


“போலாமா அமிர்தா” என்று கேட்க, அவளும் புன்னகையுடன் “போலாம்ங்க” என்று அவனுடன் நடந்தாள்.


கதவை திறக்க அவன் தாழ்ப்பாளில் கைவைக்கும் சமயம், அமிர்தாவோ


“ஒரு நிமிஷம்” என்றவள் அவன் என்னவென்று கேட்க திரும்பும் முன், அவன் கன்னத்தில் ஒரு முத்தத்தை நச்சென்று வழங்கி இருந்தாள்.


அதில் ஆரவ் அவளை ஆச்சரியத்துடன் பார்க்க, அவளும் அவனை பார்த்து மலர்ந்து புன்னகைத்தாள் அத்தனை காதலாக!!


முப்பொழுதும்,

இப்பொழுதும்,

எப்பொழுதும்,

பேரன்புகளின் பிறப்பிடமாய்,

கனவுகளில் கரைந்து போகாது,

எனதுயிராய்

என்னுடனே

இறுதிவரை

இருந்துவிடேன்..



பிடிக்கும்…
































Comments